Do Not Blindly Trust AI Tools
Do Not Blindly Trust AI Tools

AI கருவிகளை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது

செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் அளிக்கும் எல்லாவற்றையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது Do Not Blindly Trust AI Tools என கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

ஒரு ஊடக நேர்காணலில் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆக்கப்பூர்வமான (Creative) விடயங்களுக்கு AI பொருத்தமாக இருந்தாலும், செய்திகள் போன்ற முக்கியமான மற்றும் உணர்வுள்ள துறைகளில் AI மாதிரிகள் தவறுகளுக்கு ஆளாகக்கூடும் என்று கூறியுள்ளார்.

இதனைப் பயன்படுத்தும் போது, மக்கள் அவற்றை ஏனைய கருவிகளுடன் இணைத்து (Integrated) பயன்படுத்த வேண்டும் என்றும், தகவல் சரிபார்ப்புக்காகக் கூகுள் தேடல் (Google Search) போன்ற அதிக அடிப்படை கொண்ட (more grounded) உலாவிகளைப் பயன்படுத்துமாறு அவர் மக்களை வலியுறுத்தினார்.

துல்லியமான தகவலை வழங்குவதன் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், கூகுள் தனது அமைப்புகளில் முடிந்தவரை துல்லியமான தகவலை வழங்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Do Not Blindly Trust AI Tools

People should not blindly trust everything provided by artificial intelligence (AI) tools, said Sundar Pichai, the CEO of Alphabet, Google’s parent company.

He mentioned this during a media interview.

He further stated that while AI is suitable for creative tasks, AI models may make mistakes in important and sensitive fields such as news.

When using AI, people should integrate it with other tools and use more grounded platforms like Google Search for verifying information, he advised.

He emphasized that this highlights the importance of providing accurate information and added that Google strives to offer the most accurate information possible in its systems.