நேற்று ஆயிரக் கணக்களன மக்கள் Microsoft 365 ஐ அணுகுவதில் சிக்கலடைந்துள்ளனர். செயலிழப்பிற்கு பதிலளிக்கும் விதமாகஇ மைக்ரோசாஃப்ட் 365 status X கணக்கிலிருந்து ஒரு பதிவு இடப்பட்டது. அதில் "பயனர்கள் பல மைக்ரோசாஃப்ட் 365 சேவைகளை அணுக முடியாத சிக்கலை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். மேலும் விவரங்கள் மற்றும் கூடுதல் புதுப்பிப்புகளுக்கு நிர்வாக மையத்தில் MO888473 ஐப் பார்க்கவும்." என்று பதிவிட்டிருந்தது.
மேற்கூறிய MO888473 விழிப்பூட்டலுக்கான புதுப்பிப்பில், ISP உடன் பணிபுரிவதன் மூலம்இ ISPயின் நிர்வகிக்கப்பட்ட சூழலில் ஏற்பட்ட மாற்றம் Microsoft Teams, Exchange Online மற்றும் SharePoint Online போன்ற சேவைகளை பாதித்துள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது என்று Microsoft கூறியது. ISP மாற்றத்தை மாற்றிய பிறகு, பாதிக்கப்பட்ட தளங்கள் மற்றும் சேவைகள் மீளத் தொடங்கின. அவை அனைத்தும் இப்போது இயங்குகின்றன.
Microsoft 365க்கான Health Status page இன் படி மைக்ரோசாப்ட் 365 status X கணக்கு பாதிப்பு சரிசெய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.
Posted inசெய்திகள் தொழில்நுட்பம்