தொழில் முனைவராக ஆசையா?

தொழில் முனைவராக ஆசையா?

இங்கு நான் குறிப்பிடும் தொழில் முயற்சியாளருக்கென இருக்க வேண்டிய சில தகைமைகள், திறன்களை பட்டியலிடுகின்றேன்.

  1. முதலில் நீங்கள் உறுதியான ஒரு தீர்மானத்தை எடுக்கக் கூடியவரா?
  2. சுய தன்னம்பிக்கை உயர்ந்தவரா?
  3. தூரநோக்காக சிந்திக்ககூடியவரா?
  4. புத்தகத்துடன் கூடிய புதுமைகளை புனையும் நபரா?
  5. தொடர்தேர்ச்சியாக உங்களை நீங்களே மேம்பாடு செய்யும் வல்லமை உடையவரா?
  6. சந்தை நிலவரங்களை பற்றி அறிந்து பகுப்பாய்வு செய்யும் திறமையுள்ளவரா?
  7. நிதியினை கையாளவும் முகாமைத்துவம் செய்யவும் அடிப்படையான திறன் உள்ளவரா?
  8. பிரச்சனைகளை தீர்க்கும் திறன் உங்களிடம் உள்ளதா?
  9. மனிதர்களை முகாமைத்துவம் செய்யக்கூடிய மனித மேலாண்மை திறன் உள்ளதா?
  10. தற்கால தொழில்நுட்பத்திற் கேற்றவாறு அடிப்படையான அறிவு உள்ளவரா?
  11. கால மாற்றங்களுக்கேற்ப நெகிழ்வு தன்மையுடன் செயல்பட கூடியவரா?
  12. உங்கள் வியாபார சந்தைப்படுத்தலை சிறந்த முறையில் தெளிவுபடுத்தி பேசக்கூடிய வல்லமை உடையவரா?
  13. சவால்களை எதிர்நோக்கி நேர்மறையான சிந்தனையுடன் அதனை கையாளும் பக்குவம் உள்ளதா?
  14. இழப்புக்களை தாங்கவும் அதிலிருந்து மேலெழக்கூடிய ஆளுமை உடையவரா?
  15. நேர முகாமைத்துவத்தில் கவனமெடுப்பவரா?

மேலுள்ள வினாக்களில் 10 இற்கு மேற்பட்ட வினாக்களுக்கு விடை ஆம் என்றால் நீங்கள் முயற்சியாளராவதற்கு தயாராக இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்

உங்களிற்கான எனது ஆலோசனை சிலவற்றை “இழப்பதனால் தான் சிலவற்றை பெற்றுக் கொள்ள முடியும்” எனவே நீங்கள் தொழில் முயற்சியான்மையில் ஆரம்பகாலங்களில் உங்கள் நேரத்தினையும், பொழுதுபோக்கு விடயங்களையும் இழக்க தயாராக இருங்கள். உங்களை நீங்களே ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் உங்கள் தொழில் முயற்சியினை சிறப்பான முறையில் முன்னெடுத்து பலருக்கு தொழிலை வழங்கும் ஒரு தொழில்வல்லுனராக வருவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

க.பிரதீஸ்வரன் (வழிகாட்டல் ஆலோசகர்)
நிறைவேற்று பணிப்பாளர்
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி