cucumber farming in batticaloa

மருந்தும் விருந்தும் மட்டக்களப்பிலல்லோ இருக்குதப்பா!

வசந்த காலம் வந்தால் ஐம்புலனுக்கும் விருந்துதான் கேளுங்கோ! பூத்துக்குலுங்கும் மரங்கள் கண்களுக்கு விருந்து, அதில் புதிதாய் வரும் மணம் மூக்கிற்கு விருந்து, காத்துக்கிடக்கும் தேனீக்கள் கள்ளையுண்ணும் சப்தம் காதினிற்கு விருந்து, கனிந்து கிடக்கும் பழங்கள் எங்கள் நாவினிற்கு விருந்து, காவடியும் காவியமும் கற்பூரச்சட்டிகளும், சேவடியைப் பணியும் திருப்தியும் மெய்யினிற்கு விருந்து அதுவே சொர்க்கத்தின் மருந்து.

மருந்தும் விருந்தும் மட்டக்களப்பிலல்லோ இருக்குதப்பா! இருந்தாப்புல எங்காவது போவதுதான் எனக்கு வழக்கம். வைக் ஏறி மாநகரம் மட்டும் சென்றேன், வரும் வழியில் தெருக்களின் ஓரம் பழக்கடைகள் பலப்பல கண்டேன்.

இது வெள்ளரி முந்திரிகைச் சீசன் பாருங்கோ! பைக்கட்டில் அடைத்தவையுமில்லை, பாதுகாக்க பலகெமிக்கல் அடித்தவையும் இல்லை. பறித்து உடன் பருக இளநீர் நொங்கு, படுத்தும் வெக்கைக்கு குளிராய் வெள்ளரிப்பழம், கொடுப்புக்குள் வைத்துப் புளிய முந்திரிகை கொடுத்து வைத்தவங்கப்பா நாங்க! எடுப்புத்தான் எங்களுக்கு பாருங்க!

கிரான் குளம், புதுக்குடியிருப்பு புகுதிகளில்தான் இந்த வெள்ளரி (CUCUMBER) அதிகம் செய்கை பண்ணப்படுகின்றது. இவர்கள் இவற்றை அழகாய் தென்னை ஓலைகளில் பொதி செய்து விற்ப்பனை செய்து வருகின்றனர்.

வெள்ளரிக்குள் இத்தனை விடயம் இருக்கிறதா என ஒரு தளத்துக்கு சென்று தரிசித்தபோது அறிந்துகொண்டேன் பாருங்கோ!

வெள்ளரி படரும் கொடி வகையைச் செர்ந்த ஒரு காய் கறி வகை நல்ல மூலிகையும் கூட. இதன் முக்கிய மூன்று வகைகள் SLICING, PICKLING & BURPLESS ஆகும்.காய் கறி போல் சாப்பிடப் பயன் படுத்துவார்கள். பிஞ்சாக இருக்கும் போது அப்படியே யாவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

நட்ட 30 வது நாளில் பூக்க ஆரப்பிக்கும்.50 நாளிலிருந்து பறிக்க ஆரம்பிக்கலாம். வெள்ளரியின் தாயகம் இந்தியா தான்.3000 வருடங்களுக்கு முற்பட்டது. இந்த மாதத்தில் வெள்ளரி அதிகம் விளைவிக்கப்படுகிறது. மார்க்கட்டில் எல்லா இடங்களிலும் பழமுதிர் நிலையங்களிலும் கிடைக்கின்றது..

மருத்துவப் பயன்கள்

வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும். செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும். வெள்ளிரியை உண்பதால் ‘பசிரசம்’ எனும் ஜீரண நீர் சுரக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு.

மருத்துவப் பயன்கள் https://www.youtube.com/watch?v=WayFfNvRuH8

இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு. வெள்ளிரிப் பிஞ்சை உட்கொண்டால் மூன்று தோசமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன. புகை பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரளிக்கின்றது .அதையும் போக்க வல்லது.

