Communication Skills
Communication Skills

மாணவர்களின் தொடர்பாடல் திறனை மேம்படுத்தக்கூடிய 8 வழிமுறைகள்

கல்விப் பயணத்தில், புத்தக அறிவு மட்டும் போதுமானதல்ல. தொடர்பாடல் திறன்கள் (communication skills) ஒரு மாணவனின் முழுமையான வளர்ச்சிக்கும், எதிர்கால வெற்றிக்கும் மிக முக்கியமான பங்காற்றுகின்றன. ஒரு திட்டத்தை சமர்ப்பிக்கும் போதோ, குழு விவாதங்களில் கலந்துகொள்ளும் போதோ, கருத்துக்களை எழுத்தாகவும் வாய்மொழியாகவும் தெளிவாக தெரிவிக்கும் போதோ, திறமையான தொடர்பாடல் மிக முக்கியமாக அமைகிறது.

இந்த கட்டுரையில், ஒரு மாணவராக நீங்கள் உங்கள் தொடர்பாடல் திறனை மேம்படுத்த 8 நடைமுறை வழிகளை பார்ப்போம்.

  1. செவிமடுக்கும் பழக்கத்தை அபிவிருத்தி செய்யுங்கள்.

திறமையான தொடர்பாடல், கேட்டறியும் திறனிலிருந்தே துவங்குகிறது. இது வெறுமனே கேட்பது அல்ல, பேசுபவரின் கருத்தை முழுமையாகப் புரிந்து கொள்வது. இது active listening என அழைக்கப்படுகிறது.

ஏன் இது முக்கியம்?

  • பேசுபவருக்கு மதிப்பையும் கவனத்தையும் காட்டுகிறது.
  • பேசும் உள்ளடக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ள உதவுகிறது.
  • பதிலளிக்கும் போது எண்ணியபடி பதில் கூற உதவுகிறது.

எப்படி பழகுவது?

  • பேசும்போது, மெதுவாக சிரித்து, “சரி”, “அப்படியா?” போன்ற சிறிய பதில்கள் கூறுங்கள்.
  • “அதாவது நீங்கள் சொல்வது…” எனச் சொல்வதன் மூலம் கேட்டதை மறுபடியும் உறுதி செய்யுங்கள்.
  • புரியாத பகுதிகளைத் தெளிவாக்க கேள்வி கேளுங்கள்.

2. உங்கள் உடல்மொழியை (Body Language) மேம்படுத்துங்கள்.

    உடல்மொழி என்பது முகபாவனைகள், கை சைகைகள், உடல் நிலை, கண் பார்வை போன்றவற்றைக் கொண்டது. இது உங்கள் சொற்களைவிட அதிகம் பேசும்.

    ஏன் இது முக்கியம்?

    • நம்பிக்கையையும் நட்பையும் உருவாக்குகிறது.
    • உங்கள் வார்த்தைகளுக்கு வலுவூட்டுகிறது.
    • தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

    உடல்மொழி மேம்படுத்தும் வழிகள்

    • நேராக நிமிர்ந்து இருங்கள்.
    • இயற்கையாக கை சைகைகள் பயன்படுத்துங்கள்.
    • கண்களில் நேராக பாருங்கள் (மிரட்டாமல், நம்பகரமாக).
    • தேவையான இடங்களில் இனிமையாக சிரிக்கவும்.

    3. புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்

      தெளிவாகவும் ஆழமாகவும் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த புதிய சொற்கள் (Vocabulary) முக்கியம்.

      ஏன் முக்கியம்?

      • உங்கள் பேச்சுக்கும் எழுத்துக்கும் தெளிவை அளிக்கிறது.
      • உங்கள் எழுத்துக்களில் பண்பாட்டையும் தாக்கத்தையும் கொண்டுவந்து விடுகிறது.
      • தேர்வுகளிலும், விரிவான பதில்களிலும் உதவுகிறது.

      எப்படி கற்றுக்கொள்வது?

