Dry Ration Packs Distributed at Annai Sri Sarada Home
Dry Ration Packs Distributed at Annai Sri Sarada Home

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு

20.11.2025 திகதி பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது அவதார Dry Ration Packs Distributed at Annai Sri Sarada Home தினத்தினை முன்னிட்டு கோண்டாவில் ஸ்ரீ சத்ய சாயி அறக்கட்டளையினரால் அன்னை ஸ்ரீ சாரதா நிலையப் பிள்ளைகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் உலர் உணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோண்டாவில் ஸ்ரீ சத்ய சாயி அறக்கட்டளையின் தலைவர் திரு தங்கராஜா,அவரது துணைவியாரும் மற்றும் கோண்டாவில் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் மற்றும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் தலைவர் பொன். பேரின்ப நாயகம் உள்ளக கணக்கு ஆய்வாளர் திரு. கோபாலசிங்கம் இந்நிலையத்தின் பொருளாளர் திரு செந்தில்குமார் மற்றும் முகாமையாளர் திருமதி ஜனனி ஜனகன் உத்தியோகத்தர்கள் பிள்ளைகள் பெற்றார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வின் போது தொடர்ந்து பல ஆண்டுகளாக சாரதா நிலைய பிள்ளைகளுக்கு உதவி செய்து வரும் கோண்டாவில் ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளையின் தலைவர் திரு .தங்கராஜா மற்றும் அவரது துணைவியார் கௌரவிக்கப்பட்டார்கள்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Dry Ration Packs Distributed at Annai Sri Sarada Home

In view of the 100th Avatar Day of Bhagawan Sri Sathya Sai Baba on 20.11.2025, dry ration packs were distributed to the children and staff of the Annai Sri Sarada Home by the Sri Sathya Sai Trust, Kondavil.

The event was graced by Mr. Thangarajah, Chairman of the Sri Sathya Sai Trust, Kondavil, along with his spouse, and the Chairman and members of the Sri Sathya Sai Seva Centre, Kondavil. Also present were Rev. Perinpanayagam, Chairman of Annai Sri Sarada Home, Mr. Gopalasingham, Internal Auditor, Mr. Senthilkumar, Treasurer, Mrs. Janani Janakan, Manager, staff members, and the children of the home.

During this event, Mr. Thangarajah and his spouse, who have been extending continuous support to the children of the Sarada Home for many years, were also honored.