150000 தாண்டியது சுற்றுலாப் பயணிகளின் வருகை
செப்டெம்பர் மாதத்தில் மொத்தம் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இந்தியாவிலிருந்து மொத்தம் 49.697 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது 31.3% ஆகும்.
மேலும் செப்டெம்பர் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,752 பேரும் சீனாவிலிருந்து 10,527 பேரும், ஜெர்மனியிலிருந்து 9,344 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 9,105 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில் 2025ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,725,494 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுள் 375,292 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 161,893 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், 122,144 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 106,988 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Tourist Arrivals in Sri Lanka Exceed 150,000 in September
According to data released by the Sri Lanka Tourism Development Authority (SLTDA), a total of 158,971 tourists visited the country in September.
Out of this, 49,697 visitors were from India, accounting for 31.3% of the arrivals.
In addition, during the same month:
- 10,752 tourists arrived from the United Kingdom
- 10,527 tourists from China
- 9,344 tourists from Germany
- 9,105 tourists from Australia
Meanwhile, the total number of tourist arrivals in 2025 so far has reached 1,725,494.
Among them:
- 375,292 were from India
- 161,893 were from the United Kingdom
- 122,144 were from Russia
- 106,988 were from Germany, according to SLTDA.