விவசாய கடன்கள் தள்ளுபடி: அரசாங்கத்தின் தீர்மானம் வெளியானது Uncategorized

விவசாய கடன்கள் தள்ளுபடி: அரசாங்கத்தின் தீர்மானம் வெளியானது

1 min read
💬 0

விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில், விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பல விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, அண்மையில் சிறு போக விவசாயிகளுக்கான உர மானியத்தை ஏக்கருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக உயர்த்துவதற்கு இலங்கை (Sri Lanka) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் கடந்த மாத தொடக்கத்தில் சிறு போக விவசாயிகளுக்கு நடப்பு பயிர்ச்செய்கைப் பருவத்துக்காக இரண்டு ஏக்கர் வரையிலான ஏக்கருக்கு 15,000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.