மூளைக்குக் கபால சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டி புத்துணர்ச்சி தரும். கபம் இருமல் நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல. 100 கிராம் வெள்ளரியில் 18 கிராம் கலோரிதான் இருக்கிறது. குறைந்த கலோரி உள்ள காய்கறியாகும். இது சிறுநீர் பிரிவைத் தூண்டக் கூடியது. இரைப்பையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தும்.

S. தணிகசீலன்

For more articles visit https://maatramnews.com/

6 facts about Batticaloa’s Cucumber Farming

Batticaloa’s Sustainable Cucumber Farming offers a feast for all five senses, especially during spring! The trees laden with blossoms are a visual treat for the eyes, their fresh fragrance a delight for the nose. The buzzing of bees waiting to sip nectar is a symphony for the ears, the ripe fruits are a treat for the taste buds, and the serene devotion with camphor lamps and hymns provides immense satisfaction for the soul. This is nothing short of heaven’s remedy.”

The saying goes: “Medicine and feast are found in Batticaloa!” Whenever I’m in search of unique experiences, I always explore new places. Recently, I visited a bustling city by the banks of the Vaigai River. On my way back, I noticed many fruit and vegetable stalls lining the streets.

It’s cucumber season, folks! These aren’t cucumbers treated with chemicals for preservation or packed in plastic. These are freshly picked cucumbers ready to be savored. Alongside, tender coconuts and palm fruits (nongu) provide perfect relief from the summer heat. And when it comes to tamarind and cashews, Mattakkalappu’s reputation precedes itself. We’re the people who generously share what we have!

The villages of Iranikulam and Puthukudiyiruppu are known for their extensive cucumber cultivation. Farmers here beautifully package these cucumbers in coconut leaves and sell them in markets.

When I visited one of these fields, I was amazed to learn about the variety and medicinal value of cucumbers!

The Versatile Cucumber

Cucumber, a climbing plant, belongs to the gourd family and is considered not just a vegetable but also a medicinal herb. Its primary varieties include Slicing, Pickling, and Burpless cucumbers. While it can be eaten as a vegetable, most people enjoy cucumbers fresh, especially when tender and crisp.

Cucumber plants start flowering around the 30th day after planting, and harvesting begins around the 50th day. India is the birthplace of cucumbers, with a history dating back over 3,000 years. These are widely cultivated during this season, and you can find them in markets and produce stores everywhere.

Health Benefits of Cucumbers

Cucumbers are packed with water content, which helps combat dehydration and stimulates appetite. They provide a cooling effect to the body. Rich in essential minerals such as sodium, calcium, magnesium, iron, phosphorus, sulfur, silicon, and chlorine, cucumbers also contain a significant amount of potassium, which helps in producing red blood cells.

  • Digestive Health: Cucumber promotes better digestion and increases appetite. It stimulates the secretion of digestive juices, as confirmed by scientific studies.
  • Skin Benefits: Cucumber can reduce internal heat, tackle skin issues like rashes and eczema, and relieve constipation. Its juice has cleansing properties and is effective in treating acne and other skin ailments.
  • Detoxification: For smokers, cucumbers help neutralize the harmful nicotine toxins in the body.
  • Cooling the Brain: Cucumber reduces excess heat in the head, providing relief and refreshment.

However, cucumbers are not suitable for those with respiratory issues like asthma, excessive phlegm, or chronic cough.

Nutritional Value

A 100-gram serving of cucumber contains only 18 calories, making it an ideal choice for those seeking low-calorie foods. Additionally, cucumbers act as natural diuretics, promoting healthy urination and aiding in kidney function. They also help in healing ulcers in the stomach and intestines.

Farming Insights

Cucumber farming is a rewarding activity for farmers. With its short growing period and relatively low maintenance, cucumbers offer good yields. The traditional method of packaging cucumbers in dried coconut leaves not only enhances their shelf life but also reflects the eco-friendly practices of these communities.

Conclusion

Cucumber is more than just a vegetable—it’s a natural medicine. From promoting hydration to healing internal ailments, this humble vegetable offers a wide array of benefits. Next time you enjoy a crisp cucumber, remember the hardworking farmers who bring this gift of nature to your plate and the rich history that accompanies it.

Indeed, medicine and feast can often be found in the most unexpected places, such as Batticaloa. Let’s celebrate these treasures of nature!

for more articles https://maatramnews.com/