Gold Prices Drop Suddenly in Sri Lanka
Gold Prices Drop Suddenly in Sri Lanka

இலங்கையிலும் சட்டென்று குறைந்த தங்கவிலை

Gold Prices Drop Suddenly in Sri Lanka சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தங்க விலை வீழ்ச்சியின் நேரடிப் பிரதிபலிப்பாக, இலங்கையின் ஆபரணத் தங்கச் சந்தையிலும் இன்றைய தினம் (20) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 73.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,626 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Gold Prices Drop Suddenly in Sri Lanka

Reflecting the decline in global gold prices, the All Ceylon Gem and Jewellery Traders Association has announced that gold prices in Sri Lanka’s local jewellery market have also dropped today (20).

In the international market, the price of gold per ounce is currently at 4,720 USD.

Silver is being traded at 73.79 USD per ounce today.

The decline in gold and silver prices is attributed to economic changes in the global market and the ongoing conflict situation in the Middle East.

Accordingly, in Sri Lanka, the price of 24-carat gold per pound is LKR 388,000.

The price of 22-carat gold per pound is LKR 357,000.

Based on this, the price of 1 gram of 24-carat gold is LKR 48,500, while 1 gram of 22-carat gold is being sold at LKR 44,626.