இன்றைய இலங்கையின் இளைஞர்கள் புத்துணர்வும் தொழில்நுட்ப Youth Challenges and Employment திறனும் கனவுகளும் நிறைந்த ஒரு தலைமுறை. ஆனால், அந்த கனவுகளை நனவாக்குவதற்கான பாதை எளிதாக இல்லை… எனவே இது பற்றிய எனது அனுபவமும் ஆய்வும் கலந்ததே இந்த கட்டுரை.
🔹 தேசிய நிலை – எண்ணிக்கைகள் எச்சரிக்கும் உண்மை
Department of Census & Statistics (DCS) மற்றும் World Bank தரவுகளின்படி:
- மொத்த வேலை இல்லாமை சுமார் 4% மட்டுமே இருந்தாலும்,
- இளைஞர்கள் (15–24 வயது) மத்தியில் வேலை இல்லாமை 22% – 26% வரை உயர்வாக காணப்படுகிறது.
- குறிப்பாக பெண் இந்த விகிதம் இன்னும் அதிகம்.
- நாட்டின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி இளைஞர்கள் (27%) எந்த கல்வி, வேலை, அல்லது பயிற்சியிலும் ஈடுபடாமல் (Non Education Employment Training – NEET) உள்ளனர்.
👉 அதாவது — கல்வி முடிந்த பிறகு “அடுத்த படி என்ன?” என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் நிற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று நம் சமூகத்தின் நடுவில் உள்ளனர்.
🔹 கிழக்கு மாகாணத்தின் முகம் – திறன் இருக்கிறது, வாய்ப்பு குறைவு
Batticaloa, Ampara, Trincomalee ஆகிய மாவட்டங்களில் பல இளைஞர்கள் தொழில்நுட்ப கல்வி, A/L, Degree முடித்தும் வேலை வாய்ப்பு இல்லாமல் போராடுகின்றனர்.
அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய தடைகள்:
- ஆங்கிலம் மற்றும் ICT திறன்களில் இடைவெளி
- தொடர்ச்சியான ஒரு வேலையினை செய்வதிலோ அல்லது அனுபவத்தினை பெறுவதிலோ ஆர்வம் காட்டாமை
- தொழில்சார் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு தேவைகளுக்கு இடையிலான பொருத்தமின்மை
- அரச வேலையினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மனநிலை
- மனஅழுத்தம், குடும்பப் பிணைப்பு, சமூக எதிர்பார்ப்பு ஆகியவற்றால் உருவாகும் மனநிலை சோர்வு
- விளைவுகள் அல்லது பலன் (வேலை, சம்பளம், பதவியுயர்வு) உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற மனநிலை
இது தான் ஒரு புதிய சமூகச் சவாலை உருவாக்குகிறது — போதைப் பொருள் பாவனை.
🔹 வேலை இல்லாமை மற்றும் போதைப் பாதிப்பு – மறைந்த உறவு
வேலை இல்லாமையால் ஏற்படும் மனஅழுத்தம், ஏமாற்றம், வாழ்க்கையில் நம்பிக்கை இழப்பு — இதனால் சில இளைஞர்கள் “மறந்து விடும் வழி” என மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவனைக்குத் தள்ளப்படுகின்றனர்.
National Dangerous Drugs Control Board (NDDCB) தரவின்படி:
2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட போதைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஹெரோயின், கஞ்சா, மெத்தாம்பெட்டமின் (ஐஸ்) போன்றவற்றில் ஈடுபடும் பெரும்பாலானோர் 15–30 வயதிற்குள் உள்ள இளைஞர்களே.
👉 இதன் மூல காரணிகளில் ஒன்று — வேலை இல்லாமை மற்றும் வாழ்க்கை நோக்கமின்மை.
