கட்டுநாயக்க - கொழும்பு இடையே விமானப் பயணம் ஆரம்பம்
கட்டுநாயக்க - கொழும்பு இடையே விமானப் பயணம் ஆரம்பம்

கட்டுநாயக்க – கொழும்பு இடையே விமானப் பயணம் ஆரம்பம்

கட்டுநாயக்க – கொழும்பு இடையே விமானப் பயணம் ஆரம்பம்

பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் (water Aerodrome) பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பியாகவும், உள்நாட்டு விமானங்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் மற்றொரு படியாகவும் இந்த கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் நீர் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் சினமன் எயார் லைன்ஸ், இந்த கொழும்பு – கட்டுநாயக்க விமானப் பயணங்களை மேற்கொள்ளும். இந்த புதிய விமான சேவையின் ஊடாக, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் குறுகிய காலத்தில் கொழும்பு நகரத்திற்கு விரைவாகவும் வசதியாகவும் பயணிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Flight Service Begins Between Katunayake and Colombo

A new flight service between Katunayake and Colombo, using the Beira Lake as a water aerodrome, was launched today (Friday) under the leadership of Minister of Transport, Highways, Ports, and Civil Aviation, Bimal Ratnayake.

This Colombo–Katunayake air service has been introduced both as part of a project to promote domestic aviation and as a step towards developing the tourism sector.

Currently, Cinnamon Air Lines, which operates water flights in Sri Lanka, will carry out these Colombo–Katunayake flights. Through this new service, tourists and business travelers arriving at Katunayake Airport will be able to travel to Colombo city quickly and conveniently within a short time.