“Elettrica" வுக்கான தொழில்நுட்ப விவரங்களை வெளியிட்ட Ferrari
 “Elettrica" வுக்கான தொழில்நுட்ப விவரங்களை வெளியிட்ட Ferrari

 “Elettrica” வுக்கான தொழில்நுட்ப விவரங்களை வெளியிட்ட Ferrari

 “Elettrica” வுக்கான தொழில்நுட்ப விவரங்களை வெளியிட்ட Ferrari

இத்தாலிய ஆடம்பர விளையாட்டு வாகன உற்பத்தியாளர் ஃபெராரி (Ferrari), தனது முதல் முழுமையான மின்சார சிற்றூந்து “Elettrica” வுக்கான தொழில்நுட்ப விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Elettrica–வின் சாசிஸ் (chassis), பேட்டரி, மற்றும் மின்சார இயந்திரங்கள் அனைத்தும் ஃபெராரியின் புதிய “e-building” தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டவை.

இது முழுக்க முழுக்க ஃபெராரியின் சொந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த சிற்றூந்து 530 கிலோமீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மின்மோட்டார் மற்றும் இயந்திர அதிர்வுகளைப் பயன்படுத்தி உண்மையான “ஃபெராரி சவுண்ட் அனுபவம்” உருவாக்கப்பட்டுள்ளது.

இது செயற்கை (fake) ஒலி அல்ல, உண்மையான இயந்திர ஒலியின் மின்சார பிரதிபலிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்றூந்தின் விலை குறைந்தது 500,000 யூரோக்கள் ($580,400) இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சிற்றூந்தின் முழுமையான வடிவம் மற்றும் வடிவமைப்பு 2026ஆம் ஆண்டில் வெளியிடப்படும்.

அதே ஆண்டின் இறுதியில் வாகனங்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Ferrari releases technical details for “Elettrica”

Italian luxury sports car manufacturer Ferrari has officially revealed the technical specifications of its first fully electric supercar, “Elettrica.”

The chassis, battery, and electric motors of the Elettrica have all been developed at Ferrari’s new “e-building” factory.

This supercar has been created entirely using Ferrari’s in-house technology. It is said to offer a driving range of over 530 kilometers.

Ferrari has also engineered a unique “Ferrari sound experience” by using motor and mechanical vibrations to recreate the authentic Ferrari engine sound.

The company emphasizes that this is not a fake or artificial sound, but an electric reproduction of real engine acoustics.

According to foreign media reports, the Elettrica will be priced at a minimum of €500,000 ($580,400).

The complete design and model of this supercar will be unveiled in 2026, with sales expected to begin later that year.