இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி? தொடர் 2
🌱🌱🌱🌱🌱🌱🌱
இலங்கையில் வட கிழக்கு மற்றும் ஏனைய இடங்களில் பெரிய ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைத்து இயற்கை விவசாயம் செய்ய வரும் எமது புலம்பெயர் உறவுகள் மற்றும் பண்ணையில் இருந்து நீண்ட தூரத்தில் வதியும் உள்ளூர் உறவுகள் பலர், நல்ல பொருளாதார வலுவினைக் கொண்டிருந்தாலும், எங்கே முதலாவதாக தவறு செய்கின்றனர் என்றால், இயற்கை விவசாயத்தில் உறுதியான நம்பிக்கையுள்ள, அனுபவமுள்ள மற்றும் பண்ணையை வினைத்திறனாக நேர்மையான முறையில் முகாமை செய்யக்கூடிய ஒருவரை சரியாக இனம் காணத்தவறுவது தான்.
நாம் முன்னைய அத்தியாயத்தில் கூறிய நேர்மை, வாய்மை, அன்பு கொண்ட ஒருவரை அவரை சுற்றியுள்ள சமூகத்திடம் அவரது நன்மதிப்பின் அளவினை நன்கு ஆராய்ந்து பணிக்கு அமர்த்துதல் மிகவும் முக்கியமாகும். எமது அவதானிப்புகளின்படி ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோருக்கு இந்த முதற்படி சரியாக அமையவில்லை.
இரண்டாவதாக, திட்டமிடலில் சறுக்கி விடுகின்றனர். அதாவது திட்டமிடலுக்கும் முன்னாயத்தங்களுக்கும் மிகவும் குறைந்த நேரத்தை மட்டுமே ஒதுக்குகின்றனர். உண்மையில் இலக்கினையும், அதற்கான காலத்தை தீர்மானித்தபின், 60% திட்டமிடலுடன் கூடிய முன்னாயத்தங்கள், மீதமுள்ள 40% செயற்படுத்தல் என வகுத்து செயற்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
இவை பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்.
இயற்கை விவசாயம் செய்ய வரும் உள்ளூரில் உள்ள விளிம்பு நிலை வருமானமுடையவர்கள் மற்றும் அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு நாம் கூறும் அறிவுரை முதலில் 10 பேர்ச், 20 பேர்ச், 1/4 ஏக்கர் மிஞ்சினால் 1 ஏக்கர் எனும் தங்கள் சக்திக்கேற்ற அளவிலான சிறிய இடப்பரப்பில் 100% இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கி ஒன்று அல்லது இரண்டு வருட அனுபவங்களை பெற்று / கற்று அதன்பின் படிப்படியாக விரிவாக்கம் செய்யுங்கள் என்பதேயாகும். முறையாக இயற்கை விவசாயம் செய்யுமிடத்து 20 பேர்ச் அளவான நிலப்பரப்பில் உள்ளூர் சந்தையை மையப்படுத்தி மாதம் ரூ. 50,000 – 60,000 நிலையான இலாபம் ஈட்டும் சிலரை எம் மத்தியில் இன்றும் காண்கிறோம்.
இலங்கையில் விவசாயத்தினைப் பொறுத்தவரை இயற்கையோ, இரசாயனமோ அல்லது இரண்டும் கலந்தோ, எதுவாயினும் தத்தமது விருப்பம் மற்றும் வசதிக்கு ஏற்றவாறு செய்வது அவரவர் தெரிவு. நாம் ஒன்றையொன்று உயர்த்தியோ, குறைகூறவோ, தலையிடவோ முடியாது. அவரவர்க்கு பிடித்த வகைகளில் விவசாயம் செய்வது அவரவர் சுதந்திரம்.
ஆயினும் எமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்களால், படித்தவர், பாமரர் என்ற வேறுபாடின்றி இளவயது மரணங்கள் பரவலாக சம்பவிக்கும் இக்காலங்களில், சமூக அக்கறையுடன் சேர்த்து, ஆரோக்கியமான உணவுகளுக்கு என ஏற்றுமதியுடன் கூடிய ஓர் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு இலங்கையில் எமது கண்முன்னே உருவாகிக் கொண்டு வருகிறது.
ஆகையால் இளம் விவசாயிகள் இந்த வாய்ப்பினை தவறாவிடாது, இயற்கை விவசாயம் பற்றிய நம்பிக்கையீனங்களைப் புறந்தள்ளி, சமூக உணர்வுடன், நேர்மையாக, நவீன நுட்பங்களுடன், இலாபகரமாக தொடர்ந்து இயற்கை வழியிலே உறுதியாகப் பயணிப்போம்.
(தொடரும்)
CSJ Agri
தொடர் 1 வாசிக்கவில்லையெனில் கீழ் காணப்படும் லிங் மூலம் அதனை வாசிக்கலாம்…
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
How to make organic farming successful in Sri Lanka?
In Sri Lanka, many of our diaspora members and even locals living far away from their farmland are now coming forward to establish large integrated farms, especially in the Northern and Eastern regions, to practice natural farming. Although they have strong financial backing, the very first mistake they often make is failing to properly identify a trustworthy, experienced, and dedicated person who genuinely believes in natural farming and can manage the farm efficiently and honestly.
As we discussed in the previous chapter, it is very important to hire someone who possesses honesty, integrity, and kindness—and to carefully assess their reputation within their community before giving them such responsibility. From our observations, apart from a few exceptions, most people fail at this very first step.
Secondly, they often stumble in planning. They tend to allocate very little time for proper planning and preparation. In reality, once the goals and timeframes are decided, success lies in devoting 60% to planning and preparation and the remaining 40% to execution.
We will discuss this in greater detail later.
For local farmers with limited income, or government and private sector employees who wish to engage in natural farming, our advice is to first begin on a scale that matches their strength—such as 10 perches, 20 perches, or if exceeding a quarter-acre, start with just one acre. Practice 100% natural farming in this smaller area for one or two years to gain experience and learning. After that, expand step by step.
Even today, we see examples of farmers who cultivate just 20 perches of land using proper natural farming methods, focusing on local markets, and earn a stable monthly profit of Rs. 50,000 – 60,000.
When it comes to farming in Sri Lanka—whether natural, chemical-based, or a mix of both—it is ultimately a matter of personal choice and convenience. We cannot raise one above the other, criticize, or interfere. Each farmer has the freedom to choose the method that suits them best.
However, because of the drastic lifestyle and dietary changes in today’s society, we are witnessing increasing cases of premature deaths—among both the educated and the ordinary. At this time, with growing social awareness, a massive market opportunity is emerging in Sri Lanka for healthy food, coupled with potential for exports.
Therefore, young farmers must not miss this opportunity. Let us put aside doubts about natural farming and, with social responsibility, honesty, modern techniques, and profitability in mind, continue to move forward firmly on the path of natural farming.
(To be continued)
— CSJ Agri