How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 11
How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 11

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி? : தொடர் 11

வீட்டுதோட்டமோ, பெரிய பண்ணையோ எதுவாயினும் மரக்கறிப் பயிர்ச்செய்கையில் How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 11 கத்தரி இல்லாத் தோட்டங்களைக் காண்பதரிது. ஆனாலும் கத்தரி வந்தால் கூடவே காய் துளைப்பான், புழுக்களும் வருகிறதே என்று எம்மில் பலர் அலுத்துகொள்வதுமுண்டு.

இவைகளை இயற்கை முறையில் எதிர்கொள்வதற்கு, நோய்காரணி பற்றிய அடிப்படை அறிவு எமக்கு அவசியமாகும்.

கத்திரிப் பயிரில், நாற்று மேடை தொடக்கம் இறுதி அறுவடை வரை எல்லாக் காலங்களிலும் பூச்சிகள், புழுக்கள் மற்றும் பூஞ்சண, பக்டீரிய நோய்கள் தாக்குகின்றன.

இவற்றில், காய் துளைப்பான் பீடையானது கத்தரிப் பயிர்ச்செய்கையில் கிட்டத்தட்ட 40% தொடக்கம் 90% வரை (எந்தவொரு பயிர்பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாதவிடத்து) எமக்கு பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகிறது.

கத்தரியின் காய் துளைப்பான் நோய்க்கு காரணமான (படத்தில் உள்ள) பெண் அந்துப்பூச்சி 80 முதல் 250 வரையிலான சிறிய மங்கல்-வெள்ளை நிற முட்டைகளை இலைகளின் அடிப்பக்கம் மற்றும் வளரும் இளம் குருத்துகள், பூவின் மொட்டுகள், காய்கள் செடியுடன் இணைந்திருக்கும் மென்மையான பகுதிகளில் இடுகிறது.

How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 11

முட்டைப் பருவம் கோடைகாலத்தில் 3 முதல் 5 நாட்கள் வரையும், மாரிகாலத்தில் 7 முதல் 8 நாட்கள் வரையில் இருக்கும். பின்னர் முட்டையிலிருந்து கருப்புத் தலை கொண்ட வெள்ளைப் புழுக்கள் வெளிவரும்.

இவற்றின் புழுப் பருவம் 12 முதல் 15 நாட்கள் வரை கோடையிலும், மற்றும் 14 – 22 நாட்கள் வரை மாரிகாலத்திலும் காணப்படும்.

முதிர்ந்த புழுக்கள், இளம் தண்டுகள் மற்றும் காய்களில் இருந்து வெளியேறி, காய்ந்த துளிர்கள் மற்றும் இலைகள் அல்லது மண்ணில் 1 முதல் 3 செமீ ஆழத்தில் கூட்டுப்புழுவாகின்றன. கோடை காலத்தில் கூட்டுப்புழுப் பருவம் 7 முதல் 10 நாட்கள் வரையிலும் குளிர்காலத்தில் 13 முதல் 15 நாட்கள் வரையிலும் காணப்படும்.

இக் கூட்டுப்புழுக்களிலிருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள் பொதுவாக பகல் நேரத்தில் இலைகளின் அடிப்புறத்திலும் தாவரத்தின் நிழல்பகுதிகளிலும் மறைந்து காணப்படும் .
இந்த அந்துப்பூச்சிகள் வெள்ளை நிறமாகவும், முன் இறக்கைகளில் ஒழுங்கற்ற வடிவத்தில் புள்ளிகளுடனும் இருக்கும்.

காலநிலை மாற்றங்களைப் பொறுத்து இப்பூச்சிகளின் வாழ்க்கை வட்டம் 17 முதல் 50 நாட்கள் வரை நீடிக்கின்றன.

