ஊடகங்கள் பல்வேறு விதமாக காணப்படுவதுடன் பல்வேறு வித செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் எமது மாற்றம் செய்திகள் அரசியல் சாராத சமூகம் மற்றும் சமூகத்தின் மேம்பாடுகளை மட்டும் கருத்தில் கொண்டு அது சார்பான விடயங்களை உள்ளடக்கிய ஒரு தரவு செய்தி தளமாகும்.
அனைத்து தமிழ் பேசும் உறவுகளையும் சென்றடையும் ஒரு பொதுவான ஊடகமாகவும், சமூகத்தின், காலத்தின் தேவைகளுக்கேற்ப மாற்றமடையும் விடயங்களை தன்னகத்தே கொண்டு நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சமூகங்களின் மாற்றத்தையும் அதன் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு அவற்றினை உலகில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் பகிர்ந்திடும் தனித்துவமான ஒரு செய்தி தரவு தளமாக இந்த மாற்றம் செய்தி தளம் தனது செயற்பாட்டினை 2024 செப்ரம்பர் 6 ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
செய்திகளை பரப்பும் ஒரு ஊடகமாக மட்டும் அல்லாமல் பல்வேறு பட்ட விடயங்களை தகவல்களாக உள்ளடக்கியும், அத்தோடு அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் பல்வேறுபட்ட விடயங்கள் தாங்கிய இந்த செய்தி தளத்தின் செயற்பாட்டிற்கு பொதுவாக அனைவரும் பங்களிப்பு செய்ய முடியும். இங்கு காணப்படுபவற்றில் பலவிடயங்கள் தரவுகளை தாங்கி நிற்பதால் நீங்களும் உங்களிற்கு சம்பந்தப்பட்ட விடயங்களை எம்முடன் பகிரந்து இங்கு பதிவேற்றி பாதுகாக்க முடியும்.
மாற்றம் செய்தி ஊடகமானது பொதுவான ஒரு ஊடகமாக அனைவரையும் ஒன்றிணைத்திட எல்லோரும் உங்களின் பங்களிப்பினை வளங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் மாற்றம் செய்திகள் தனது பயணத்தை மேற்கொள்கின்றது.
அன்புடன்
நிருவாகம்