ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து தப்பிக்க முடியுமா…?
⚡⚡⚡⚡
இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வதற்கு முன் இடி, மின்னல் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.
மின்னல் பற்றி தெரிந்துக்கொள்ள நிறைய இருப்பதால் முதலில் இடி எப்படி உருவாகிறது என்பதை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.
மேகம்+நிலம் ஆகியவற்றின் மூலம் கண நேரத்தில் உருவாகும் மின்னல் சுமார் 30,000 டிகிரி செல்சியஸ், அதாவது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட 3 மடங்கு அதிகமான வெப்பத்துடன் ஒளியை உண்டாக்கும்.
இந்த அதீத ஆற்றல் கொண்ட மின்னல் கீற்று மேகத்திற்கும் நிலத்திற்கும் இடையே உள்ள காற்றை படுவேகமாக கிழிக்கும். இப்படி கிழித்து பிரிக்கும்போது, காற்று அதே வேகத்துடன் பின்னோக்கி விரிவடையும். இப்படி வேகமாக விரிவடையும்போது ஏற்படும் பயங்கரமான ஒலி தான் இடி.
சிலர் நினைப்பது போல் மேகங்கள் மோதிக்கொள்ளும்போது தான் இடி உருவாகும் என்பது தவறான கருத்து. மின்னல் காற்றை கிழித்துக் கொண்டு பயணிக்கும்போது காற்று உருவாக்கும் ஒலி தான் இடி.
உதாரணமாக…
ஒரு பட்டாசில் தீ வைக்கிறோம். திரி மருந்தை அடைந்ததும் அது ஒலியுடன் வெடிக்கும். சரி தானே…? ஆனால், ஒரு பலூனை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஒரு ஊசியால் குத்தினால் அது எப்படி பலத்த ஓசையுடன் வெடிக்கிறது…? உள்ளே மருந்து என எதுவும் இல்லையே…? எப்படி ஒலி உண்டானது…?
காரணம், நாம் காற்றை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஊசியால் குத்தும் போது, அடைத்து வைக்கப்பட்ட காற்று அதீத வேகத்தில் வெளிப்பட்டு வெளிக்காற்றுடன் சேர்ந்து விரிவடையும்போது தான் இந்த ஒலி உண்டாகும்.
இதே பலூனை நீங்கள் நிலாவில் வெடித்தால், அங்கே ஒலி கேட்காது. ஏனெனில், அங்கு காற்று இல்லை. அது விரிவடைய முடியாது. இதே போல் தான்…ஒரு அணுகுண்டை வெடிக்க வைக்கும்போது அந்த வெடிப்பில் உண்டாகும் ஆற்றல் காற்றை கிழித்து வேகமாக விரிவடைய செய்யும்போது தான் அந்த ‘பூம்ம்ம்’ ஒலி நமக்கு கேட்கும்.
இதே அணுகுண்டை நிலாவில் வெடித்தால் நமக்கு ஒளி மட்டுமே தெரியும். ஒலி கேட்காது.
ஆக, மின்னல் உருவாகும்போது அது காற்றை கிழித்து பாதையை உருவாக்கும்போது காற்று வேகமாக விரிவாகும் நிலையில் கேட்கும் ஒலி தான் இடி.
சரி இப்போது மின்னலை பார்ப்போம்.
மழையை உருவாக்கும் குமுலோநிம்பஸ் மேகங்கள் அடர்த்தியாக திரண்ட பின்னர் அதே வேகமாக சுமார் 10-15 கிமீ வரை மலை போல் வளரும். இந்த மேகத்திற்குள் சிறிய ஐஸ் துகள்கள்(ice crystals) மற்றும் பெரிய ஆலங்கட்டிகள்(hails) பல பில்லியன் எண்ணிக்கையில் காணப்படும்.
சிறிய ஐஸ் துகள்கள் positive charge-வுடன் மேகத்தின் மேற்பரப்பிற்கு சென்று விடும். பெரிய ஆலங்கட்டிகள் negative charge-வுடன் மேகத்தின் அடிப்பாகத்தில் தங்கிவிடும். பின்னர் இவை பலமாக மோதிக்கொள்ளும்போது ஒரு electric current உருவாகும். இந்த கரண்ட் மேகத்திலிருந்து வெளிப்பட்டு சுமார் 50 மீட்டர் வரை மட்டுமே கீழே பூமியை நோக்கி நீளும். இதற்கு அடுத்த நிலையில், பூமியில் உள்ள மனிதர்கள் உள்பட அனைத்து பொருட்களும் இந்த மழை, புயல் நேரங்களில் ஒருவித மின்னழுத்த பாதையை வெளியிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Streamer எனக் கூறுவார்கள்.
