Weather Forecast மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Weather Forecast
According to a statement issued by the Department of Meteorology, showers or thundershowers may occur at several places in the Western and Sabaragamuwa Provinces, as well as in the Galle and Matara districts, after 2.00 p.m. today (25).
The report further states that mainly dry weather will prevail in other parts of the country.
Misty conditions can be expected during the early morning in some areas of the Western, Central, Sabaragamuwa, and Uva Provinces, along with the Galle and Matara districts.
The Department of Meteorology has also requested the public to take necessary precautions to minimize potential damages caused by temporary strong winds and lightning during thundershowers.