பயிரில் சேதத்தின் அறிகுறிகள்

🌱🌱🌱

கத்தரி காய் துளைப்பானானது புழுப் பருவத்தில், பயிருக்கு சேதத்தை விளைவிக்கின்றது. புழுக்கள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், இலைத் துளிர்கள், பூவின் மொட்டுகள் மற்றும் காயின் மென்மையான பாகங்களைக் குடைந்து உட்புறம் நுழைகின்றன. இப்பூச்சியால் தாக்கப்பட்ட இளம் குருத்துகள் முதலில் வாடித் தொங்கி, பின்னர் காய்ந்துபோகும். இவை பூவின் மொட்டுகளைத் துளைத்து உண்ணுவதால் மொட்டுகள் உதிர்ந்து விளைச்சல் குறைகின்றது. அத்துடன் இவை காய்களில் துளையிட்டு உள்ளே சென்று, உட்புற சதைப்பகுதியை உண்கின்றன. அத்துடன் இத்துளைகளினூடாக கழிவுப் பொருட்களை வெளியேற்றுகின்றன, இதனால் காய்களின் தரம் குறைந்து விலை குறைகின்றது.

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

🌱🌱🌱

இப்பூச்சிக்கு ஓரளவு எதிர்ப்புத்திறன் கொண்ட கத்தரி இனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் பாதிப்பு அதிகம் உள்ள பிரதேசங்களில், உருண்டையான கத்தரி இனங்களை விடவும், ஒல்லியான நீளமான கத்தரிக்காய் இனங்களை தெரிந்தெடுத்து வளர்ப்பதால் அறுவடையில் கழிவு விகிதத்தினை ஓரளவுக்கு குறைக்கலாம்.

ஒவ்வொரு பருவத்திலும், ஒரே இடத்தில் தொடர்ந்து கத்தரியினை பயிர் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கத்தரியில், கொத்தமல்லியை ஊடுபயிராக பயிடுவதும் இப் பீடைத்தாக்கத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.

இப்பூச்சியானது கத்தரி மட்டுமல்லாது தக்காளி, மிளகாய், உருளைக்கிழங்கு போன்ற பிற சோலானேசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களையும் தாக்கும். அதனால் இத்தகைய பயிர்களை கத்தரி அருகில் பயிரிடக்கூடாது.

முதிர்ந்த அந்துப் பூச்சிகளைப் கவர்ந்து அழிக்க வயலில், கால் ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் இனக்கவர்ச்சிப்பொறிகளை பொருத்த வேண்டும். மேலும் மாதம் இருமுறை முறை இனக்கவர்ச்சிப் பொறியின் குப்பிகளை மாற்ற வேண்டும்.

இரவு நேரங்களில் ஏக்கருக்கு குறைந்தது 2 என்ற அளவில் விளக்குப் பொறிகளை வைத்து அந்துப்பூச்சிகளைப் கவர்ந்து அழிக்கலாம்.

இப்பூச்சியால் சேதமடைந்த / வாடிய நுனிக்குருத்துகள் மற்றும் துளையுடன் கூடிய காய்களையும் சேகரித்து நெருப்பில் இட்டு அழிக்க வேண்டும்.

How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 11

அக்கினி அஸ்திரம் மூலம் இந்த பீடை கட்டுப்படுத்தப்படுகிறது. இதனை செய்வதற்கு அரை கிலோ புகையிலை, அரை கிலோ பச்சை மிளகாய், அரை கிலோ பூண்டு, 5 கிலோ வேப்பிலை ஆகியவற்றை நன்கு அரைத்து இதனை 15 லீட்டர் மாட்டின் சிறுநீரில் கரைக்க வேண்டும். இக்கலவையை நன்கு கொதிக்க வைத்து, ஆற விட்டு 48 மணி நேரத்தின் பின்னர், சுத்தமான துணியால் வடிகட்டி கண்ணாடி போத்தலில் 3 மாதம் வரை சேமித்து வைக்கலாம். பூச்சிகளை விரட்ட 6 லீட்டர் அக்னி அஸ்திரத்தை 200 லீட்டர் நீரில் கலந்து வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும்.