மனிதர்கள், மரங்கள், வீடுகள், கம்பங்கள் என செங்குத்தாக நிற்கும் அனைத்தும் இந்த Streamer- களை வெளியிடுவார்கள். இவை மேல்நோக்கி செல்லும்.
இப்போது மேலே 50 மீட்டர் தொலைவு வரை வந்த electric current-ஐ இந்த Streamer தொட்டு இணைந்து விட்டால், கீழே எதன் மூலம் இந்த Streamer வெளியானதோ அது மீண்டும் ஒரு பலமான return stroke கொடுக்கும். இதுவும் electric current-ம் சேர்ந்து தான் ஒரு பயங்கரமான மின்னல் வெட்டை உருவாக்கும்.
பலரும் நினைப்பது போல் மின்னல் மேகத்திலிருந்து தோன்றி அப்படியே பூமியில் உள்ளவைகளை நேரடியாக தாக்காது. மின்னல் என்பது கிட்டத்தட்ட பூமியில் உருவாகி மேலே செல்கிறது.
உதாரணமாக….
மின்னல், இடி அடிக்கும்போது நாம் வெளியே செல்கிறோம். நாம் எப்போதும் செங்குதாகவே நடப்போம்/நிற்போம்.
அதே சமயம், நாம் இருக்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம், கம்பம், வீடு என எதுவும் இல்லை.
இப்போது மேலே அந்த electric current 50 மீட்டர் தொலைவில் (மேகத்திலிருந்து) ஒரு பாதையை உருவாக்க Streamer-காக காத்துக் கொண்டு இருக்கும்.
கீழே நடக்கும் நம் தலை மற்றும் உடலில் இருந்து Streamer வெளியாகி மேல் நோக்கி செல்லும்.
இரண்டும் இணையும்….return stroke ஏற்படும். இப்போது electric current-க்கு பாதை கிடைத்ததும் அந்த பாதையின் எல்லை வரை அது பயணம் செய்யும்.
அந்த பாதையின் எல்லை எது….?
நம் தலை தான். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்…பூமியும் Streamer-களை வெளியிடும். ஆனால், flat-ஆன பூமி வெளியிடும் Streamer மேலே செல்வதற்குள் செங்குத்தாக நிற்கும் நாம் வெளியிடும் Streamer விரைவாக மேலே சென்று இணைந்து விடும். ஆக, எலக்ட்ரிக் கரண்டின் டார்க்கெட் நம் தலை தான்.
சரி, நாம் நிற்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம் உள்ளது. யாரை எலக்ட்ரிக் கரண்ட் தேர்வு செய்யும்…?
அஃப்கோர்ஸ், உயரமான மரம் தான் பிரைமரி டார்க்கெட்..ஆனால், நாமும் ஆபத்தில் தான் இருப்போம்.
ஏனெனில், மரம் வெளியிடும் Streamer மேலே இணைந்தவுடன் பாதை ஏற்படும் மரத்தின் உச்சி வரை எலக்ட்ரிக் கரண்ட் வந்துவிடும். அருகில் வேறு ஏதாவது உயரமாக இருந்து அது Streamer-ஐ வெளிப்படுத்தும்போது அந்த எலக்ட்ரிக் கரண்ட் அசுர வேகத்தில் அங்கே Jump செய்துவிடும்.
இதனால் தான் உயரமான மரத்திற்கு அருக நிற்க கூடாது என்கிறார்கள்.
சரி, மேலே எலக்ட்ரிக் கரண்ட் தயார் நிலையில் உள்ளது…கீழே நாம் நடக்கிறோம்…நம்மை விட உயரமானது எதுவும் அருகில் இல்லை. நம்மை இன்னும் சில வினாடிகளில் மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர முடியுமா..?
முடியும்.
வெளியே நீங்கள் நிற்கும்போது/நடக்கும்போது உங்கள் உடல் Streamer-களை வெளியிடும். அப்போது…
உங்கள் தலைமுடிகள் நேராக நிற்கும்..
உங்கள் தோலை யாரோ வருடி விடுவதுபோல் தோன்றும்…
உங்களிடம் இரும்பு சாவி, செயின், மோதிரம், டூல்ஸ் என ஏதாவது இருந்தால் அவை vibrate ஆகும்.
இந்த மாற்றங்களை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக ஒரு இருப்பிடத்திற்குள் படுவேகமாக நுழைந்து விட வேண்டும்.
இருப்பிடம் இல்லையெனில், அப்படியே கீழே அமர்ந்து இரண்டு கால்களுக்கு இடையில் தலையை கீழ்புறமாக தொங்கவிட்டு இரண்டு காதுகளையும் மூடிக்கொள்ள வேண்டும்.(போட்டோ பார்க்கவும்)

அதாவது, ஒரு செங்குத்தான நிலையை மேலே உள்ள மின்னலுக்கு கொடுக்க கூடாது.