      • தினசரி பத்திரிகை, புத்தகங்கள், வலைப்பதிவுகள் படியுங்கள்.
      • ஒரு சொற் குறிப்பேடு வைத்துக் கொண்டு புதிய சொற்களை எழுதுங்கள்.
      • Vocabulary.com, Quizlet போன்ற செயலிகளை பயன்படுத்துங்கள்.
      • புதிய சொற்களை உங்கள் பேச்சிலும் எழுதுகைகளிலும் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

      4. Public Speaking வாய்ப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

        மற்றவர்களுக்கு முன்னிலையில் பேசுவது பயத்தை எதிர்கொள்ளவும், திறன்களை மேம்படுத்தவும் உதவும். Toastmasters, விவாதக் குழுக்கள், நாடகக் கழகங்கள் போன்றவை உதவியாக இருக்கும்.

        ஏன் இது முக்கியம்?

        • தன்னம்பிக்கையை வளர்க்கும்.
        • பொது இடங்களில் பேசும் பயத்தை குறைக்கும்.
        • எண்ணங்களை ஒழுங்காகத் தெரிவிக்க கற்றுக்கொடுக்கும்.

        எப்படி தொடங்குவது?

        • உங்கள் பாடசாலைகளிலும்/கல்லூரியில் உள்ள பேசும் அல்லது வழிகாட்டி குழுக்களில் சேருங்கள்.
        • நிகழ்ச்சிகளில் வரவேற்பாளர் ஆக முன் வாருங்கள்.
        • வகுப்பு விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள்.

        5. எழுத்துத் திறனை மேம்படுத்துங்கள்

          எழுத்து என்பது எண்ணங்களை தெளிவாக பதிவு செய்யும் ஒரு கருவி. உங்கள் கட்டுரைகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடக பதிவுகள் ஆகியவற்றின் மூலம் இது தெரியவரும்.

          ஏன் இது முக்கியம்?

          • கல்விச் செயல்களில் உதவுகிறது.
          • சிந்தனை திறனை வளர்க்கிறது.
          • தொழில் முனைவோர், வேலைவாய்ப்பு முறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

          எப்படி மேம்படுத்துவது?

          • தினமும் எழுத பழகுங்கள் – ஒரு டைரி அல்லது வலைப்பதிவு தொடங்குங்கள்.
          • இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பை கற்றுக்கொள்ளுங்கள்.
          • சிறந்த எழுத்துக்களை படித்து அதன் அமைப்பை கவனிக்கவும்.
          • ஆசிரியர்கள், நண்பர்களிடம் பின்னூட்டல் பெறுங்கள்.

          6. குழு விவாதங்களில் கலந்துகொள்ளுங்கள்

            Group discussions இல் பேசும் திறனையும் கேட்கும் திறனையும் ஒரே நேரத்தில் மேம்படுத்தும்.

            ஏன் இது முக்கியம்?

            • எண்ணங்களை விரைவாக சொல்ல கற்றுக்கொள்கிறீர்கள்.
            • உங்கள் கருத்துகளை விவாதிக்கும் விதமாக கற்றுக்கொள்கிறீர்கள்.
            • குழு பணியிலும், கலந்துரையாடலிலும் திறமையடைவீர்கள்.

            வழிகள்:

            • முன்கூட்டியே தகவல்களை தயார் செய்யுங்கள்.
            • அமைதியுடன் பேசுங்கள், மரியாதையுடன் பங்கெடுங்கள்.
            • ஆதாரங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளை பயன்படுத்துங்கள்.
            • மற்றவர்களின் கருத்துகளைக் கேட்டு, உங்கள் கருத்துகளுடன் இணைக்க முயலுங்கள்.

            7. பின்னூட்டல்களை (Feedback) கேளுங்கள்.

              பிறரிடமிருந்து பொதுவான மற்றும் பயனுள்ள பின்னூட்டல்களை பெறுவது உங்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம்.

              ஏன் இது முக்கியம்?

              • உங்கள் பேசும் அல்லது எழுதும் பாணி பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது.
              • பலவீனங்களை அடையாளம் காண உதவுகிறது.
              • பயிற்சி மற்றும் சிந்தனையை ஊக்குவிக்கிறது.

