IRD உங்கள் வருமானத்தை கண்காணிக்கும் முக்கிய வழிகள்-பகுதி 2
உள்நாட்டு வருவாய் திணைக்களம் (IRD) உங்கள் வருமானத்தை அறிய ஒரு வலுவான தரவு ஒப்பீட்டு அமைப்பை பயன்படுத்துகிறது. இது ஒருவரின் அறிவிக்கப்பட்ட வருமானம் மற்றும் வாழ்க்கை தரம் இணக்கமா என்பதை சரிபார்க்க உதவுகிறது.
🏛️ பதிவு ஆணையாளர் திணைக்களம் (Registrar General’s Department)
IRD இங்கு பெறும் முக்கிய தகவல்கள்
1.நிலம் மற்றும் சொத்து பரிமாற்றங்கள்
2.வாகனங்கள் மற்றும் சொத்து பதிவு விவரங்கள்
3.பிறப்பு, திருமணம், விவாகரத்து, சொத்து வாரிசு பதிவுகள்
ஒருவர் பெயரில் உள்ள சொத்து அளவையும், வாழ்வியல் நிலைமையையும் IRD கண்காணிக்க முடியும். உதாரணமாக, ஒருவர் பல வீடுகளை வாங்கியிருந்தால், ஆனால் குறைந்த வருமானம் அறிவித்திருந்தால் IRD உடனே கவனத்தில் எடுக்கும்.
🏢 நிறுவனப் பதிவு ஆணையம் (ROC)
IRD பெறும் தகவல்கள்:
1.புதிய நிறுவன பதிவு விவரங்கள்
2.இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் பெயர்கள்
3.வருடாந்திர அறிக்கைகள் மற்றும் கணக்குகள்
ஒருவர் நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கிறாரா, அதில் சம்பாதிக்கும் வருமானம் எப்படி உள்ளது என்பதைக் கண்காணிக்க IRD உதவுகிறது.
🚗 வாகன போக்குவரத்து திணைக்களம் (DMT)
IRD பெறும் தகவல்கள்:
1.புதிய வாகனப் பதிவுகள்
2.உரிமையாளர் மாற்றங்கள்
3.வாகன இறக்குமதி அனுமதிகள்
ஒருவர் உயர்ந்த மதிப்புள்ள வாகனங்களை வாங்கினால், அவரின் அறிவிக்கப்பட்ட வருமானத்துடன் ஒப்பிட்டு IRD பார்க்க முடியும்.
📑 அரசு ஒப்பந்த அலுவலகங்கள் (Government Contracts)
IRD பெறும் தகவல்கள்:
1.அரசு திட்டங்களின் ஒப்பந்த விவரங்கள்
2.ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஆலோசகர்கள் பெயர்கள்
3.கொடுக்கப்பட்ட பணம் மற்றும் பரிமாற்றங்கள்
அரசுத் திட்டங்களில் பண வருவாய் பெறுபவர்கள் IRD கவனத்தில் அடையாளம் காணப்படுவர்.
🏦 நிதி நிறுவனங்கள் (Banks & Financial Institutions)
IRD பெறும் முக்கிய தகவல்கள்:
1.வங்கி கணக்குகள் மற்றும் பரிமாற்றங்கள்
2.பெரிய வைப்பு / பணப் பின்வாங்கல்கள்
3.கடன், லீசிங், முதலீட்டுச் தகவல்கள்
ஒருவரின் வங்கி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் அவரின் அறிவிக்கப்பட்ட வருமானத்துடன் பொருந்துகிறதா என்று IRD பார்ப்பதில் உதவும்.
📈 கொழும்பு பங்குச் சந்தை (CSE)
IRD பெறும் தகவல்கள்:
1.CDS கணக்குகள்
2.பங்கு வாங்கல்/விற்பனை மற்றும் லாபங்கள்
3.IPO மற்றும் உரிமைப் பங்கு விவரங்கள்
பங்குச் சந்தையில் வரும் முதலீட்டு வருமானமும் IRD கண்காணிக்கும்.
IRD உங்கள் சொத்துகள், வாகனங்கள், வங்கி / முதலீட்டு கணக்குகள் மற்றும் பங்குச் சந்தை நடவடிக்கைகள் அனைத்தையும் ஒப்பிட்டு உங்கள் அறிவிக்கப்பட்ட வருமானம் சரியானதா எனச் சோதிக்கிறது. இது வரி தவிர்ப்புகளை தடுக்கும் ஒரு நவீன தரவு ஒப்பீட்டு (Cross Verification) முறையாகும்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
How the Inland Revenue Department (IRD) Tracks Your Income – Part 2
The Inland Revenue Department (IRD) uses a powerful data cross-verification system to analyze and verify individuals’ declared income against their lifestyle and financial activities. This helps identify whether a person’s reported income matches their actual standard of living.
🏛️ Registrar General’s Department
Key data received by IRD:
- Land and property transactions
- Vehicle and property registration details
- Birth, marriage, divorce, and inheritance records
Through this data, the IRD can monitor a person’s asset ownership and lifestyle.
For example, if someone owns multiple houses but reports a low income, IRD will take note of the discrepancy immediately.
🏢 Registrar of Companies (ROC)
Data shared with IRD:
- New company registrations
- Names of directors and shareholders
- Annual reports and financial statements
This helps IRD track whether an individual is a shareholder or director in any company and to verify the income earned from such business activities.
🚗 Department of Motor Traffic (DMT)
Data provided to IRD:
- New vehicle registrations
- Ownership transfers
- Vehicle import permits
If an individual purchases high-value vehicles, IRD compares these expenses with their declared income to ensure consistency.
📑 Government Contract Offices
Data received by IRD:
- Details of government project contracts
- Names of contractors and consultants
- Payment and transaction records
Those who earn money through government projects are also tracked to ensure their reported income matches actual receipts.
🏦 Banks & Financial Institutions
Key financial data shared with IRD:
- Bank accounts and transactions
- Large deposits or withdrawals
- Loan, leasing, and investment details
The IRD uses this information to verify whether an individual’s banking and investment activities align with their declared income.
📈 Colombo Stock Exchange (CSE)
Data received by IRD:
- CDS (Central Depository System) account details
- Share purchases, sales, and profits
- IPO and rights issue information
The IRD monitors stock market investments and capital gains as part of income verification.
🔍 In summary, the IRD compares your assets, vehicles, bank and investment accounts, and stock market activities with your declared income to verify its accuracy. This modern data cross-verification system helps prevent tax evasion and ensures transparency in income reporting.

