Dry Weather Conditions Prevail in the Country Today
Dry Weather Conditions Prevail in the Country Today

நாட்டில் இன்று வறட்சியான வானிலை

Dry Weather Conditions Prevail in the Country Today சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும். 

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Dry Weather Conditions Prevail in the Country Today

The Department of Meteorology has forecast that showers or thundershowers may occur at a few places in the Sabaragamuwa Province and in the districts of Galle, Matara, Kalutara, and Nuwara Eliya during the evening or night.

Meanwhile, mainly dry weather conditions will prevail in the other parts of the country.

Misty conditions can be expected at some places in the Central, Sabaragamuwa, North Central, and Uva Provinces, as well as in the districts of Kurunegala, Vavuniya, Galle, and Matara during the morning.

During thundershowers, fairly strong winds may occur temporarily, and the public is advised to take necessary precautions to minimize damages caused by lightning.