How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 9
How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 9

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி? : தொடர் 9

How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 9

பொதுவாக மரக்கறிப் பயிர்களுக்கு பாதிப்புக்கள் இரு வகைகளில் ஏற்படும்

  1. நோய்கள்
  2. போசணை குறைபாடுகள்

எமது நாட்டைப் பொறுத்தவரை நோய்கள் என்று வரும்போது பொதுவாக
இலைச்சுருள், காய் துளைப்பான், வாடல் மற்றும் அழுகல், வேர்ப்புழு அல்லது நெமற்றோட்ஸ் தாக்கம், பழ ஈத்தாக்கம், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, இலை கருகல், வைரஸ் நோய், இலை உண்ணும் புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவில் அவதானிக்கப்படுகிறது.

போசணை குறைபாட்டில் பொதுவாக போரோன், கல்சியம் குறைபாடுகளால் ஏற்படும் முனை அழுகல், காய்/ பழம் வெடித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

பொதுவாக பங்கஸ் வாடல், அழுகல் மற்றும் வேர்ப்புழு அல்லது நெமட்டோட்ஸ் தொற்றுக்கள் முறையாக பரிகரணம் செய்யப்படாத கொம்போஸ், எரு மற்றும் ஊடாக பரவுகின்றன. ஏனையவை பூச்சிகள், வண்டுகள், புழுக்களால் நிகழகின்றன.

முதலில் இயற்கை உரங்களின் ஊடாக பரவும் வாடல் நோய் பற்றி பார்ப்போம்.
வாடல் நோய் என்பது பயிர்களை பாதிக்கும் பூஞ்சணம் அல்லது பக்டீறியாவால் ஏற்படும் நோயாகும். இந்த நோயானது மண், விதை, இயற்கை உரம் அல்லது நோய் தாக்கப்பட்ட தாவர எச்சங்கள் மூலம் பரவுகிறது.

வாடல் நோய்க்குரிய நோய்க்காரணிகள், மண்ணில் நீண்ட காலம் உயிர் வாழக்கூடியவை .
சூழல் வெப்பநிலை 20–30°C க்கு இடைப்பட்ட அளவுகளில் நோயின் தீவிரம் அதிகரிக்கும் .

அதிக ஈரப்பதம் அல்லது, மழைக்காலங்களில் நோய்ப்பரவல் வேகமாக நடைபெறுகிறது .
அமிலத்தன்மை, குறைந்த பொட்டாசியம், அதிக நைதரசன் உள்ள மண்ணில் நோய் அதிகம் பரவும்.
நோயின் ஆரம்ப நிலையில் அடி இலைகள் மஞ்சளாகி வாடும்.

அடுத்த கட்டமாக இலைகள் முழுமையாக உதிர்ந்து செடிகள் காய்ந்து இறக்கும். அத்துடன் வேர்ப்பகுதி நிறம்மாறி அழுகும்.

நோய்த் தடுப்பு முறைகள்

உண்மையில் நோய் தாக்கிய பின் செய்யும் சிகிச்சையை விட வருமுன் காக்கும் தடுப்பு முறைகள் செலவு மிகவும் குறைந்தவை .

🌱ஒரே பயிரை தொடர்ச்சியாக பயிரிடாமல் மாற்றுப் பயிர்களை பயிரிடுதல் .

🌱நோயை எதிர்க்கும் திறன் கொண்ட இனங்களைப் பயிரிடுதல்.

🌱 சாணக் கரைசலை அல்லது ஜீவாமிர்தக் கரைசலை அடிக்கடி தெளித்தல் .

🌱கோடை காலத்தில் ஆழ உழவு செய்து மண்ணை வெயிலில் வைத்தல் (38–40°C வெப்பநிலையில் பூஞ்சணங்கள் இறக்கின்றன) .

🌱நீர்ப்பாசனம் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே செய்தல்.

🌱 நடைமுன் விதைகளை / நாற்றுகளை ஜீவாமிர்தம் அல்லது ட்ரைக்கடெர்மா நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்தல்.

🌱 வேப்பம் புண்ணாக்கு, ஜீவாமிர்தம் இடுவதன் மூலம் வாடல் நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

🌱ட்ரைக்கடெர்மா, சூடோமோனஸ் மற்றும் பசிலஸ் சப்டிலீஸ் ஆகிய நுண்ணுயிர்களை ஒருசேர மண்ணில் கலந்து பயன்படுத்துதல் வாடல் நோயை கட்டுப்படுத்தும்.

