பிளாஸ்டிக் போத்தல்களில் SLS சான்றிதழ் கட்டாயம்
பிளாஸ்டிக் போத்தல்களில் SLS சான்றிதழ் கட்டாயம்

பிளாஸ்டிக் போத்தல்களில் SLS சான்றிதழ் கட்டாயம்

பிளாஸ்டிக் போத்தல்களில் SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழை, மீண்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் போத்தல்கள் (reusable plastic bottles) மற்றும் பொலிமர் அடிப்படையிலான பாலூட்டும் போத்தல்களுக்கு (polymer-based feeding bottles) நுகர்வோர் விவகார அதிகாரசபை கட்டாயமாக்கியுள்ளது.

ஒக்டோபர் 01 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, தேவையான SLS தரங்களுக்கு இணங்காமல், உத்தியோகபூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காட்டாமல், உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அத்தகைய போத்தல்களை உற்பத்தி, இறக்குமதி, சேமித்து அல்லது விற்பனை செய்பவர்கள் இந்த சட்டத்திற்கு உட்பட்டவர்கள் ஆவர்.

இந்த உத்தரவு இரண்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது.

அதாவது, குடிநீர் திரவங்களை எடுத்துச் செல்வதற்கான மறுபயன்பாட்டு பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் பொருட்களால் செய்யப்பட்ட குழந்தை பால் போத்தல்களுக்கு தனி விவரக்குறிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துதல், குறைந்த தரம் வாய்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் சந்தையில் நுழைவதைத் தடுப்பது மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

SLS Certification Mandatory for Plastic Bottles

From April 1, 2026, the Consumer Affairs Authority has made it mandatory for all reusable plastic bottles and polymer-based feeding bottles to carry the certification of the Sri Lanka Standards Institution (SLS).

According to the special gazette notification issued on October 1, any manufacturer, importer, distributor, or seller who produces, imports, stores, or sells such bottles without meeting the required SLS standards and without displaying the official certification mark will be subject to this law.

This directive covers two main categories:

  • Reusable plastic bottles intended for carrying drinking liquids.
  • Baby feeding bottles made of polymer materials.

The objective of this measure is to strengthen consumer protection, prevent low-quality plastic products from entering the market, and ensure compliance with internationally recognized standards.