இதற்கும் கட்டுப்படாவிட்டால், நாற்றுகளை நடமுன்னர் மெட்டாரைசியம் மற்றும் சூடோமோனஸ் நுண்ணுயிர் உரங்களில் தலா 30 மில்லி ஒரு லீட்டர் நீருக்கு எனும் விகிதத்தில் கலந்து அவற்றில் கத்தரி நாற்றுகளை நனைத்து நட்டபின்னர் வாரம் ஒருமுறை பசிலஸ் துரிஞ்சியென்சிஸ் அல்லது பேவேரியா பசியானா அல்லது மெட்டாரைசியம் ஆகிய நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றினை இலைகள், இலையின் அடிப்பகுதி மற்றும் வேர் மண்டலத்தில் தெளிக்கலாம்.
(தொடரும்)
CSJ Agri
21/11/2025

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 11

Whether it is a home garden or a large farm, it is rare to see vegetable cultivation without brinjal (eggplant). However, when brinjal is grown, fruit borers and other pests often appear, which frustrates many farmers.

To combat these naturally, a basic understanding of the causal organisms is essential.

Pest and Disease Challenges in Brinjal

From nursery stage to final harvest, brinjal crops are attacked by insects, worms, fungi, and bacterial diseases. Among these, the fruit borer is the most severe, causing economic losses ranging from 40% to 90% if no crop protection measures are taken.

The female moth responsible for the brinjal fruit borer lays 80 to 250 small, pale-white eggs on the underside of leaves, young shoots, flower buds, and tender parts of the fruit attached to the plant.

  • Egg stage: 3–5 days in summer, 7–8 days in winter.
  • Larval stage: 12–15 days in summer, 14–22 days in winter.
  • Pupal stage: Mature larvae exit stems and fruits, pupating in dried shoots, leaves, or soil at 1–3 cm depth. This lasts 7–10 days in summer and 13–15 days in winter.
  • Adult moths: Usually hide under leaves or shaded parts of the plant during the day. They are whitish with irregular spots on the forewings. Depending on climate, their life cycle lasts 17–50 days.

Symptoms of Crop Damage

During the larval stage, the pest causes damage by boring into tender shoots, flower buds, and fruits.

  • Affected shoots wilt and dry.
  • Flower buds are destroyed, reducing yield.
  • Fruits are bored into, with larvae feeding on the inner flesh.
  • Waste excreted through holes reduces fruit quality and market value.

Natural Control Methods

  • No brinjal varieties with strong resistance have been identified yet. However, in heavily affected areas, long slender brinjal varieties are less damaged compared to round ones.
  • Avoid continuous cultivation of brinjal in the same field every season.
  • Intercropping with coriander is said to reduce infestation.
  • Since the pest also attacks tomato, chili, and potato (other Solanaceae crops), avoid planting these near brinjal.
  • Install pheromone traps at one per quarter acre to attract and kill adult moths. Replace trap containers twice a month.
  • Use light traps (at least 2 per acre) at night to attract and kill moths.
  • Collect and destroy wilted shoots and bored fruits by burning.

Use of Botanical Extracts (Agni Astra)

A traditional preparation called Agni Astra can control the pest:

  • Ingredients: 0.5 kg tobacco, 0.5 kg green chili, 0.5 kg garlic, 5 kg neem leaves.
  • Grind well and mix with 15 liters of cow urine.
  • Boil, cool, and ferment for 48 hours.
  • Filter and store in glass bottles for up to 3 months.
  • For spraying: Mix 6 liters of Agni Astra with 200 liters of water and spray weekly.

Use of Bio-Control Agents

If infestation persists:

  • Before transplanting, soak seedlings in a solution of Metarhizium and Pseudomonas bio-fertilizers (30 ml per liter of water).
  • After transplanting, spray weekly with bio-pesticides such as Bacillus thuringiensis, Beauveria bassiana, or Metarhizium on leaves, undersides, and root zones.

(To be continued) CSJ Agri – 21/11/2025