சாப்பிட்டவுடன் குட்டியாக ஒரு வாக் செல்வதால் உடலுக்கு Benefits of Walking for 10 Minutes After Eating எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும் என்கின்றன ஆய்வுகள். அந்த நன்மைகளை முழுமையாக பெற, நடக்கும்போது சில விஷயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
1) சாப்பிட்டவுடன் நடக்கும்போது, உடல் இயக்கம் அதிகரிப்பதால் வயிறு மற்றும் குடலின் செயல்பாடுகள் அதிகரிக்கும். இதனால் செரிமானம் மேம்பட்டு, அஜீரண கோளாறுகள், உப்புசம், வயிறு கனமாக இருத்தல் போன்றவை தடுக்கப்படுகிறது.
2) டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு, உடல் அசைவு குறைவாக இருக்கும்போது ரத்த சர்க்கரை அளவு உயரும். அப்படியானவர்கள், சாப்பிட்டவுடன் நடப்பதன் மூலம், அவர்களின் ரத்த சர்க்கரை அளவு சீராக்கப்படும்.
3) சாப்பிட்டவுடன் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள், தீவிர நடைப்பயிற்சியால் கிடைக்கும் நன்மைகளைவிட அதிகம் என ஆய்வின்மூலம் நிரூபித்துள்ளனர் நியூசிலாந்தை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர்கள்.
4) சரியான டயட் பின்பற்றுவோர் சாப்பிட்டவுடன் நடப்பதன்மூலம், உடல் எடையை குறைக்க முடியும். காரணம், உடல் எடையை குறைக்க விரும்புவோர் கலோரிகளில் கவனம் செலுத்த வேண்டும். சாப்பிட்டவுடன் நடப்பதன் மூலம், கலோரி எரிக்கப்படும் நேரம் சீராகும். எனவே உடல் எடை குறையும்.
5) இத்தாலியை சேர்ந்த ஃபெராரா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து மேற்கொண்ட ஆய்வொன்றின் முடிவில், ‘அதிகம் உடல் இயக்கம்’ இல்லாத வாழ்வியலில் உள்ளவர்கள் உரிய நிபுணர் ஆலோசனையின்பேரில் இந்த ‘சாப்பிட்ட பின் நடக்கும்’ முறையை அன்றாடம் கடைபிடிப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
6) சாப்பிட்டவுடன் நடப்பதன்மூலம், மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என கூறுகிறது 2019-ம் ஆண்டு செய்யப்பட்ட சீனாவின் தேசிய அறிவியல் மையத்தின் ஒரு ஆய்வு முடிவு. அதிலும் நன்கு தண்ணீர் குடித்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்டுவிட்டு மேற்கொள்ளும் நடை மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
7) சாப்பிட்ட பின் 10 நிமிடங்கள் வரை மிதமான வேகத்தில் நடப்பதன்மூலம் நம்மால் நல்ல பலன்களை பெற முடியும். வேகமாக நடப்பது, ஜாகிங் போல செல்வது போன்றவற்றால் வயிறு சோர்வடைந்து உடல்நலப் பிரச்னைகள் வரலாம்.
8) ஒரு ஆய்வானது 30,000 இளைஞர்களை தினமும் 30 நிமிடம் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்ய வைத்துள்ளது. இப்படி ஒரு வாரம் செய்ய வைத்து உடலை ஆய்வு செய்துள்ளது. அப்போது அவர்களிடம் இதய பாதிப்புகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் 20% குறைவாக இருந்துள்ளது.
ஒருசிலருக்கு சாப்பிட்டவுடன் நடப்பது வாந்தி, உப்புசம், வயிற்றுப்போக்கு போன்றவற்றை கொடுக்கக்கூடும். அப்படியானவர்கள், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Benefits of Walking for 10 Minutes After Eating
Studies show that taking a short walk after eating can bring numerous health benefits. However, to gain the full benefits, one must be mindful of a few things while walking.
1️⃣ Improves digestion:
Walking after a meal increases body movement, which enhances the functioning of the stomach and intestines. This helps improve digestion and prevents indigestion, bloating, and heaviness in the stomach.
2️⃣ Regulates blood sugar:
For people with Type 1 and Type 2 diabetes, remaining inactive after meals can lead to high blood sugar levels. Walking after eating helps stabilize blood sugar levels effectively.
3️⃣ Better than intense workouts:
According to nutritionists from New Zealand, walking after eating provides more health benefits than intense exercise routines.
4️⃣ Supports weight loss:
Those who follow a proper diet can reduce body weight by walking after meals. This is because it helps burn calories more efficiently, which aids in fat loss and overall weight control.
5️⃣ Helps control blood pressure:
A study conducted by researchers at the University of Ferrara in Italy, in collaboration with the Department of Public Health, found that people with sedentary lifestyles can manage their blood pressure effectively by walking daily after meals under expert guidance.
6️⃣ Relieves constipation:
According to a 2019 study by China’s National Science Center, walking after meals helps people suffering from constipation. The study also found that drinking enough water and eating fiber-rich foods before walking enhances these positive effects.
7️⃣ Optimal duration and pace:
Walking at a moderate pace for about 10 minutes after eating yields the best results. Walking too fast or jogging immediately after meals may cause stomach discomfort and other health issues.
8️⃣ Reduces heart disease risk:
In one study involving 30,000 young adults who walked for 30 minutes after each meal daily for a week, researchers found that their risk of developing heart diseases dropped by 20%.
⚠️ Note:
Some people may experience nausea, bloating, or diarrhea when walking immediately after eating. If such symptoms occur, it is advisable to seek medical guidance.

