விவேகானந்த பூங்காவிற்று விஜயம் செய்தார் சுவாமி அபவர்கானந்தஜி மகாராஜ்
விவேகானந்த பூங்காவிற்று விஜயம் செய்தார் சுவாமி அபவர்கானந்தஜி மகாராஜ்

விவேகானந்த பூங்காவிற்கு விஜயம் செய்தார் சுவாமி அபவர்கானந்தஜி மகாராஜ்

விவேகானந்த பூங்காவிற்று விஜயம் செய்தார் சுவாமி அபவர்கானந்தஜி மகாராஜ்

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்தியா மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இருந்து வருகைதந்த ராமகிருஸ்ண விஜயம் சஞ்சிகையின் நூலாசிரியர் ஶ்ரீமத் சுவாமி அபவர்கானந்தஜி மகாராஜ் அவர்கள் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், விவேகானந்தரின் எண்ணகருவில் மட்டக்களப்பில் சமூக நலன்புரி அமைப்பால் உருவாக்கப்பட்ட விவேகானந்த பூங்காவை சுவாமி அபவர்கானந்தஜி மகாராஜ் 23.10.2025 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்துடன், சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் தெய்வ மூவரின் (ஸ்ரீ ராமகிருஷ்ணர், தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர்) பீடத்திற்கு சுவாமி அபவர்கானந்தஜி மகாராஜ் அவர்களால் பூஜைகள் செய்யப்பட்டது.

இதன்போது சுவாமி அபவர்கானந்தஜி மகாராஜ் அவர்களால் சிறப்பு சொற்பொழிவாற்றப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வில் சமூக நலன்புரி அமைப்பின் இணைப்பாளர், பணியாளர்கள் பூங்காவின் பராமரிப்பாளர்கள், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Swami Apavarganandaji Maharaj Visits Vivekananda Park

In celebration of the centenary of the Ramakrishna Mission in Batticaloa, Swami Apavarganandaji Maharaj, the editor of the Ramakrishna Vijaya journal from Sri Ramakrishna Math, Mylapore, India, visited Batticaloa.

During his visit, on 23.10.2025, Swami Apavarganandaji Maharaj personally viewed the Vivekananda Park, which was created by the social welfare organization in Batticaloa.

He also performed poojas at the altar of the Holy TrioSri Ramakrishna, Holy Mother Sri Sarada Devi, and Swami Vivekananda—at the Swami Vivekananda House.

During this occasion, Swami Apavarganandaji Maharaj delivered a special discourse.

The event was attended by several people, including coordinators and staff of the social welfare organization, park caretakers, and staff from Vivekananda Institute of Technology.