How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 15
How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 15

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி? : தொடர் 15

எபிலக்னா வண்டு (Epilachna beetle) அல்லது போலிப் பொறிவண்டு (False Ladybird Beetle)
🐞🐞🐞

விவசாயிகளுக்கு நன்மை செய்யும் லேடி பேட் (Ladybird beetle) எனப்படும் பொறிவண்டுகள் அதன் உடலில் 10-12 புள்ளிகளை மட்டும் கொண்டிருக்கும். இவை சாறு உறுஞ்சும் ஏபிட் (Aphids) பூச்சிகளை உண்ணும்,

ஆனால் லேடி பேட் வண்டுகளை விட உடலில் அதிகப் புள்ளிகள் கொண்ட எபிலக்னா எனும் போலிப் பொறி வண்டு, பயிரைத் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவை நன்மை செய்யும் பொறிவண்டு போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், பயிர்களை உண்ணும் ஒரு தீமை செய்யும் பூச்சியாகும். இதன் முதுகில் பொதுவாக 26-28 புள்ளிகள் காணப்படும், இவை கத்தரி, தக்காளி, பீர்க்கு போன்ற இலைகளைச் சுரண்டி சாப்பிட்டு, இலைகளை வலைபோல மாற்றிவிடும்.

மஞ்சள் நிறக் குவியலாக இவற்றின் முட்டைகளையும் மற்றும் அவற்றில் இருந்து வெளிவந்த முள்ளுள்ள சிறிய மயிர்கொட்டி போன்ற மஞ்சள் நிறப் புழுக்களையும் இலைக்கு அடியில் அவதானிக்க முடியும்.

இவற்றின் வண்டு மற்றும் அதன் புழுக்கள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி சாப்பிடுவதால், இலைகள் காய்ந்து, வலை போல மாறி, இறுதியில் கருகிவிடும். இவை இளம் பயிர்களை முழுமையாக அழிக்கும் திறன் கொண்டவை.

எபிலக்னா வண்டுகள் தற்போது நாட்டின் பல இடங்களில் கத்தரி மற்றும் கொடிப்பயிர் செய்கையை அதிகம் சவாலுக்கு உட்படுத்துகின்றன.

ஒரு போலிப்பொறிவண்டு தனது வாழ்நாளில் 12 தடவைகள் முட்டை இடும். ஒவ்வொரு தடவையும் 50 முட்டைகள் இடும். வெயில் காலத்தில் நான்கு நாட்களில் பொரிக்கும் இந்த முட்டைகள் , குளிர்காலத்தில் 8 முதல் 10 நாட்களில் பொரிக்கும்.

ஒவ்வொரு பூச்சியின் வாழ்க்கைச் வட்டத்தில் பருவநிலை வேறுபாடு , வெப்ப மாற்றம் இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில பூச்சிகள் குளிர்காலத்தில் வேகமாக இனப்பெருக்கம் செய்யும். காலநிலை மாற்றம் பூச்சிகளின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அறிந்துவைத்திருப்பதுதான் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டில் முக்கியமான விடயம் .

போலிப்பொறிவண்டின் தாய்ப்பூச்சி , புழுப்பருவம் இரண்டுமே இலையைத் தாக்கும் . ஒரே இலையில் தாய்ப்பூச்சி , புழு இரண்டும் சேர்ந்து ஒரே நேரத்தில் இலையைத் உண்ணும். இதனைக் கத்திரி செய்கையில் தெளிவாகப் பார்க்கலாம் . புழுப்பருவத்தில் மஞ்சள் நிற உடலுடன், மேல்பகுதியில் முள்ளுமுள்ளாக இருக்கும். நன்கு வளர்ந்த புழு கருப்பு நிறத் தலையுடன், தட்டையாக இருக்கும் . 15 நாட்களில் புழுப் பருவத்திலிருந்து கூட்டுப்புழுப் பருவத்துக்கு மாறிவிடும் . இந்த கூட்டுப்புழு செடியின் தண்டு , இலைகளின் அடியில் அதிகமாக இருக்கும்.

10 நாட்களில் கூட்டுப்புழுப் பருவத்திலிருந்து, தாய்ப்பூச்சியாக வெளியேறும். இந்தப் போலிப்பொறிவண்டுகள் நன்கு பறந்து திரியும் அளவுக்கு வலிமையானவை.

கத்திரி, வெள்ளரி , பூசணி , நாடை, பீர்க்கு போன்ற கொடி வகைப் பயிர்களிலும், தக்காளி , உருளைக்கிழங்கு , சோளம் , இறுங்கு, எள் , சோயா , பயறு போன்ற பயிர்களிலும் போலிப் பொறிவண்டுகளின் தாக்குதல் இருக்கும் .

போலிப் பொறிவண்டுகள் , கத்திரி இலையை அரித்து நுளம்பு வலை போல் ஆக்கியதைப் பார்த்ததுமே, போத்தல் போத்தலாக இரசாயன பூச்சிக்கொல்லியையும் தெளிக்க வேண்டியதில்லை.

