Decline in Coconut Sales
Decline in Coconut Sales

தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி

நாட்டில் தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், 0.12 சதவீதம் தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 175 முதல் 185 ரூபாயாகவும், சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 முதல் 160 ரூபாயாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Decline in Coconut Sales

A decline in coconut sales has been reported in the country, according to the Coconut Development Authority.

Accordingly, in the weekly coconut auction sales, a 0.12 percent drop in coconut sales has been recorded.

In the local market, the wholesale price of a large coconut has been recorded as 175 to 185 rupees, while the wholesale price of a small coconut has been recorded as 150 to 160 rupees.

It has been stated that this is the reason for the decline in coconut sales.