🌱🌱🌱
(இயற்கை உரங்களை தொற்று நீக்கல் பற்றிய மேலதிக விளக்கம்)
🌱🌱🌱

மாட்டெரு, ஆட்டெரு, கோழி எரு, கொம்போஸ் உரம் போன்றவற்றை முறையாகத் தொற்றுநீக்கிப் பயன்படுத்தாத பட்சத்தில் நம்மை அறியாமலே பல சந்தர்ப்பங்களில் தாவரங்களுக்குத் தீமை செய்யும் சில நுண்ணுயிர்கள் (Pathogens) மற்றும் வேர்ப்புழுக்கள் (Nematodes) போன்றவை இவற்றினூடாக பயிர்களுக்கு கடத்தப்பட்டு நோய் விளைவிக்கும் சந்தர்ப்பங்களும் சில வேளைகளில் ஏற்படுகிறது.

பங்கஸ், பக்டீரிய வாடல் நோய் மட்டுமல்லாது ‘அண்மைக் காலங்களாக இலங்கை முழுவதும் நெல் வயல்களிலும், தோட்டங்களிலும் பரவலாக அவதானிக்கப்படும் வேர்ப்புழுத்தாக்கம் கூட ஏற்படக் காரணம் கொம்போஸ் தயாரிக்கும் முறையான அறிவின்றி குளக்கரைகளில் அள்ளிவந்து சேர்த்த சேறு, சில வகை நீர்த்தாவரங்கள், தொற்று நீக்கப்படாத எரு, கோழி எச்சம் போன்ற பண்ணைக்கழிவுகள் போன்றவற்றால் முறையான படிநிலைகளுக்கூடாக அல்லாமல் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்ட சேதன உரங்கள் மூலம் கூட பரவியிருக்கலாம்’ என்பது எமது ஆலோசகர்களான நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் சிலரின் கருத்தாகும்.

எரு வகைகளிலே, கோழி எருவே வேர்ப்புழுக்கள் மற்றும் நோய் விளைவிக்கும் பங்கஸ் மற்றும் பக்டீரியாக்கள் பல மடங்கு அதிகமாகப் பெருகக்கூடிய சாதகமான காரணிகளைக்கொண்டுள்ளது.
இப் பாதிப்புக்களை நிவர்த்தி செய்ய,
🌱
வணிகரீதியிலோ அல்லது தனிப்பட்டரீதியிலோ சேதன உரம் தயாரிக்கும் போது, சரியான வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட முறையில், கால அளவுகளின் பிரகாரம் நன்கு உக்க வைக்கப்பட்டுத் தயாரித்தல் வேண்டும்.
🌱
கோழி எருவினை பயிர்களுக்கு நேரடியாக இடுவதை தவிர்த்து கொம்போஸ் ஆக மாற்றியபின் பயிருக்கு இடலாம். முடியாவிடின் நன்கு வெய்யிலில் உலர்த்தி இடலாம்.
🌱
தயாரிப்பின் முடிவுப்பொருளான கொம்போஸ் 2000 கிலோவிற்கு, பங்கஸ் தொற்று நீக்கியான ட்ரைக்கடெர்மா 1 லீற்றர், பேசிலஸ் சப்டிலிஸ் 1 லீட்டர் மற்றும் வேர்ப்புழு கொல்லியான பேசிலோமைசிஸ் 1 லீற்றர் என்னும் அளவில் சேர்த்து நன்கு கலக்கப்பட்டு பொதியிடப்படலாம். அல்லது மேற்கூறியவற்றை நன்கு கலந்து மூன்று நாட்கள் சேமித்து வைத்தபின் பயன்படுத்தலாம்.
🌱
ஆட்டெரு , மாட்டெரு கோழி எரு என்பன நன்கு உலர்ந்திருத்தல் மாத்திரமன்றி, இரண்டு மெட்ரிக் தொன்னிற்கு தலா 1 லீற்றர் எனும் அளவில்
பங்கஸ் தொற்று நீக்கியான ட்ரைக்கடெர்மா , பேசிலஸ் சப்டிலிஸ் மற்றும் வேர்ப்புழு கொல்லியான பேசிலோமைசிஸ் 1 லீற்றர் என்னும் அளவில் தேவையான அளவு சிறிது நீருடன் சேர்த்து விசிறப்பட்டு நன்கு புரட்டிக் கலக்கப்பட்டு 1 – 2 வாரமளவில் நிழலான இடத்தில் வைக்கப்பட்ட பின்னரே பயிர்களுக்கு இடப்படவேண்டும் .
🌱
மேற்கூறியவை கிடைக்காத பட்சத்தில் பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், வேப்பம்புண்ணாக்கு போன்றவற்றை நிலத்துக்கு தொடர்ந்து வார அட்டவணைப்படி கொடுக்கவேண்டும்.
இயற்கை விவசாயத்தில், பயிர்களுக்கு நோய் வருமுன் காப்போம். நேர மற்றும் பண விரயத்தைக் குறைப்போம்.
CSJ Agri
07/11/2025

