Landslide Risk Warning Issued for Several Districts
Landslide Risk Warning Issued for Several Districts

 பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து, சில மாவட்டங்களுக்கு Landslide Risk Warning Issued for Several Districts மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் நுவரெலிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, இன்று மாலை 4 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள முதலாம் கட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை, நாளை மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில், கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் வீடொன்று பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அநுராதபுரம், இராஜங்கணை நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும திறக்கப்பட்டுள்ளதாக அவற்றுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Landslide Risk Warning Issued for Several Districts

Following the prevailing unstable weather conditions in the country, a landslide risk early warning has been issued for several districts.

Accordingly, the districts of Badulla, Kalutara, Kandy, Kegalle, Kurunegala, and Nuwara Eliya have been placed under this warning.

The Level 1 landslide early warning, which was enforced from 4 PM today, will remain in effect until 4 PM tomorrow, according to the National Building Research Organisation.

Meanwhile, in some areas of Jaffna, heavy rainfall accompanied by strong winds has been reported, our correspondent stated.

During this period, a house in the Vadamarachchi East – Kattaikadu area was severely damaged due to the cyclone-like winds.

In addition, engineers in charge have reported that all four spill gates of the Rajangana reservoir in Anuradhapura, and two spill gates of the Angamuwa reservoir have been opened.