இயற்கையிலேயே போலிப் பொறிவண்டால் ஏற்பட்ட சக்தி இழப்பை ஈடு செய்வதற்காக, பாதிக்கப்பட்ட கத்திரிச் செடியே புது இலைகளை உற்பத்தி செய்யும். அப்படி மறுபடியும் உற்பத்தியாகும் இலை , போலிப் பொறிவண்டு சாப்பிடத் தகுந்ததாக இருக்காது என்பதுதான் முக்கியமான விடயம்.

இவற்றின் இளம்புழு , தாய் அந்துப்பூச்சிகள் இவற்றின் மேலே முட்டை வைத்து, அதனை அழிக்கும் குளவியும் ( ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த குளவி ) இயற்கையிலேயே இருக்கிறது. இந்தக் குளவி, 80 முதல் 96 % போலிப் பொறிவண்டுகளை அழிக்கும்.

எலுமிச்சைப் புல்லை ( லெமன் கிராஸ் ) அரைத்து, 10 கிராம் அளவுக்கு சாறெடுத்து ஒரு லீட்டர் தண்ணீரில் கலந்து பயிரில் தெளிக்கலாம் . இந்த வாசனையும் போலிப் பொறிவண்டுகளை விரட்டும்.

பயிரில் மிகவும் வேகமாக அழிவை உண்டாக்கும் இவற்றை இவைகளை நஞ்சற்ற முறையில் வினைத்திறனாக கட்டுப்படுத்தி அழிக்க, பெவேரியா பேசியானா எனும் நுண்ணுயிர் பீடை கட்டுப்படுத்தியை 250 மில்லி / 16 லீட்டர் தாங்கி எனும் அளவில் 3 நாட்களுக்கு ஒருமுறை விசிறுவதும் நல்ல பலனை அளிக்கிறது.

(படம் : மாதிரி வீட்டுதோட்டத்தில், சில மாதங்கள் முன்னர், பெவேரியா பேசியானா விசிறப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்ட எபிலக்னா வண்டுகள் மற்றும் அவற்றின் புழுக்கள்.)

CSJ Agri
05/02/2026

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 15

Epilachna Beetle (False Ladybird Beetle) 🐞🐞🐞

Ladybird beetles, which are beneficial to farmers, usually have only 10–12 spots on their bodies. These insects feed on sap-sucking pests such as aphids and help protect crops.

However, the Epilachna beetle, also known as the False Ladybird Beetle, has more spots on its body compared to beneficial ladybird beetles and causes damage to crops. Although it resembles the helpful ladybird beetle in appearance, it is actually a harmful pest that feeds on plants.

The Epilachna beetle generally has 26–28 spots on its back. It scrapes and feeds on the leaves of crops such as brinjal (eggplant), tomato, and ridge gourd, turning the leaves into a net-like structure.

Its eggs can be seen in yellow clusters, usually laid on the underside of leaves. The larvae that hatch from these eggs are yellow in color and covered with thorn-like spines.

Both the adult beetle and its larvae scrape off the green matter of leaves and feed on them. As a result, the leaves dry out, become net-like, and eventually wither. These pests are capable of completely destroying young crops.

At present, Epilachna beetles pose a major challenge to brinjal and creeper crop cultivation in many parts of the country.

A single female beetle lays eggs up to 12 times in its lifetime, depositing about 50 eggs each time. During hot seasons, the eggs hatch within four days, while in cooler seasons, they hatch in 8–10 days.

Climate and temperature variations play an important role in the life cycle of each insect. Some pests reproduce rapidly during cooler seasons. Understanding how climate change affects insect life cycles is essential for effective biological pest control.

Both the adult beetle and the larval stage feed on leaves. Often, both stages can be seen feeding on the same leaf at the same time, which is clearly observed in brinjal cultivation. The larvae are yellow with spines on their upper body. Fully grown larvae have a black head and a flattened body. Within 15 days, the larva develops into the pupal stage. The pupae are usually found attached to plant stems or on the underside of leaves.

Within 10 days, the pupa transforms into an adult beetle. These false ladybird beetles are strong fliers.

They attack crops such as brinjal, cucumber, pumpkin, snake gourd, ridge gourd, tomato, potato, maize, sesame, soybean, and various beans.

When brinjal leaves appear scraped and net-like due to infestation, it is not necessary to immediately spray large quantities of chemical pesticides.

Naturally, the affected brinjal plant often produces new leaves to compensate for the loss of energy caused by the beetle. Interestingly, these newly produced leaves are usually less suitable for the beetles to feed on.

There are also natural biological control agents. Certain parasitic wasps lay their eggs on the larvae and adult moth stages, destroying them. These parasitoid wasps can eliminate 80–96% of Epilachna beetles.

Lemon grass extract can also be used as a natural repellent. About 10 grams of lemon grass juice can be mixed in one liter of water and sprayed on crops. The smell helps repel the beetles.

To effectively control this fast-damaging pest in an eco-friendly manner, the microbial biocontrol agent Beauveria bassiana can be sprayed at a rate of 250 ml per 16-liter tank once every three days. This method provides good results.

(Photo: Sample from a home garden where Epilachna beetles and their larvae were successfully controlled using Beauveria bassiana a few months ago.)

CSJ Agri
05/02/2026