கடந்த கட்டுரையில் தொழில்முயற்சியாண்மை என்றால் என்ன என்பது பற்றிய விளக்கத்தினை குறிப்பிட்டிருந்தேன்.
இப்போது நீங்களும் ஒரு தொழில்முயற்சியாளர் என்ற கனவுடன் பயணிப்பவரா? அவ்வாறாயின் உங்களிடம் கீழ் உள்ள விசேட குணங்கள் காணப்படுகின்றதா என பாருங்கள். இவ்வாறான குணங்களை வளர்த்துகொண்டு உலகின் சிறந்த தொழில்முயற்சியாளராக நீங்கள் வர உங்களை தயார் படுத்தமுடியுமா என்றும் உங்களை ஆய்வு செய்து பாருங்கள்.
1. தன்னம்பிக்கையுடையவராக இருத்தல்
- தன் மீதும் தனது திறமை மீதும் பூரண நம்பிக்கை வைத்திருப்பதோடு, ஒரு காரியத்தையோ, சவாலையோ வெற்றிகரமாக முடிக்க சந்திக்க தன்னால் முடியும் என்ற நம்பிக்கை வைத்தல்
- எதிர்ப்பு, ஏளனம், ஏமாற்றங்கள், நிராகரிப்புக்கள் இருந்தாலும் தனது முடிவில் உறுதியாக இருத்தல், அத்தோடு, மற்றவர்கள் செய்யத் தயங்கும் ஆபத்தினை எதிர்கொள்ளும் (Risk) செயலை செய்யக்கூடிய வகையில் தன்னை தயார்படுத்தல்.
- என்றும் நேர்மறை சிந்தனையுடன், இலக்கிணை நிர்ணயம் செய்து அதற்காக தொடர்ந்து பயணிக்கும் மனநிலையில் இருத்தல்.
2. புத்தாக்க சிந்தனையுடனான சுய செயல்பாடு
- ஒரு காரியத்தை முடிக்க சாதாரணமாக தேவைப்படுவதை விட கூடுதல் முயற்சி எடுப்பதுடன் பிறராலோ அல்லது சூழ்நிலையாலோ உந்தப்படாகமல் சுயமாகவே காரியத்தில் இறங்குதல்
- மக்களின் பிரச்சினைகள், தேவைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வினை புத்தாக்க சிந்தனையுடன் வழங்குவதுடன், அவற்றிற்காக நீண்டகால தூரநோக்கு சிந்தனையுடன் பயணித்தல்.
3. தேவையானளவு தகவல் சேகரித்தல்
- சுயமாக சந்தை ஆய்வு செய்தோ அல்லது வல்லுநர்களை கலந்தாலோசித்தோ, தெரிந்தவர்கள் மூலமாகவோ தொழில்முயற்சியாண்மைக்கான பயனுள்ள தகவல்களை அனைத்து மட்டங்களில் இருந்தும் சேகரித்தல்.
4. வாய்ப்புகளை உருவாக்குதலும் அதனை பயன்படுத்தலும்
- எம்மை சூழவுள்ள வாய்ப்புகளுக்காக சூழ்நிலையை கவனித்து கண்டறிதலுடன், உடனடியாக அதை பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்தல்
- தேவைக்கு எற்ற வகையிலான வாய்ப்புகளையும் உருவாக்கி தொழில் முயற்சியாண்மைக்கு தேவையானவற்றை அடைதல்.
5. முறையான திட்டமிடலுடன் கூடிய விடாமுயற்சி
- நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய சரியான படிப்படியான வியாபார திட்டமிடலை மேற்கொண்டிருத்தல்.
- பெரிய செயலை சிறிய சிறிய செயல்களாக மாற்றி எளிதில் முடிக்கும் திறமை.
- தடைகளை முன்னறிந்து திட்டமிடல்.
- சீரான மற்றும் முறையான செயல் ஆற்றல்
- தடைகளை தாண்டி இலக்கை அடைய திரும்பத் திரும்ப செயல்படுதல்,
- பெரிய தடை வரும்போதும் மனம் சோராது செயல்படுதல்
- புதிய செயல்கள் மூலம் தடைகளை உடைத்தல்.
தொழில் முயற்சியாளருக்கான விசேட சில திறமைகள்…
- பிறரை தன்வயப்படுத்துதல் :-பிறரை தனது பொருளையோ, சேவையையோ வாங்க வைத்தல்,நிதி உதவியோ அல்லது வேறு வகையான உதவியையோ தர சம்மதிக்க வைத்தல்தனக்கு – தொழிலுக்கு சாதகமாக நடக்க வைத்தல்.
- செல்வாக்கு யுக்திகளை பயன்படுத்துதல் :- பலவிதமான யுக்திகளை பயன்படுத்தி பிறரை சாதகமாக நடக்க வைத்தல், புதிய தொழில் வாய்ப்புகளை உண்டாக்குதல், செல்வாக்கு மிக்க நபர்களை பயன்படுத்திக் கொள்ளுதல்.
- தரத்திற்கான முனைப்பு :- தனது தொழிலில் தற்போதுள்ள தரத்தையோ அல்லது அதையும் விட மேம்பட்ட தரத்திலோ பொருளை- சேவையை தர முனைப்புடன் செயல்படுதல், தனது பொருளையும் மற்ற போட்டியாளர்களின் பொருளையும் ஒப்பிட்டு தரத்தை மேம்படுத்த எப்போதும் முயலுதல்.