              எப்படி பெறுவது?

              • ஆசிரியர் அல்லது வழிகாட்டியிடம் உங்கள் பேச்சு அல்லது எழுத்துக்காக விமர்சனங்களை கேளுங்கள்.
              • நண்பர்கள், சக மாணவர்கள் உங்கள் பேச்சை எப்படி புரிந்தனர் என்பதை கேளுங்கள்.
              • பின்னூட்டல்களை உளவியல் ரீதியாக ஏற்று, அதை மேம்பாட்டிற்கு பயன்படுத்துங்கள்.

              8. தொழில்நுட்பத்தை (Technology) உபயோகிக்கவும்.

                நீங்கள் தொடர்பாடல் திறனை மேம்படுத்த பல ஆன்லைன் கருவிகள் மற்றும் செயலிகள் இருக்கின்றன.

                ஏன் இது முக்கியம்?

                • உங்கள் நேரத்திற்கு ஏற்ப பயிற்சி செய்யலாம்.
                • உலகளாவிய தரவுகள் மற்றும் உள்ளடக்கங்களை அறியலாம்.
                • கற்றல் சுறுசுறுப்பாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.

                கருவிகள்:

                • Grammarly – இலக்கணம் மற்றும் எழுத்துத் தெளிவை மேம்படுத்த.
                • Duolingo – மொழித்திறனை மேம்படுத்த.
                • TED Talks, YouTube – சிறந்த பேச்சுகளை பார்க்க.
                • Speechify – சொல்பதிவுகள் மற்றும் பேச்சுப் பயிற்சி.
                • Google Docs – எழுத்து மற்றும் திருத்தத்திற்கு.

                திறமையான தொடர்பாடல் என்பது வழிவகுக்கும் திறமை மட்டுமல்ல, அது மற்றவர்களுடன் உறவுகளை உருவாக்கும் திறன், புரிந்துகொள்ளும் திறன், நம் எண்ணங்களை தெளிவாகவும் நம்பிக்கையுடன் வெளிப்படுத்தும் திறனாகும். ஒரு மாணவராக நீங்கள் இவற்றை எப்போது கற்றுக்கொண்டாலும் அது உங்கள் கல்விப் பயணத்தையும், எதிர்கால வாழ்க்கையையும் சிறப்பாக மாற்றும்.

                ஒவ்வொரு நாளும் சிறு முயற்சிகள் எடுத்துக்கொள்ளுங்கள். இன்று ஒரு நண்பரிடம் புதிய வார்த்தை பேசுங்கள், நாளை ஒரு சிறிய கட்டுரை எழுதுங்கள். தொடர்ந்து பயிற்சி செய்தால், உங்கள் தொடர்புத் திறன் தானாகவே உயர்வு காணும்.

                திறமையான தொடர்பு என்பது வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்ட ஒரு ஆற்றல் – இன்று தொடங்குங்கள் .

                மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

                8 Ways to Improve Your Communication Skills as a Student

                In the journey of education, academic knowledge is only one part of the equation. Communication skills play a crucial role in a student’s overall development and future success. Whether it’s presenting a project, participating in group discussions, or expressing ideas in writing, effective communication can enhance your academic experience, boost confidence, and prepare you for professional life.

                Let’s explore 8 practical and effective ways to improve your communication skills as a student.


                1. Practice Active Listening

                Effective communication starts with listening—not just hearing, but truly understanding what others are saying. Active listening involves paying full attention to the speaker, making eye contact, avoiding interruptions, and giving feedback.

                Why it matters:

                • It shows respect and interest in the conversation.
                • Helps you understand the message better.
                • Allows you to respond thoughtfully rather than reactively.

                Tips to improve active listening:

                • Nod occasionally and use small verbal cues like “I see,” “Interesting,” or “Go on.”
                • Summarize what you heard by saying, “So you’re saying that…”
                • Ask questions to clarify your understanding.

                2. Work on Your Body Language

                Non-verbal communication—such as facial expressions, gestures, posture, and eye contact—can speak louder than words. Your body language should match your message to ensure clarity and engagement.

