இலங்கை 2025ல் ஒரு புதிய பொருளாதார மாற்றத்திற்குத் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. தொழில் முனைவோர் கலாச்சாரம் மற்றும் ஸ்டார்ட் அப் வளர்ச்சியின் ஊடாக, நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர்ப்பிக்க அரசாங்கம், முதலீட்டாளர்கள் மற்றும் தனியார் துறைகள் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
உலகளாவிய அளவில் அமெரிக்கா, சீனா, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன. தொழில் முனைவோருக்கு அடிப்படை மூலதன வசதி, முதலீட்டு வாய்ப்புகள், அரசு அனுசரணை, மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகியவைகளை வழங்குவதன் மூலம், இந்த நாடுகள் பொருளாதார வளர்ச்சியை வேகமாக முன்னெடுத்துள்ளன. இலங்கையிலும் இத்தகைய மேம்பாடுகளுக்கான அடிப்படை சூழலை உருவாக்க அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இலங்கையில் Startup வளர்ச்சி மற்றும் முதலீட்டு சூழல்
இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில் தொழில் முனைவோர் கலாச்சாரம் வளர்ச்சியடையத் தொடங்கியிருந்தாலும், இன்னும் அது பரவலாக வளர்ச்சியடையாத நிலையில் உள்ளது. குறிப்பாக, 2024இல் ஸ்டார்ட் அப் சமூகத்தில் சில முக்கிய முன்னேற்றங்கள் காணப்பட்டன. இலங்கையின் மொத்த தொழில் முனைவோர் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ள நிலையில், புதிய தொழில்முனைவோர் நிறுவனம் 250க்கும் மேல் தொடங்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், குறிப்பாக ஏஞ்சல் இன்வெஸ்டர்கள் மற்றும் வென்சர் கேபிடல் நிறுவனங்கள், இலங்கையின் தொழில்முனைவோர்களுக்கு அதிக அளவில் ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளன.
முதலீடுகளின் அளவு அதிகரித்து வருவது தொழில் முனைவோருக்கு நன்மை என்றாலும், அரசாங்கத்தின் கடன் திட்டங்கள் மற்றும் தனியார் முதலீட்டு ஆதரவை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை நிலவுகிறது. உதாரணமாக, SME Bank மற்றும் People’s Bank போன்றவை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன. அதேபோல், “Enterprise Sri Lanka” திட்டம் தொழில் முனைவோர்களுக்கான நிதி ஆதரவாக அமைகிறது.
வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையின் ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2025க்குள் வென்சர் கேபிடல் சந்தை 20 பில்லியன் ரூபாவைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூ மொபைல், Hatch Works, மற்றும் Lankan Angel Network போன்ற நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோருக்கு முதலீடு செய்து வருகின்றன.

விவசாயம் மற்றும் Startup தொழில்முனைவோர்
இலங்கையின் முதன்மை பொருளாதாரத் துறையாக விவசாயம் உள்ள நிலையில், ஸ்டார்ட் அப் தொழில்முனைவோருக்கு இந்தத் துறையில் புதிய வாய்ப்புகள் பெருகி வருகின்றன. தரமான பசுமை விவசாய முறைகள், டிஜிட்டல் விவசாய சந்தைகள், மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விவசாய முறைகள் ஆகியவைகளுக்கு அதிக முதலீட்டு ஆதரவு கிடைக்கிறது.
விவசாயத்தை நேரடியாக சந்தையில் கொண்டுசெல்லும் நவீன தொழில்முனைவோர் நிறுவனங்கள், இடைத்தரகர்கள் சார்ந்த வழக்கமான வியாபார முறைகளை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வளர்ச்சியால் விவசாயிகளுக்கு நேரடி சந்தை அணுகல் கிடைப்பதுடன், மக்களுக்கும் தரமான விவசாய பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு உருவாகிறது.
பாடசாலை மட்டத்தில் தொழில்முனைவோர் கல்வி
இலங்கையின் தொழில்முனைவோர் வளர்ச்சிக்கு பாடசாலை மட்டத்திலிருந்து தொழில் முனைவோர் கல்வியை வலுப்படுத்துவது அவசியம். தொழில் முனைவோர் மனப்பான்மையை உருவாக்கவும், ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.
தொழில்முனைவோர் திட்டங்கள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஸ்டார்ட் அப் பயிற்சிகள் வழங்குவதன் மூலம், அவர்கள் தொழில் முனைவோராக வளர்ந்து சிறிய முதலீடுகளிலிருந்து பெரும் வியாபார முயற்சிகளை மேற்கொள்ளக் கூடிய சூழல் உருவாக்கலாம்.
Startup வளர்ச்சிக்கு எதிரான சவால்கள் மற்றும் தீர்வுகள்
இலங்கையில் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய பல்வேறு சவால்கள் உள்ளன. முதலீட்டு குறைபாடு, தொழில் முனைவோர் துறையில் சார்ந்த முறைமை குறைபாடு, முதலீட்டாளர்களுக்கு நம்பகமான சட்ட அமைப்புகள் வழங்கப்படாமை போன்றவை முக்கிய சவால்களாக உள்ளன.
முதலீட்டு குறைபாட்டைக் குறைப்பதற்காக, இலங்கை அதிக வென்சர் கேபிடல் மற்றும் ஏஞ்சல் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். அதேசமயம், தொழில் முனைவோர் முறைமை குறைபாடு சரி செய்ய, அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து வேலை செய்ய வேண்டும். முதலீட்டு சட்டங்களைச் சரியான முறையில் அமல்படுத்தி, தொழில் முனைவோருக்கான நிலையான சட்ட முறைமை உருவாக்கப்பட வேண்டும்.
