உள்நாட்டுச் சந்தையில் குறைந்தது தங்கம் பொருளாதாரம்

உள்நாட்டுச் சந்தையில் குறைந்தது தங்கம்

🔄 Updated:
1 min read
💬 0

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (09) ஒரு பவுணுக்கு 5,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி நுகர்வோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு மத்தியில், உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.

இந்நிலையில், ஒரே நாளில் பவுணுக்கு 5,000 ரூபாயால் விலை சரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் விலை வீழ்ச்சியானது நகை வாங்குவோருக்கு மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.