உயர்தர மாணவர்களுடனான கலந்துரையாடல்

உயர்தர மாணவர்களுடனான கலந்துரையாடல்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது, சமூகத்தின் பின்தள்ளப்பட்ட நிலையில் தேவைப்பாடுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்வியை மேம்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக, குறைவான பொருளாதார வளமுள்ள மாணவர்களுக்கு உதவுவதற்காக மாதாந்தம் மேலதிக ஊக்குவிப்புத்தொகை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வி பயணத்தை உறுதிப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அறக்கட்டளையின் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு, அவர்களுடன் பயணித்து தற்போது உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் மூலம் மாணவர்களுக்கு அவர்களின் ஆளுமையினை அறிந்துகொள்வதுடன், அவர்கள் தமது எதிர்கால பாதையினை தெரிவுசெய்வதற்கான தெளிவினை பெறுவதற்காக தொழிலுக்கான திறவுகோல் கருவி மூலம் வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டதோடு அவர்களின் அடுத்த கட்ட கல்வி மற்றும் தொழில்முனைவு முயற்சிகளுக்கான தெளிவையும் பெற்றனர்.

இச் செயற்பாடு, விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் மற்றும் சேவையாளர்களின் அர்ப்பணிப்புடன் நடைபெற்றது.

மாணவர்களின் எதிர்கால கல்வி பாதை, தொழில்முனைவு முயற்சிகள் மற்றும் சமூகத்தில் அவர்கள் அமைக்கக் கூடிய உறுதியான இடம் தொடர்பில் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களும் உற்சாகமும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு, அறக்கட்டளையின் மாணவர் மேம்பாட்டு திட்டங்களில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமையும் என்பதில் ஐயமில்லை. மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள https://vcf.lk/needs/2025/2534/

Empowering Future Leaders : Discussion with Advanced Level Students

The Vivekananda Community Foundation is actively working to identify and enhance the education of underprivileged individuals in society. Specifically, it provides additional monthly incentives to assist students from economically disadvantaged backgrounds, thereby supporting their educational journeys.

In this context, a discussion with higher secondary students who are currently awaiting results for their examinations was successfully held at the Vivekananda Institute of Technology. This event aimed to help students understand their personalities and gain clarity in choosing their future paths through guidance tools for career opportunities. They also received insights into their next educational and entrepreneurial endeavors.

This initiative was carried out with the dedication of the foundation’s executive director, project manager, and volunteers. Guidance and encouragement were provided to students regarding their future educational paths, entrepreneurial efforts, and the solid place they can establish within society. There is no doubt that this event will be a significant advancement in the foundation’s student development programs.

For more details, visit https://vcf.lk/needs/2025/2534/

To receive more articles visit https://maatramnews.com/