- செயலை முடிக்க முனைப்பு :- எடுத்துக் கொண்ட செயலை சொந்த செளகரியங்களையும் தியாகம் செய்து எப்பாடுப்பட்டாவது முடிக்க அரும்பாடு படல், செயலில் இறங்கும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு முழு பொறுப்பு எடுத்துக் கொள்ளல், வேலையாட்களோடு தோளோடு தோள் கொடுத்து நின்று செயலை முடித்தல், வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை கொடுத்தல்.
- செயல்திறன் :- வேகமாகவோ, குறைந்த செலவிலோ, குறந்த பொருட்களோடோ ஒரு செயலை முடிக்க வழிவகைகள் கண்டறிதல், செயல்படுத்துதல்,செலவு குறித்து பூரண விழிப்புணர்வு கொள்ளல்.
- பிரச்சனைகளுக்கு தீர்வு காணல்
இலக்குகளை அடைய புதிய அசாதரணமான தீர்வுகளை கண்டறிதல்,
தடை வரும்போது மாற்று தீர்வை செயல்படுத்துதல்
புதிய வழிமுறைகளை தொடர்ந்து கண்டறிய முனைதல். - வலியுறுத்தல்
பிரச்சனைகளையும், கருத்து வேறுபாடுகளையும் மற்றவர்களோடு தைரியமாக நேரடியாக எடுத்து வைத்தல்,
மற்றவர்கள் செய்ய வேண்டிய பணிகளை எடுத்துரைத்து வேலை வாங்குதல். - கண்காணித்தல்
இலக்கை அடைய போட்ட திட்டப்படி செயல்கள் நடைபெறுகிறதா என்று அறிய நடைமுறைகளை உருவாக்குதல் – செயல்படுத்துதல்
தானே திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் செயல்பாடுகளையும் கண்காணித்தல். - ஊழியர் நலனில் அக்கறை
தொழிலாளிகளின் நலத்தை மேம்படுத்த செயல் ஆற்றுதல்
அவர்களுடைய சொந்த நலனிலும் அக்கறை கொள்ளுதல்.
மேலதிக தகவல்களுக்கு https://www.youtube.com/watch?v=hiUFe-uq6fk
க.பிரதீஸ்வரன்
Entrepreneurs are Travelers Toward Their Dreams!
In the previous article, I elaborated on what entrepreneurship is. Are you someone traveling with the dream of becoming an entrepreneur? If so, see if you possess the following special traits. https://maatramnews.com/articles/entrepreneurs-are-travelers-toward-their-dreams-2/
By cultivating these qualities, you can prepare yourself to become one of the world’s finest entrepreneurs. Reflect on yourself and explore your potential.
1. Confidence
- Believing completely in yourself and your abilities.
- Trusting that you can successfully tackle tasks or challenges.
- Remaining firm in your decisions despite opposition, ridicule, disappointments, or rejections.
- Preparing to take calculated risks that others might hesitate to face.
- Maintaining a positive mindset, setting clear goals, and persevering to achieve them
2. Innovative Thinking and Self-Motivation
- Taking extra effort beyond the ordinary to complete a task.
- Acting independently without needing external push or motivation.
- Identifying people’s problems and needs and providing innovative solutions.
- Thinking long-term and strategizing accordingly.
3. Gathering Necessary Information
- Conducting independent market research or consulting experts.
- Collecting valuable information about entrepreneurship from all available sources.
4. Creating and Utilizing Opportunities
- Observing and identifying opportunities in the surrounding environment.
- Taking immediate action to utilize those opportunities.
- Creating opportunities tailored to your needs and leveraging them effectively.
5. Systematic Planning and Persistent Effort
- Developing a structured business plan to achieve your goals.
- Breaking large tasks into manageable smaller actions for easier execution.
- Anticipating obstacles and planning accordingly.
- Exhibiting consistent and systematic effort.
- Persisting through challenges and maintaining focus even during setbacks.Overcoming barriers with innovative solutions.
For more information https://www.youtube.com/watch?v=Z6LNpuq-oOk
Special Skills for Entrepreneurs
1. Persuasion:
- Convincing others to buy your products or services.
- Gaining support, whether financial or otherwise, for your venture.
- Influencing others to act in favor of your business.
2. Strategic Influence:
- Using various techniques to influence others positively.
- Creating new business opportunities and utilizing influential individuals.
3. Quality Focus:
- Striving to deliver products or services of exceptional quality.
- Continuously working to improve standards compared to competitors.
4. Determination to Complete Tasks:
- Committing to complete tasks even at personal sacrifices.
- Taking full responsibility for challenges and solutions.
- Prioritizing customer satisfaction above all.
5. Efficiency:
- Finding ways to complete tasks quickly, cost-effectively, and resourcefully.
- Maintaining keen awareness of expenses and their impact.
6. Problem-Solving Skills:
- Developing innovative solutions to achieve goals.
- Implementing alternative strategies during setbacks.
- Continuously seeking and applying new methods.
7. Assertiveness:
- Addressing problems and disagreements courageously and directly.
- Clearly explaining expectations and ensuring tasks are accomplished.
8. Monitoring and Evaluation:
- Establishing processes to ensure progress aligns with the set plan.
- Overseeing all aspects and operations of the project independently.
9. Employee Welfare:
- Acting to enhance the well-being of employees.
- Showing genuine care for their personal and professional needs.
By adopting and fostering these traits, you can gear up to excel as an entrepreneur.
for more information https://www.youtube.com/watch?v=_mXN4LjA-Mw
— K. Pratheeswaran