2025ல் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள்
2025ம் ஆண்டிற்குள் இலங்கையின் ஸ்டார்ட் அப் வளர்ச்சி புதிய நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 5,000க்கு மேல் அதிகரிக்கலாம். வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரிக்கும் என்பதால், நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி பெறும்.
நாட்டில் தொழில் முனைவோர் கல்வியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களை ஸ்டார்ட் அப் துறையில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. விவசாயம் மற்றும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் வளர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பும் காணப்படுகிறது.
முடிவுரை
2025ம் ஆண்டு இலங்கை ஸ்டார்ட் அப் வளர்ச்சியின் புதிய திசையில் பயணிக்கிறது. இது, பொதுவாக நாட்டின் பொருளாதாரத்தையும், இளைஞர்களின் வேலை வாய்ப்புகளையும் மேம்படுத்தும். தொழில் முனைவோருக்கு நிதி ஆதரவு, அரசின் உதவி, மற்றும் உலகளாவிய சந்தையில் வளர்ச்சி ஆகிய மூன்று அம்சங்கள் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
இலங்கை புதிய பொருளாதார பயணத்திற்குத் தயாராக இருக்கிறதா? ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை வளர்க்க, முதலீட்டாளர்கள், அரசாங்கம், மற்றும் தொழில்முனைவோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. புதிய தொழில் முனைவோர் உலகளாவிய சந்தையை நோக்கி இலங்கையை முன்னோக்கி அழைத்துச் செல்லும் திறன் பெறுவார்களா என்பது, மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் வெற்றியைப் பொறுத்தே இருக்கும்.
S தணிகசீலன்
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Economic Transformation through Startups: Sri Lanka’s New Journey in 2025
Sri Lanka is gearing up for a new economic transformation in 2025. Through the growth of entrepreneurial culture and startup ecosystems, the government, investors, and private sector are making collaborative efforts to rejuvenate the nation’s economy.
Globally, countries like the United States, China, India, and Singapore have taken the lead in startup development. By providing essential capital access, investment opportunities, government support, and technological infrastructure, these nations have accelerated their economic growth. Similarly, Sri Lanka must create a conducive environment for such advancements through strong public-private partnerships.
Sri Lanka’s Startup Growth and Investment Climate
Although Sri Lanka’s entrepreneurial culture has been emerging over the past decade, it has yet to achieve widespread growth. However, significant progress was observed in 2024 within the startup ecosystem. With over 1,000 entrepreneurs currently in the country, more than 250 new startups were established last year alone. Investors, particularly angel investors and venture capital firms, have increasingly begun to support Sri Lankan entrepreneurs.
While the rise in investments benefits entrepreneurs, the need to strengthen government loan schemes and private sector support remains crucial. For instance, institutions like SME Bank and People’s Bank offer low-interest loans to startups, while initiatives like Enterprise Sri Lanka provide financial assistance to emerging businesses.
Foreign investments play a critical role in Sri Lanka’s startup growth. By 2025, the venture capital market is expected to exceed 20 billion rupees. Leading firms such as New Mobile, Hatch Works, and Lankan Angel Network are actively investing in promising startups, helping them scale their operations.
Agriculture and Startup Entrepreneurs

With agriculture being a primary sector of Sri Lanka’s economy, the startup ecosystem is witnessing a surge in innovative agritech ventures. Investments are increasingly flowing into sustainable farming practices, digital agricultural markets, and smart technology-driven farming solutions.
New startups are revolutionizing traditional farming by enabling direct-to-market agricultural solutions, eliminating middlemen, and ensuring that farmers receive better profits while consumers gain access to fresh produce at competitive prices. This shift is expected to modernize Sri Lanka’s agricultural sector, making it more efficient and globally competitive.
Entrepreneurship Education at the School Level
Strengthening entrepreneurship education from the school level is essential for Sri Lanka’s long-term startup development. Encouraging an entrepreneurial mindset and fostering a startup culture should begin in the early years through well-structured mentorship programs.
Entrepreneurship-focused curriculums should be introduced in schools and universities. By providing startup training programs for university students, Sri Lanka can create a new wave of young entrepreneurs who start small businesses and eventually expand into larger enterprises.
Challenges and Solutions for Startup Growth
Despite the progress, several challenges hinder Sri Lanka’s startup ecosystem. The lack of investment, regulatory inefficiencies, and unreliable legal frameworks for investors remain significant barriers.
To overcome the investment gap, Sri Lanka must attract more venture capital and angel investors. Meanwhile, addressing regulatory inefficiencies requires collaborative efforts between the government and private sector. Establishing clear and investor-friendly legal policies will create a stable framework that fosters startup growth.
Looking Ahead: Expected Developments in 2025
By 2025, Sri Lanka’s startup ecosystem is expected to reach new heights. The number of entrepreneurs and startups is projected to surpass 5,000, leading to an overall boost in the economy. With increasing foreign investments, Sri Lanka’s financial landscape will become more dynamic and competitive.
The government has also announced initiatives to strengthen entrepreneurship education, ensuring that schools and universities integrate startup training into their curriculum. Additionally, agritech and technology-based startups are anticipated to flourish, driving innovation-driven economic growth.
Conclusion
Sri Lanka is set to embark on a new era of startup-driven economic transformation in 2025. This growth will enhance the national economy, create more employment opportunities for young professionals, and foster innovation. The three pillars essential for this transformation are financial support for entrepreneurs, government backing, and global market expansion.
Is Sri Lanka ready for this new economic journey? The time has come for investors, the government, and entrepreneurs to unite in shaping the country’s startup future. Whether Sri Lanka’s entrepreneurs can position the nation on the global startup map will depend on the success of the strategic efforts undertaken today.
S. Thanigaseelan
For More Article visit us Maatram News