தமிழர் தாயக பகுதியில் முதன்மையான காணப்படும் ஏ9 வீதியில் பல இடங்களில் சரியான பயணிகள் நிழல் குடைகள், பேருந்து தரிப்பிடங்கள் காணப்பட்டாலும் சில பகுதிகளில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் தரித்து நிற்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
கிளிநொச்சி பரந்தன் சந்தி பகுதியில் பரந்தனில் இருந்து கிளிநொச்சி பகுதிக்கு செல்லும் மக்கள் குறுந்தூரமாக இருந்தாலும் நீண்டதூரமாக இருந்தாலும் அங்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இரண்டு பயணிகள் நிழல் குடைகள் அந்த பகுதியில் காணப்பட்டாலும் அவற்றில் பயணிகள் இருந்து செல்வதற்கான வசதிகள் எவையும் காணப்படவில்லை.
இதனால் இரவு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் நிழல் குடைகளின் கீழ் இருந்து கொள்ள முடியாது வீதி ஓரங்களில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதேச சபைகளால் பல இடங்களில் சரியான முறையில் பயணிகள் நிழல் குடைகள் அமைக்கப்பட்டாலும் பரந்தன் சந்தியில் இருந்து கிளிநொச்சி நோக்கி செல்பவர்கள் காத்திருக்கும் பகுதியில் முறுகண்டி செல்லும் சிற்றூர்திகள் மற்றும் கொழும்பு செல்லும் இரவு நேர பேருந்துக்களுக்காக மக்கள் காத்திருந்து செல்லும் நிலை காணப்படுகின்றது.
குறித்த பகுதியில் சரியான ஒரு பயணிகள் இருந்து பேருந்துக்களில் செல்லக்கூடிய வகையில் பயணிகள் நிழல் குடை அமைந்தால் பயணிகளுக்கு இலகுவாக இருக்கும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.