சமையல் எரிவாயு விலை உயர்வு பொருளாதாரம்

சமையல் எரிவாயு விலை உயர்வு

🔄 Updated:
1 min read
💬 0

நாட்டில் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய நிறுவனங்கள் தமது விலை திருத்தத்தை நேற்றிரவு (5)அறிவித்தன.

எரிவாயு விலைத்திருத்தம் நேற்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில்அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 4765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 308 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அதன் புதிய விலை,1910 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2.3 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 890 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சிங்கள புதுவருடம் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதை கருத்திற் கொண்டு இயலுமானவரை குறைந்தபட்ச விலை அதிகரிப்பை மேற்கொண்டதாக லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு கொள்கலனுக்கான விலையை அதிகரித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 1070 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் 5700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் 418 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் 2280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.