இயற்கை விவசாயத்திற்கு வரும் புதியவர்களை அச்சுறுத்தி அவர்களின் மன வலிமையை குலைக்கச் செய்யும், தாவர நோய்களுள் முதன்மையானது இலைச்சுருள் நோயாகும்.
இதுவே வைரஸ் நோய்க்கான தொடக்கப்புள்ளியுமாகும். How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 10 இவை சாறுறிஞ்சும் பூச்சிகளால் ஏற்படுகிறது. கோடை காலங்களிலும், பனிக் காலங்களிலும் அதிகமாக இந்நோய் காணப்படும்.
இலைச்சுருள் நோயினை இனங்காணல்
🌱🌱
இலையின் விளிம்புகள் மேல் நோக்கிச் சுருண்டிருக்கும்.
இலைகள் சிறுத்து, தடித்துக் காணப்படும்.
இளம் இலைகள் மஞ்சள் நிறமாகவோ அல்லது வெளிர் பச்சை நிறமாகவோ காணப்படும்.
பூசணி, வல்லாரை போன்ற இலைகளில் மஞ்சள் அல்லது வெளிர் புள்ளிகள் தோன்றும்.
செடியின் வளர்ச்சி முடக்கப்பட்டு, கட்டையாகத் தோன்றும்.
பெரும்பாலான பூக்கள் உதிர்ந்து விடும். எனவே காய்கள் பிடிப்பது குறைவடையும்.
காய்கள் சிறுத்து, சுருண்டு முழு வளர்ச்சியடையாமல் இருக்கும்.
வைரஸ்நோய் பற்றிய விளக்கம்
🌱🌱
சாறுறிஞ்சும் பூச்சிகள், வைரஸ் நோய் பாதித்த செடியின் சாற்றினை உறிஞ்சும் போது, தாவர வைரஸ்கள் பூச்சிகளின் உடலுக்குள் நுழைகின்றன. பின்னர் வைரஸினைக் காவிய இப்பூச்சிகள் ஆரோக்கியமான செடிகளில் சென்று சாறு உறிஞ்சும் போது, வைரஸ்களை புதிய செடிகளுக்கும் பரப்புகின்றன. சாறுறிஞ்சும் பூச்சிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிப்பதால், முழுத் தோட்டத்துக்கும் நோய் விரைவாகப் பரவிவிடும்.
வைரஸ் நோய்க்கு நேரடியாக இதுவரைக்கும் இயற்கை மற்றும் இரசாயன மருந்துகள் இல்லை. ஆயினும் காவிகளான சாறுறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் போது வைரஸ் தாக்கத்தையும் குறைக்கலாம். (டெங்கு நுளம்புகளை அழிப்பது போல.)
இலைச்சுருள் நோயினை கட்டுப்படுத்தல்
🌱🌱
பயிர்களை நெருக்கமாய் நடக்கூடாது.
நோய் எதிர்ப்பு திறனுடைய தாவர இனங்களை நடலாம்.
மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் மற்றும்
விளக்கு பொறிகளை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
வைரஸ் நோய் வந்த தாவரங்களை தோட்டத்திலிருந்து உடனடியாக அகற்றவேண்டும்.
16 லீ தாங்கிக்கு 25 மில்லி வேப்பெண்ணையை முதலில் சவர்க்காரத்தில் கரைத்து பின்னர் நீரில் கலந்து, வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலை (3G) வாரம் ஒருமுறை தெளிப்பது ஓரளவுக்கு கைகொடுக்கும்.
10 லீட்டர் நீரில் 5 கற்றாளை தண்டுகளின் ஜெல் இனை நன்கு கரைத்து பயிர்களில் தெளிப்பது சாறுறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
பூச்சிகளின் எண்ணிக்கை பெருகி மேற்கூறியவை கைகொடுக்காத பட்சத்தில் வேர்ட்டிசீலியம் லக்கானி நுண்ணுயிரினை 16 லீட்டர் தாங்கிக்கு 250 மில்லி எனும் அளவில் கலந்து வாரம் ஒருமுறை தெளிக்க இந்த நோய் நிச்சயம் கட்டுப்படும்.
(தொடரும்)
CSJ Agri
14/11/2025
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 10
Among the plant diseases that frighten newcomers to natural farming and weaken their confidence, leaf curl disease is one of the most common. It is also the starting point for viral diseases.
This disease is caused by sap-sucking insects and is more common during the dry and cold seasons.
Identifying Leaf Curl Disease
🌱🌱
- The edges of the leaves curl upward.
- Leaves appear smaller and thicker.
- Young leaves turn yellow or light green.
- Yellow or pale spots appear on leaves such as pumpkin and gotukola.
- The plant’s growth becomes stunted and appears stiff.
- Most flowers fall off, resulting in reduced fruit formation.
- Fruits become small, curled, and fail to fully develop.
Explanation of Viral Diseases
🌱🌱
When sap-sucking insects feed on the sap of a virus-affected plant, plant viruses enter the insects’ bodies.
These insects, now carrying the virus, spread it to healthy plants when they feed on them.
As the population of these insects increases rapidly, the disease spreads throughout the entire garden.
There is no direct natural or chemical medicine available yet to cure viral diseases.
However, by controlling the carrier insects (similar to controlling dengue mosquitoes), the spread of the virus can be reduced.
Controlling Leaf Curl Disease
🌱🌱
- Do not plant crops too closely together.
- Use plant varieties with disease resistance.
- Use yellow sticky traps and light traps to control insects.
- Immediately remove virus-infected plants from the garden.
- Mix 25 ml neem oil (dissolved first in soap solution) with 16 liters of water and spray once a week.
- Spraying the 3G mixture (ginger, garlic, green chili extract) once a week helps to some extent.
- Mix the gel from 5 aloe vera stems in 10 liters of water and spray; this helps control sap-sucking insects.
If the insect population increases and the above methods do not help, mix Verticillium lecanii (a beneficial microbe) at 250 ml per 16-liter tank and spray once a week. This will definitely control the disease.
(To be continued)
CSJ Agri
14/11/2025
