ஜப்பானில் 13 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை Volcano Erupts After 13 Months வெடித்துச் சிதறியதால் அங்கு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன.
எரிமலைகள் அதிகம் காணப்படும் ஜப்பானில் எப்போது எரிமலை விழித்து,நெருப்பு பிழம்புகளை உமிழத் தொடங்கும் என்று தெரியாது.
இந்நிலையில் 13 மாதங்களாக அமைதியாக இருந்த சகுராஜிமா என்ற எரிமலை இப்போது நெருப்பை உமிழத் தொடங்கி இருக்கிறது.
இந்த எரிமலை ககோஷிமா நகரத்தின் அருகில் உள்ளது அடுத்தடுத்து 2 முறை நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்ததால் வானில் கிட்டத்தட்ட 4.4 கிலோ மீட்டர் தூரம் புகை மண்டலமாகவும், புழுதியாகவும் காட்சி அளித்தது.
இது அந்நாட்டின் விமான சேவையை முற்றிலும் பாதித்துள்ளது.
வான்வழி பாதையில் புகை, சாம்பல்கள் நிரம்பிக் காணப்பட்டதால் ககோஷிமா விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்களின் வருகை, புறப்பாடுகளும் தாமதமாகி இருக்கின்றன.
சகுராஜிமா எரிமலை ஜப்பானின் பிரபலமான எரிமலையாகும்.
2019ம் ஆண்டு நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்த போது, வானில் 5.5 கிமீ புகை மண்டலமாகவும், தூசுகள் நிரம்பிக் காணப்பட்டது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Volcano Erupts After 13 Months
A volcano in Japan that had been dormant for 13 months has erupted, causing flight services in the area to be cancelled.
Japan, a country known for its many volcanoes, can never predict when a volcano will awaken and begin spewing fiery lava.
In this situation, the Sakurajima volcano, which had remained silent for 13 months, has now begun to erupt.
This volcano is located near Kagoshima city. It erupted twice consecutively, sending plumes of smoke and ash up to nearly 4.4 kilometres into the sky.
The eruption has severely affected the nation’s airline services.
Since the air routes were filled with smoke and ash clouds, more than 30 flights scheduled to depart from Kagoshima Airport have been cancelled.
Additionally, many incoming and outgoing flights to various cities have been delayed.
Sakurajima is one of Japan’s most famous volcanoes.
When it erupted in 2019, smoke clouds and ash rose up to 5.5 kilometres into the sky.

