பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்துக்குச் செல்லவே தேவையில்லை Punjab Kings Don’t Need to Attend the Auction என அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா பேசியுள்ளார். அடுத்த ஐபிஎல் பருவத்துக்கான மினி ஏலம் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறுகிறது.
மினி ஏலத்துக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தக்கவைக்கவும், விடுவிக்கவும் செய்தனர்.
சில வீரர்களை டிரேடிங் மூலம் அணிகள் வாங்கவும், விற்கவும் செய்தன.
இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் மினி ஏலத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி செல்லவே தேவையில்லை என அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் ஒன்றாக இருக்கும் கலாசாரத்தை வளர்க்க நாங்கள் முயற்சித்துள்ளோம். நாங்கள் விடுத்த வீரர்களையும் விடுவிக்க வேண்டும் என விடுவித்துவிடவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வீரர்களை விடுவிக்கும் முடிவு கடினமானதாகவே இருந்தது. அணியில் ரிக்கி பொண்டிங் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பதால், அணி சமபலத்துடன் இருக்கிறது. அதனால், நாங்கள் ஐபிஎல் ஏலத்துக்கு செல்ல வேண்டிய தேவை உண்மையில் இல்லை. ஆனால், எங்களுடைய தற்போதைய அணியை மேலும் வலுவாக்க முயற்சி செய்வோம் என்றார்.
ரிக்கி பொண்டிங் – ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த 11 பருவங்களில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.11.5 கோடி கையிருப்புத் தொகையுடன் ஐபிஎல் மினி ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Punjab Kings Don’t Need to Attend the Auction
Punjab Kings co-owner Ness Wadia has said that the team doesn’t really need to attend the upcoming IPL auction. The mini-auction for the next IPL season will be held on December 16 in Abu Dhabi.
Before the mini-auction, all 10 IPL teams retained and released players according to their requirements.
Some players were also bought and sold through trading.
In this situation, Tamil Nadu media has reported that Ness Wadia stated Punjab Kings do not need to participate in next month’s IPL mini-auction.
Speaking about this, he said:
“We have tried to build a culture of staying together as a team. We didn’t release players because we wanted to release them. The decision to release players was very tough for Punjab Kings. With Ricky Ponting and Shreyas Iyer on the team, the squad is well-balanced. So, we actually don’t need to go to the IPL auction. However, we will try to further strengthen our current squad.”
Under the leadership of Ricky Ponting–Shreyas Iyer, Punjab Kings reached the final for the first time in 11 seasons.
It is also noteworthy that Punjab Kings will enter the IPL mini-auction with a remaining purse of 11.5 crore.

