சிறுவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை அறிமுகப்படுத்தும் நிகழ்வு
சிறார்கள் மத்தியில் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்குடன் கணணிகள் மற்றும் தொழில்நுட்பகூடங்களை அறிமுகம் செய்யும் நோக்கிலான செயற்திட்டம் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மற்றும் சீயோன் child development இணைந்து 10.10.2025 அன்று மேற்கொண்டது.
கிராமப்புரங்களில் உள்ள சிறுவர்களின் IT அறிவு தொடர்பான் ஆர்வத்தை தூண்டும் நோக்குடன் மரப்பாலம் கிராமத்தை சேர்ந்த 30 சிறுவர்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு அழைத்துவரப்பட்டு இங்குள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் காண்பிக்கப்பட்டதுடன் அது தொடர்பிலான தெளிவுபடுத்தல்கள் விவேகாநந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்களால் வழங்கப்பட்டது.
மேலும் குறிப்பாக எதிர்காலத்தில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது மற்றும் சீயோன் child development இணைந்து சிறுவர்களுக்கான தொழில்நுட்ப அறிவு தொடர்பான விளிபுணர்வுகளை வழங்கவுள்ளதுடன் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் எதிர்காலத்தில் சிறுவர்களுக்கான தொழில்நுட்ப அறிவை பெற்றுகொள்ள கூடிய பயிற்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்லி அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் மரப்பாலத்தை சேர்ந்த சிறுவர்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு வருகை தந்ததுடன் இதன்போது 30 சிறுவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் சீயோன் child development ஆசிரியர்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Event to Introduce Technology Knowledge to Children
With the aim of enhancing technological knowledge among children, a special program to introduce computers and technology labs was organized jointly by Vivekananda College of Technology and Zion Child Development on October 10, 2025.
To encourage interest in IT education among children from rural areas, about 30 children from the Marapalam village were brought to Vivekananda College of Technology, where they were given a guided tour of the college’s technology laboratories and facilities. The college’s resource persons provided detailed explanations and demonstrations related to various aspects of modern technology.
Furthermore, it was announced that in the future, Vivekananda College of Technology, together with Zion Child Development, will continue to conduct awareness programs on technology for children. Plans are also underway to implement practical training sessions at the college to help children gain hands-on experience in technology and IT-related skills.
The event was coordinated by Ms. Asli, and attended by 30 children from Marapalam village, their parents, teachers from Zion Child Development, and resource persons from Vivekananda College of Technology.