தீவிரமடையும் ‘மெலிஸா’ சூறாவளி
வரலாற்றில் சக்திவாய்ந்த சூறாவளிகளில் ஒன்றான மெலிஸா சூறாவளி, ஹெயிட்டி, டொமினிக் குடியரசு மற்றும் ஜமைக்கா போன்ற நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன், மெலிஸா சூறாவளியால் தற்போது 125 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, மெலிஸா சூறாவளி தற்போது ஜமைக்காவின் வடக்கு கடற்கரையில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜமைக்காவிலிருந்து விலகி, கிழக்கு கியூபாவை நோக்கி நகரும் மெலிஸா சூறாவளி அடுத்த சில மணி நேரங்களில் மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மெலிஸா சூறாவளியால், தென்மேற்கு ஜமைக்காவில் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, ஜமைக்கா, ஹெயிட்டி மற்றும் டொமினிக் குடியரசில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், 1951 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்லி சூறாவளி மற்றும் 1988 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கில்பர்ட் சூறாவளி ஆகியவற்றை விட மெலிசா சூறாவளி மிகச் சக்தி வாய்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Intensifying ‘Melissa’ Hurricane
One of the most powerful hurricanes in history, Hurricane Melissa, is causing severe destruction in Haiti, the Dominican Republic, and Jamaica.
According to reports from local media, winds are currently blowing at speeds of up to 125 km/h due to the hurricane.
At present, Hurricane Melissa is centered off the northern coast of Jamaica.
Officials have warned that the storm is moving away from Jamaica toward eastern Cuba and is expected to intensify further in the coming hours.
Meanwhile, reports indicate that homes, hospitals, and schools in southwestern Jamaica have sustained heavy damage due to the hurricane.
So far, seven people have lost their lives in Jamaica, Haiti, and the Dominican Republic.
It is also reported that Hurricane Melissa is stronger than Hurricane Charlie (1951) and Hurricane Gilbert (1988), making it one of the most powerful storms in history.