                Why it matters:

                • Helps in building trust and rapport.
                • Enhances the impact of your verbal message.
                • Shows confidence and openness.

                How to improve body language:

                • Stand or sit up straight during conversations or presentations.
                • Use hand gestures naturally to emphasize points.
                • Make eye contact, but don’t stare—it should be friendly and respectful.
                • Smile genuinely when appropriate.

                3. Expand Your Vocabulary

                A good vocabulary allows you to express yourself more clearly and precisely. It gives you the tools to articulate thoughts in a way that resonates with your audience.

                Why it matters:

                • Improves clarity and richness in both written and spoken communication.
                • Makes your message more persuasive and professional.
                • Enhances academic writing and essay skills.

                Tips to grow your vocabulary:

                • Read books, newspapers, or blogs regularly.
                • Keep a vocabulary journal and write down new words with their meanings.
                • Use vocabulary-building apps like Vocabulary.com or Quizlet.
                • Practice using new words in your conversations and writing.

                4. Join Public Speaking Groups or Clubs

                One of the most effective ways to improve communication is to practice speaking in front of others. Clubs like Toastmasters, school debate teams, or drama societies offer great opportunities for this.

                Why it matters:

                • Builds confidence and fluency.
                • Helps overcome the fear of speaking in public.
                • Teaches how to organize and present ideas clearly.

                How to get started:

                • Look for a communication or leadership club in your school or college.
                • Volunteer to give a short speech or host an event.
                • Participate in class debates or student council meetings.

                5. Improve Your Writing Skills

                Clear writing reflects clear thinking. Whether it’s essays, emails, or social media posts, written communication is a vital skill for students. Strong writing skills help you perform better academically and communicate effectively with teachers and peers.

                Why it matters:

                • Essential for academic assignments and applications.
                • Builds persuasive and critical thinking abilities.
                • Helps in professional communication and career development.

                Ways to improve writing:

                • Write regularly—start a journal or blog.
                • Learn grammar and sentence structure rules.
                • Read and analyze good writing from reputable sources.
                • Ask for feedback from teachers or mentors.

                6. Engage in Group Discussions

                Group discussions are a great way to improve both speaking and listening skills. They challenge you to articulate your ideas, respond to differing opinions, and stay respectful in debates.

                Why it matters:

                • Encourages thinking on your feet.
                • Develops the ability to present arguments logically.
                • Enhances teamwork and interpersonal communication.

                Tips for better group discussions:

                • Prepare your points in advance if possible.
                • Stay calm and courteous even during disagreements.
                • Back your opinions with facts or examples.
                • Acknowledge others’ points and build upon them.

                7. Seek Constructive Feedback

                Feedback is a powerful tool for improvement. Whether it’s about a presentation, essay, or conversation, asking for input helps you understand your strengths and areas for improvement.

                Why it matters:

                • Offers a new perspective on your communication style.
                • Helps identify bad habits or weaknesses.
                • Encourages continuous growth and self-awareness.

                How to get feedback:

                • Ask a teacher or mentor to review your speech or written work.
                • Request your friends to point out unclear or awkward parts during conversations.
                • Reflect on the feedback and make conscious efforts to improve.

                8. Use Technology to Your Advantage

                There are countless online tools and resources that can help you become a better communicator. From speech-practice apps to grammar checkers and communication courses, technology makes it easier to learn at your own pace.

                Why it matters:

                • Offers self-paced learning and practice.
                • Gives access to global content and professional insights.
                • Makes learning interactive and engaging.

                Top tools to try:

                Communication is not just about speaking well; it’s about connecting with people, understanding different perspectives, and expressing yourself clearly and confidently. As a student, mastering these skills will not only enhance your academic journey but also prepare you for life beyond the classroom.

                Improving communication takes time and consistent effort. Start small—listen actively in your next class discussion, write a short article, or initiate a conversation with a peer. The more you practice, the more natural it will become.

                Remember: The ability to communicate effectively is one of the most valuable skills you can develop as a student—and it’s never too early to start.

                For more articles visit us Maatram News