🔹 உண்மையான காட்சிகள் (கிழக்கு மாகாணம் சார்ந்த எடுத்துக்காட்டுகள்)
🧩 Case A – Batticaloa
டிப்ளோமா முடித்த இளைஞன், 10 மாதங்களாக வேலை இல்லாமல் NEET நிலையில் இருந்தார். நண்பர்களின் அழுத்தத்தில் “party pills” எனும் சின்ன ட்ரக் பாவனை தொடங்கினார். அதன் பின்னர் போதைபாவனைக்கு அடிமையாகி மனஅழுத்தம், சமூக விலகல் வாழ்க்கை நம்பிக்கை குறைவு என்கின்ற நிலைக்கு தள்ளப்பாட்டார்.
🧩 Case B – Trincomalee
தொழில்நுட்ப பயிற்சி இடைநிறுத்தம், குடும்பப் பிரச்சனை, நண்பர்களுடன் புகை கஞ்சா சிறு அளவு விற்பனை. பின்னர் போலீஸ் கைது, மறுவாழ்வு மைய அனுப்பல்.
இவை கதைகள் அல்ல.
இவை நம் சமூகத்தில் ஒளிந்திருக்கும் ஒரு சமூகப் புண் அல்லது சமூக வடுக்கள் என குறிப்பிடலாம்.
🔹 சமூகமும் நிறுவனங்களும் என்ன செய்யலாம்?
🟢 கல்வி & திறன் மேம்பாடு
- தொழில்ப்பயிற்சி நிலையங்கள் ஒன்றாக இணைந்து “Dual-Track Training + Job Placement” முறைமைகளை வலுப்படுத்த வேண்டும்.
- ஆங்கிலம், கணினி, தொழில்முனைவுத் திறன் ஆகியவற்றை இணைத்த குறுகிய காலப் பயிற்சிகள் இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
🟢 மனநல மற்றும் போதைத் தடுப்பு
- பாடசாலைகளில் “Life Skills Curriculum” மூலம் மனஅழுத்த மேலாண்மை, peer pressure எதிர்கொள்வது போன்ற பயிற்சிகள்.
- மாவட்ட அளவில் “Youth Counselling Centres” அமைத்து, இளைஞர்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் வழிகாட்டல்.
- போதைப் பொருள் சிகிச்சை மையங்களுடன் சமூக இணைப்பு திட்டங்கள்.
🟢 தொழில்முனைவோர் வாய்ப்புகள் (Entrepreneurship)
- இளம் தொழில்முனைவோர்களுக்கு இலகு முறையிலான Micro-Grants மூலம் சுயதொழில் மற்றும் தொழில்முயற்சியினை ஊக்குவித்தல்
- “Train & Earn” திட்டங்கள் – கல்வியுடனே வருமானம் பெறும் வாய்ப்புகள்.
- வெற்றி பெற்ற தொழில்முனைவோரின் அனுபவங்கள் இளைஞர்களுடன் பகிரப்படல்
🟢 சமூகத்தின் பங்களிப்பு
- மத அமைப்புகள், மற்றும் உள்ளூர் NGOக்கள் — இளைஞர்களுக்கு “ஆதரவு வட்டம்” உருவாக்க வேண்டும்.
- பெற்றோர்கள் தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்ற அடிப்படையில் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதுடன், அவர்கள் உங்களுடன் மனம் திறந்து பேசுவதற்கான வாய்ப்புக்களையும், வழிகளையும் ஏற்படுத்துங்கள்.
- இளைஞர்களை குற்றவாளியாகவோ, உருப்படாதவர்கள் என்றோ பார்க்காமல், மனிதநேயம் நிறைந்த புரிதலுடன் அவர்களிற்கு நம்பிக்கையினை ஊட்டி வழிநடத்த வேண்டும்.
🔹 எதிர்கால நம்பிக்கை – மாற்றம் சாத்தியம்
இன்றைய சவால்கள் நாளைய தீர்வுகளுக்கான வழிகாட்டிகளாக மாறலாம். எனவே
இளைஞர்களை திறனுடன், தன்னம்பிக்கையுடன், மனநல ஆரோக்கியத்துடன் உருவாக்குவது தான் தற்போதைய சமூக வளர்ச்சியின் உண்மையான அடித்தளம்.
வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசின் பொறுப்பாக இருக்கலாம்,
ஆனால் இளைஞர்களை வழிநடத்துவது நம் அனைவரின் கடமை.
க.பிரதீஸ்வரன்
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Youth Challenges and Employment
Today’s Sri Lankan youth represent a generation full of energy, technological skills, and dreams. However, the path to realizing those dreams is far from easy. This article reflects my personal experiences and research on this pressing issue.
🔹 National Overview – The Alarming Numbers
According to data from the Department of Census & Statistics (DCS) and the World Bank:
- While the overall unemployment rate in Sri Lanka is around 4%,
- Youth unemployment (ages 15–24) remains alarmingly high — between 22% and 26%.
- Among females, the rate is even higher.
- Nearly 27% of youth fall into the NEET category — meaning they are Not in Education, Employment, or Training.
👉 In simple terms, thousands of young people stand uncertain after completing their education, asking:
“What’s next?”
🔹 The Eastern Province Reality – Skills Exist, But Opportunities Don’t
In districts such as Batticaloa, Ampara, and Trincomalee, many young people who have completed technical education, A/Ls, or even degrees, continue to struggle without proper job opportunities.
The major challenges they face include:
- Gaps in English and ICT skills
- Lack of interest in gaining practical experience or continuing in stable employment
- Mismatch between job market needs and vocational training skills
- A mindset that prioritizes government jobs only
- Mental stress due to family, social expectations, and personal pressure
- An impatient attitude seeking instant results such as salary, promotions, or recognition
These challenges have indirectly led to a new social issue — drug abuse among youth.
🔹 The Hidden Link Between Unemployment and Drug Use
Unemployment leads to stress, frustration, and loss of hope, which in turn pushes some youth towards alcohol or drug use as a way to “escape reality.”
According to the National Dangerous Drugs Control Board (NDDCB):
- In 2022, over 100,000 drug-related incidents were reported across the country.
- The majority of those involved in heroin, cannabis, and methamphetamine (“ice”) use were young people aged 15–30.
👉 One of the key root causes behind this is unemployment and lack of life purpose.
🔹 Real-life Examples from the Eastern Province
🧩 Case A – Batticaloa
A young man who had completed a diploma remained unemployed for nearly 10 months (NEET). Under peer pressure, he began using small recreational drugs known as “party pills.” Eventually, this led to addiction, depression, social withdrawal, and loss of life motivation.
🧩 Case B – Trincomalee
A youth dropped out of technical training due to family issues. He later engaged in selling small quantities of cannabis with friends. This resulted in arrest and eventual rehabilitation center referral.
These are not just stories —
They represent the hidden wounds of our society, deep-rooted and often ignored.
🔹 What Can Society and Institutions Do?
🟢 Education & Skill Development
- Strengthen Dual-Track Training + Job Placement systems within vocational institutes.
- Offer short-term courses that combine English, ICT, and entrepreneurship training.
🟢 Mental Health and Drug Prevention
- Introduce a “Life Skills Curriculum” in schools focusing on stress management and coping with peer pressure.
- Establish Youth Counselling Centres at the district level to provide free guidance and emotional support.
- Create community-linked rehabilitation programs for recovered individuals.
🟢 Entrepreneurship Opportunities
- Provide micro-grants for young entrepreneurs to start self-employment initiatives.
- Promote “Train & Earn” programs, allowing youth to learn while earning.
- Encourage successful entrepreneurs to share their experiences and inspire others.
🟢 Community Engagement
- Religious and local NGOs should create “Support Circles” for youth.
- Parents must shift from being strict supervisors to empathetic listeners, offering emotional understanding and open communication.
- Instead of labeling youth as failures or criminals, society must approach them with compassion and rebuild their confidence.
🔹 Hope for the Future – Change Is Possible
Today’s challenges can serve as the foundation for tomorrow’s solutions.
Therefore, empowering young people with skills, confidence, and mental resilience must be the true basis of social development.
Creating job opportunities may be the government’s responsibility,
but guiding and supporting youth is our collective duty.
— K. Pratheeswaran
