ICTT NVQ Level-03 தொழிற்பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான மதிப்பீடு
புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் ICTT NVQ Level-03 தொழிற்பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த 09 பயிலுனர்களுக்கான மதிப்பீடானது வளவாளர்களாகிய Mr.S.Husain & Mr.S.Nagaratnam அவர்களினால் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது.
அந்த வகையில் ICTT NVQ Level-03 மதிப்பீட்டிற்கு தோற்றிய 9 பயிலுனர்களும் ICT NVQ Level-03 தேர்ச்சியினை பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வாறான அரச அங்கீகாரம் பெற்ற பயிற்சிநெறியினை வழங்குதன் மூலம் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லாரியானது இளைஞர்களை தமது திறன்களை அடையாளங்கண்டு அவர்களினை சமூகத்தின் மத்தியில் வெற்றியாளர்களாக மாற்றுவதில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பெரும்பங்காற்றி வருகின்றமை குறிப்பிடதக்கவிடமாகும்.