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 9

In general, vegetable crops are affected in two main ways:

  1. Diseases
  2. Nutrient Deficiencies

In Sri Lanka, the most commonly observed diseases include leaf curl, fruit borer, wilting and rotting, root-knot nematode attacks, fruit fly infestations, whiteflies, mealybugs, leaf scorch, viral infections, and leaf-eating caterpillars.

When it comes to nutrient deficiencies, boron and calcium deficiencies often cause blossom-end rot and fruit cracking problems.

Fungal wilt, rotting, and nematode infections usually spread through improperly decomposed compost and manure, whereas other infections occur through insects, beetles, and worms.

Let’s first look at wilt disease spread through natural fertilizers.
Wilt disease is caused by fungi or bacteria that infect crops. It spreads through soil, seeds, natural manure, or infected plant residues.

The pathogens responsible for wilt can survive in soil for long periods. The disease becomes more severe in temperatures between 20–30°C.

It spreads rapidly during humid or rainy seasons and is more prevalent in acidic soils with low potassium and high nitrogen levels.
In the early stages, lower leaves turn yellow and wilt, followed by leaf drop, plant drying, and death, with the roots showing discoloration and decay.

Disease Prevention Methods

Preventive measures taken before infection are far more cost-effective than treatments after the disease occurs.

🌱 Avoid growing the same crop continuously; practice crop rotation.
🌱 Use disease-resistant varieties.
🌱 Regularly spray cow dung solution or Jeevamrutha solution.
🌱 During the dry season, plough the soil deeply and expose it to sunlight (fungi die at 38–40°C).
🌱 Maintain proper irrigation—neither overwatering nor underwatering.
🌱 Treat seeds or seedlings before planting using Jeevamrutha or Trichoderma bio-culture.
🌱 Applying neem cake and Jeevamrutha can help control wilt disease.
🌱 Mixing beneficial microbes like Trichoderma, Pseudomonas, and Bacillus subtilis into the soil together helps suppress wilt.


(More on the Disinfection of Natural Fertilizers)

If cow dung, goat manure, chicken manure, or compost are not properly disinfected before use, harmful microorganisms (pathogens) and nematodes can unknowingly be transferred to crops, causing severe damage.

According to microbiology researchers, the recent widespread nematode infestations observed in paddy fields and vegetable gardens across Sri Lanka may also be due to improperly prepared compost—made hastily from pond mud, aquatic plants, untreated manure, or poultry waste without following proper composting stages.

Among manure types, chicken manure provides the most favorable conditions for the rapid growth of fungal and bacterial pathogens and nematodes.

To Prevent These Problems:

🌱 When preparing compost, either commercially or privately, follow proper guidelines and allow adequate fermentation time for complete decomposition.

🌱 Do not apply raw chicken manure directly to crops. Convert it into compost first, or at least sun-dry it thoroughly before use.

🌱 To 2,000 kg of finished compost, mix 1 liter each of Trichoderma, Bacillus subtilis, and Paecilomyces (a nematode killer). Mix well and pack, or let it sit for three days before use.

🌱 For cow dung, goat manure, or chicken manure, ensure they are well-dried, and for every 2 metric tons, mix 1 liter each of Trichoderma, Bacillus subtilis, and Paecilomyces with a little water. Stir thoroughly and keep it in a shaded place for 1–2 weeks before applying to crops.

🌱 If the above are not available, regularly apply Panchagavya, Jeevamrutha, or neem cake to the soil following a weekly schedule.

In natural farming, let’s prevent diseases before they occur, saving both time and money.

CSJ Agri
07/11/2025