இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி? : தொடர் 1
நாம் கடந்த 12 வருடங்களாக இயற்கை விவசாயத் துறையில் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறோம். 2013 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை இயற்கை விவசாயம் செய்வோரைத் தேடி, மற்றும் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக இலங்கை முழுவதும் இலட்சக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பயணித்துள்ளோம்.
அத்துடன் 2016 இல் இருந்து நாமும் நேரடியாக இயற்கை விவசாயம் மேற்கோள்கிறோம். இக்காலப் பகுதியில், எம்மால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள், நாம் எதிர்கொண்ட சவால்கள், தோல்விகள், அவற்றினூடாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் பெற்ற வெற்றிகளினூடான அனுபவங்களின் இந்த தொகுப்பானது, இலங்கையில் உள்ள இயற்கை விவசாயிகளையும், பொருளாதார மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இரசாயன விவசாயம் செய்யும் இயற்கை விரும்பிகளுக்கும், எவ்வாறு பொருளாதார ரீதியான பாதுகாப்புடன் இயற்கை விவசாயத்தை, உள்ளூர் சந்தையை மையப்படுத்தி வெற்றிகரமாக மேற்கொள்ளலாம் என்பதில் ஓரளவுக்கு தெளிவினை வழங்கும் நோக்கத்தில் தொடராக பதிவிடுகிறோம்.
வெற்றிகரமான இயற்கை விவசாயம் என்பது முறையாகத் திட்டமிடப்பட்ட ஓர் பொறுமையான பயணம் என்பதை மனதில் இருத்திக்கொள்ளவேண்டும்.
இதற்கு முதல் படியாக எமது மனதை நேர்மையாக இதயசுத்தியுடன் நடப்பதற்குத் தயார்படுத்துதல் மிகவும் இன்றியமையாதது.
இயற்கை விவசாயம் செய்பவர்களோ அல்லது பொருளாதார மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இரசாயன விவசாயம் செய்யும் இயற்கை விரும்பிகளோ, எவராயினும் எல்லோருக்கும் முக்கியமான முதல் படி, எம்மைச் சுற்றியுள்ள சமூகம் எம்மில் நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு, எமது சொல் மற்றும் செயலில் உண்மையுள்ளவர்களாக இருந்தல் மற்றும் உண்மையினை உள்ளபடி கூறுதல் மிக மிக அவசியமாகும். அத்துடன் எம்மைப்போல் பிறருக்கும், நஞ்சற்ற உணவு கிடைக்கவேண்டும் எனும் இதயசுத்தி எமது உணர்வில் கலர்ந்திருந்தல் வேண்டும். நேர்மை, வாய்மை, அன்பு என்பன ஒருங்கிணைந்த இந்த முக்கியமான தகுதியே நிலைபேறான மற்றும் வெற்றிகரமான இயற்கை விவசாயத்தின் முதல் படியாகும்.
இலங்கையில் கொழும்பினைத் தவிர ஏனைய பிரதேசங்களில் நம்பிக்கை அடிப்படையிலேயே விவசாயி / வியாபாரியிடம் இயற்கை விளைபொருட்களை மக்கள் கொள்வனவு செய்கின்றனர்.
இயற்கை விவசாயி என்று தன்னை பிரபல்யப்படுத்திக்கொள்ளும் ஒருவரின் உண்மைத்தன்மையை அவரது ஊரவர்கள் மற்றும் அவர் விவசாயம் செய்யும் பகுதியின் அயலில் உள்ளவர்களிடமிருந்து ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியும்.
தான் ஓர் இயற்கை விவசாயி என்று பகிரங்கமாக கூறிக்கொண்டு இரகசியமாக விவசாய இரசாயனங்களை அவ்வப்போது போது பாவிப்பவரை விட, “நான் இயற்கையை நோக்கிய படிப்படியான மாற்றத்தில் இருக்கிறேன். இப்போது இரசாயனங்களை 50% மட்டுமே பயன்படுத்துகிறேன். அடுத்த பருவத்தில் அதையும் குறைக்க திட்டமிட்டுள்ளேன்” என்று நேர்மையாக உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக கூறுபவர் மீது நுகர்வோர் அதிகம் நம்பிக்கை மற்றும் மதிப்புக் கொள்வதை பல இடங்களில் அவதானித்துள்ளோம்.
(தொடரும்)
CSJ Agri
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
How to make organic farming successful in Sri Lanka?
We have been continuously engaged in the field of natural farming for the past 12 years. Since 2013, we have traveled hundreds of thousands of kilometers across Sri Lanka, meeting natural farmers and carrying out experimental initiatives.
In addition, since 2016, we ourselves have been directly practicing natural farming. During this period, our observations, the challenges we faced, the failures we experienced, the lessons we learned from them, and the successes we achieved — all these experiences are being compiled and shared as a series. The purpose of this series is to provide some clarity to natural farmers in Sri Lanka, as well as to those who, due to economic and situational circumstances, are still engaged in chemical farming but have an inclination toward natural methods, on how to successfully practice natural farming with economic security, focusing on the local market.
It must be kept in mind that successful natural farming is a patiently undertaken and systematically planned journey.
The very first step in this journey is to prepare our mind with sincerity and purity of heart.
Whether one is already a natural farmer, or someone who, due to financial or situational reasons, continues with chemical farming but is inclined towards natural practices, the most important first step is to live in such a way that the community around us has trust in us. That trust comes when our words and actions are truthful, and when we speak honestly without distortion. Along with this, there must be a heartfelt sincerity that, just as we do, others too should have access to toxin-free food. Honesty, truthfulness, and compassion together form the essential foundation — the very first step — of sustainable and successful natural farming.
In Sri Lanka, except in Colombo, people in other regions usually purchase natural produce from farmers or traders mainly based on trust.
The authenticity of a person who presents himself as a natural farmer can to some extent be understood through the opinions of his fellow villagers and the neighbors in the area where he cultivates.
We have observed in many places that consumers place greater trust and respect in someone who openly says: “I am in the process of gradually transitioning toward natural farming. At present, I use only 50% chemical inputs, and I plan to reduce them further in the next season” — rather than in someone who publicly claims to be a natural farmer but secretly continues to use chemical inputs occasionally.
(To be continued)
CSJ Agri
Pingback: இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி?