முதல் முறையாக தொழில்முறை அல்லாத குழுவினர்கள் விண்வெளி நடையில்(spacewalk) ஈடுபட்டுள்ளனர். முதல் முறையாக தொழில்முறை அல்லாத பில்லியனர் மற்றும் பொறியாளர் குழுவினர் விண்வெளியில் ஒரு ஆபத்தான செயல்பாட்டை – விண்வெளி நடையில் ஈடுபட்டனர்.
பில்லினர் ஜாரெட் ஐசக்மேன்(Jared Isaacman) மற்றும் பொறியாளர் சாரா கில்லிஸ்(Sarah Gillis) விண்வெளியில் SpaceX விண்கலத்திலிருந்து வெளியேறும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உடைகளை அணிந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
விண்கலத்தில் இருந்து வெளியேறும் ஐசக்மேன் “வீட்டிற்கு திரும்பியதும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது, ஆனால் இங்கிருந்து பூமி ஒரு சரியான உலகமாக தெரிகிறது” என தெரிவிக்கிறார்.
இந்த விண்வெளி நடையானது ஐசக்மேனால் வணிக ரீதியாக நிதியளிக்கப்பட்டுள்ளது, இதற்கு முன்னதாக அரசு நிதியுள்ள விண்வெளி நிறுவனங்களின் விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளி நடையில் ஈடுபட்டிருந்தனர். நேரடியாக ஒளிபரப்பப்பட்ட படங்கள், இரு குழுவினரும் வெள்ளை டிராகன் கேப்ஸ்யூலிலிருந்து வெளியேறி, கீழே உள்ள நீல பூமிக்கு மேலே 435 மைல் (700 கி மீ) தொலைவில் மிதப்பதை காட்டின. விண்கலத்திலிருந்து திரு. ஐசக்மேன் முதலில் வெளியேறி, தனது உடலை சோதிக்க தனது கால்கள், கைகள் மற்றும் கால்களை அசைக்கிறார்.