Empowering Village Transformation
Empowering Village Transformation

கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்

“கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” Empowering Village Transformation என்னும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தில் உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்களிற்கான மாதாந்த உதவித்திட்டம், அடிப்படைக் கணிணி வகுப்புகள், அறநெறிக்கான அனுசரணை, வாழ்வியல் பயிற்சி செயலமர்வுகள் என விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், மாவிலங்கத்துறை கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆங்கில மற்றும் சிங்கள வகுப்புக்களை மேற்பார்வை செய்வதற்கான களவிஜயம் எமது குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதோடு மாவிலங்கத்துறை சித்தி விநாயகர் ஆலய செயலாளர் அவர்களின் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் ஆங்கில மற்றும் சிங்கள வகுப்புக்களில் பயிலும் மாணவர்களுக்கான மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கள மொழி பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதிருந்த நிலையில் தற்போது வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் இயலுமாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்ததோடு பாடசாலையிலும் நடாத்தப்படும் தவணைப் பரீட்சைகளிலும் ஆங்கில பாடத்தில் சிறப்பான புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதாக மாணவர்களின் பின்னூட்டல் அமைந்தது.

இது மாத்திரம் இன்றி சாதாரண தரத்தில் ஆங்கில பாடநெறியில் சித்தியடைய முடியாத நிலையில் இருந்த மாணவர்கள் கூட தற்போது நல்ல பெறுபேறுகளை பெறும் நிலைக்கு முன்னேறியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Empowering Village Transformation
Empowering Village Transformation
Empowering Village Transformation

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Empowering Village Transformation

Under the theme “Empowering Village Transformation,” the Vivekananda Community Foundation has been carrying out various initiatives in the selected village of Mavilangathurai. These include a monthly scholarship program for academically talented students, basic computer training classes, moral education support, and life skills development workshops.

As part of these efforts, a field visit was conducted by our team to monitor the ongoing English and Sinhala language classes in the Mavilangathurai village. The visit coincided with an event organized under the leadership of the Secretary of the Mavilangathurai Sithi Vinayagar Temple, during which assessments were conducted for students attending the English and Sinhala classes.

Students expressed that, despite having no prior knowledge of the Sinhala language, they are now able to read and write, which they found highly beneficial. They also shared that they are now able to achieve better scores in English during their regular school term examinations.

Furthermore, students who previously struggled to pass the English subject at the Ordinary Level have now shown significant improvement and are progressing towards achieving better results.