மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமுமில்லை
இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக,
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, மின்சாரக் கட்டணத் திருத்தம் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்தார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்று அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
No Change in Electricity Tariffs
The Public Utilities Commission of Sri Lanka (PUCSL) has announced that there will be no changes to the electricity tariffs for the third quarter of 2025, which comes into effect from midnight today (Tuesday).
Accordingly, the electricity rates will remain unchanged for the next three months, said Professor K.P.L. Chandralal, Chairman of the PUCSL.
He made this announcement while addressing a special media briefing held by the Public Utilities Commission of Sri Lanka.