ஆக, மின்னல் என்பது தானாக, எதேச்சையாக உங்களை தாக்கவில்லை. அதாவது, அது தாக்கும் இடத்தில் நீங்கள் நிற்கவில்லை.
மாறாக, நீங்கள் அங்கே சென்று அந்த மின்னலை வா வா என அழைத்ததால்(Streamers) அது உங்களை குறிவைத்து தாக்கியது. ஒருவேளை, நீங்கள் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், அங்கே மின்னல் தாக்குவதும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஏனெனில், மேகங்கள் நகரும்போது காத்திருக்கும் அந்த எலக்ட்ரிக் கரண்ட் வேறு ஒரு இடத்தில் உயரமான பொருள் மீது தாக்கியிருக்கும். ஆக, இடியை மேகங்கள் உருவாக்கவில்லை. அது காற்றிலிருந்து வெளியாகிறது…மின்னல் மேகத்திலிருந்து நேராக நம்மை தாக்கவில்லை. நாம் அதனை கீழே இருந்து வரவழைக்கும் ஒரு ‘இணைப்பு புள்ளியாக’ இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்துக் கொண்டோம்!
நன்றி : Prakasam P Palani
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Can a Person Sense Lightning Before It Strikes and Escape? ⚡
To answer this question, first we need to understand thunder and lightning.
How does thunder form?
When lightning strikes, it generates an extremely high temperature of about 30,000°C – nearly three times hotter than the surface of the Sun.
This powerful lightning bolt rips through the air between the cloud and the ground. The air suddenly tears apart and then rapidly expands outward. This violent expansion creates the loud sound we call thunder.
👉 Many people think thunder is caused by clouds colliding, but that is a misconception. It is actually the sound of air being ripped apart and expanding due to the lightning bolt.
Example 1: When you light a firecracker, it explodes with sound because of the chemicals inside.
Example 2: When you blow up a balloon and pop it with a needle, it bursts with a loud noise even though there are no chemicals inside. Why? Because the trapped air rushes out at great speed, mixing with outside air and creating sound.
Similarly, lightning creates a powerful tearing and expansion of air that results in thunder.
If the same balloon is popped on the Moon, there would be no sound – because there is no air to expand. The same goes for an atomic bomb: on Earth, the explosion makes a huge “boom” sound as air tears apart, but on the Moon it would produce only light, no sound.
So, thunder = the sound of air expanding rapidly when lightning passes through it.
How does lightning form?
Thunderclouds (Cumulonimbus clouds) grow to heights of 10–15 km. Inside them are billions of tiny ice crystals (positively charged) and larger hailstones (negatively charged).
- The ice crystals rise to the top of the cloud, carrying positive charge.
- The hailstones stay at the bottom, carrying negative charge.
- When they collide, a huge electric current is generated.
This current extends downward from the cloud about 50 meters toward the ground.
At the same time, on the Earth’s surface, all objects (humans, trees, houses, poles) begin to release upward electrical discharges, known as streamers.
⚡ Lightning occurs when the downward current from the cloud connects with one of these upward streamers. At that instant, a massive return stroke travels back, creating the brilliant lightning flash.
Important point:
Lightning does not directly fall from the cloud to the ground. Instead, it forms a connection between the cloud and the ground’s streamers. In a way, lightning starts from Earth and meets the cloud’s current halfway.
👉 For example, when you are standing outside during a storm:
- If you are the tallest object in an open area, your body will release a streamer upward.
- Once it connects with the downward current, lightning chooses you as the path.
That’s why lightning often targets tall trees, poles, or standing humans.
If a tall tree is nearby, it is more likely to be struck first – but standing close to it is still dangerous because lightning can “jump” sideways.
Can we sense lightning before it strikes us?
Yes, we can.
When your body begins releasing streamers, you may notice:
- Your hair standing on end
- A tingling sensation, as if someone is brushing your skin
- Metal objects on your body (keys, chain, ring, tools) starting to vibrate
👉 These are warning signs that lightning is about to strike very close.
What to do immediately:
- Run indoors as fast as possible.
- If no shelter is available: crouch low on the ground, tuck your head between your knees, and cover your ears. Never stand tall.
By lowering your height, you reduce the chance of your body’s streamer connecting with the cloud’s current.
Key takeaway
Lightning does not randomly “choose” to strike a person. Instead, when a person stands tall in an open area, their body sends out a streamer that invites the lightning. If you weren’t standing there, the bolt would have struck another tall object elsewhere.
So, thunder is born from air expansion, lightning is a connection between cloud and ground, and yes – sometimes you can feel it coming before it strikes.
🙏 Credits: Prakasam P Palani