நெற் செய்கைக்கு E.M (தாய் திரவத்தினை) செயல்திறன் ஆக்கிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
ஒரு லீட்டர் தாய் திரவத்தை சுமார் ஆறு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
இரண்டாம் நிலை திரவத்தை 14 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
பாலில் இருந்து தயிர் உறை போடுவது போல, 1 லீட்டர் ஈ.எம் தாய் திரவத்தில் இருந்து, சரியான முறையில் உரிய காலத்துக்குள் தொடர்ந்து தொகுதி தொகுதியாக உற்பத்தி செய்யப்படும் ஈ.எம் இரண்டாம் நிலை திரவத்தை எட்டுமாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தொடர்ந்து தயாரித்து பாவித்த எமக்குத் தெரிந்த விவசாயிகளும் இலங்கையில் உள்ளனர். 👨🌾🇱🇰
E.M கரைசலை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யக் கூடிய முறை கீழ்வருமாறு.
வாங்கியவுடன் 1 லீட்டர் தாய் திரவத்தையும் முற்றிலும் பயன்படுத்த வேண்டாம். ❌
நம்முடைய பண்ணையின் தேவை மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப 100 மில்லி அல்லது 200 மில்லி தாய் திரவத்தை பயன்படுத்தி இரண்டாம் நிலை திரவம் தயாரிக்கவும்.
நம் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து இரண்டாம் நிலை திரவம் கிடைக்குமாறு திட்டமிடுங்கள். 📊
இரண்டாம் நிலை திரவம் தயாரிக்கும் போது நொதிக்க வைக்க கண்ணாடி கொள்கலன்களை தவிர்க்கவும். (அழுத்தத்தால் வெடிக்கும் அபாயம் உள்ளது) ⚠️
பிளாஸ்டிக் கலன்களின் உள்ளே நொதித்தலின் போது உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் ஒரு முறை மூடியை மெதுவாக ஒரு சுற்று திறந்து மூட வேண்டும்.
E.M இரண்டாம் நிலை திரவம் தயாரிக்க தேவையான பொருட்கள் 🧪
E.M தாய் திரவம் (Mother culture) – 1 L
25 லீட்டர் கொள்ளளவு உள்ள இறுக்கமான மூடி அமைப்புள்ள பிளாஸ்டிக் வாளி – 1
சக்கரை / சிவப்பு சீனி / கருப்பட்டி (நன்கு தூளாக்கியது) – 2 கிலோ
E.M கரைசல் – 1 லீட்டர்
தண்ணீர் – 17 லீட்டர் 💧
தயாரிக்கும் முறை 🔄
முதலில் சக்கரை 2 கிலோவை தட்டி துகள்களாக வாளியுள்ளே கொட்டவும்.
5 லீட்டர் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை நன்கு கரைக்கவும்.
பின்பு E.M கரைசல் ஒரு லீட்டரை ஊற்றவும்.
அதன்பிறகு மீதமுள்ள 12 லீட்டர் தண்ணீரை ஊற்றி ஒரே பக்கமாக சில முறை நன்கு கலக்கி மூடிவிட வேண்டும்.
தினமும் ஒரு முறை மெதுவாக திறந்து மீண்டும் மூடவும். 🔁
இவ்வாறு சுமார் 7–10 நாட்களில் E.M 2 கரைசல் அதிக அளவில் உற்பத்தியாகும். இது நன்றாக நொதித்து புளிப்பு வாசம் தரும். 🍶
E.M 2 கரைசலின் பயன்கள் 🌾
நெல் உட்பட்ட அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் அளவு ⚖️
ஒரு லீட்டர் E.M 2 கரைசலுடன் 10 லீட்டர் தண்ணீர் (1:10) என்ற விகிதத்தில் கலந்து தண்ணீர் பாய்ச்சும் போது வெஞ்சுரி தாங்கியில் ஊற்றி விடலாம் அல்லது நீர் பாயும் வரப்பில் கலந்து விடலாம்.
மேலும்,
ஒரு லீட்டர் E.M 2 கரைசலுக்கு 10 லீட்டர் (1:10) தண்ணீர் கலந்து மாலை வேளையில் பயிர்களுக்கு வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும். 🌇
நம் மண்ணில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மண்ணில் உள்ள சத்துக்களை சிதைத்து பயிர்கள் எளிதாக எடுத்துக்கொள்ள உதவுகிறது. 🦠
மேலும் இந்த நுண்ணுயிர்கள் நெற்பயிர் மற்றும் மற்ற பயிர்களில் ஏற்படும் சில நோய்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்த உதவுகின்றன.
இதனால் விளைச்சல் 10% முதல் 30% வரை அதிகரிக்கும். 📈
மண்வளம் பாதுகாக்கப்படும்.
பயிர்களுக்கு ஏற்படும் நோய்த் தாக்கம் குறையும்.
நெல் மணிகள் அதிகமாக உருவாகும்.
மண்ணில் உள்ள மெதுவாக சிதையும் பசளைகளை விரைவாக சிதைக்க உதவும்.
ஈ.எம் இரண்டாம் நிலை திரவத்தின் 1 லீட்டரை எடுத்து மீண்டும்,
சக்கரை / சிவப்பு சீனி / கருப்பட்டி – 2 கிலோ
E.M கரைசல் – 1 லீட்டர்
தண்ணீர் – 17 லீட்டர்
இவற்றை சேர்த்து அடுத்த தொகுதியை தயாரிக்கலாம். 🔄
இவ்வாறு 14 நாட்களுக்கு ஒருமுறை புதிய தொகுதிகளை உருவாக்கி சுமார் எட்டுமாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.
ஈ.எம் இரண்டாம் நிலை திரவம் மற்றும் மீன் அமிலத்தை நெற் செய்கையில் வாரம் ஒருமுறை மாறி மாறி பயன்படுத்துவது மிகுந்த பலன் தரும். 🐟🌱
இது நெற் செய்கையில் எமது சொந்த அனுபவம் மற்றும் அவதானிப்புகளின் அடிப்படையில் கூறப்படுகிறது.
(தொடரும்…) ✍️
CSJ Agri
06/03/2026