How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 16
How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 16

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி? : தொடர் 16

How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 16 சென்ற சில தொடர்களில், நோய்கள் மற்றும் போஷணை குறைபாடுகள் பற்றி அறிந்து கொண்டோம்.

இனி வரும் சில தொடர்களில், மேலதிக வருமானத்துக்காக அல்லது சொந்த தேவைக்கென மேட்டு நிலக் காணிகளுடன் அமைந்துள்ள சிறிய பள்ளப்பாங்கான நிலங்களில் அல்லது சிறிய பரப்பளவு கொண்ட வயல்களில் முற்றிலும் இயற்கை முறையில் நெற் செய்கை செய்வது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

இயற்கையாகவே அமைந்த அல்லது 10 வருடங்களுக்கு மேல் காணப்படும் தாழ்நிலங்களாயின் அவற்றில் ஓரளவுக்கு பசளைத் தன்மை காணப்படும். ஆயினும் பயிர்ச்செய்கைக்காக அல்லது வேறு தேவைக்காக மண் அகழப்பட்ட நிலமாயின் மண்ணில் பசளை மிகவும் குறைவாகவே காணப்படும்.

இயற்கையான அல்லது நீண்ட நாள் காணப்படும் தாழ்நிலமாயின் ஏக்கருக்கு குறைந்தது 500 கிலோ தரமான கூட்டெரு அல்லது நன்கு உலர்ந்த மாடு / ஆடு / கோழி எரு அல்லது மண்புழு உரம் எல்லா இடங்களிலும் சமமாக இருக்குமாறு எறிந்து, அத்துடன் இரண்டாம் நிலை WDC (உக்க வைக்கும் நுண்ணுயிர்) 16 லீட்டர் தாங்கிக்கு 1.5 லீட்டர் வீதம் கலந்து ஏக்கருக்கு 8 தாங்கிகள் என்ற அளவில் நிலத்துக்கு தெளிக்க வேண்டும். பின்னர் நன்கு உழுது விட வேண்டும்.

மண் அகழ்ந்த நிலமாயின் மேற்கூறியவற்றை இரு மடங்காக, முடிந்தால் மும்மடங்காக கொடுக்க வேண்டும்.

பொருத்தமான விதை நெல்லினை ஓர் தொட்டியில் நீர் நிறைத்து அதனுள் கொட்டி பதர்கள் மற்றும் மேலே மிதக்கும் முதிர்ச்சியற்ற விதைகளை அகற்ற வேண்டும். இன்னும் வினைத்திறனாக செய்ய வேண்டுமாயின் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து, அதில் ஓர் முட்டை மிதக்கும் வரை உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

இந்த உப்பு நீரில் விதை நெல்லைப் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும்.

அடியில் மூழ்கும் விதைகள் தரமானவை. மேலே மிதக்கும் விதைகள் முளைப்புத் திறன் அற்றவையாகும்.

மிதக்கும் விதைகளை நீக்கி, மூழ்கிய விதைகளை மட்டும் எடுத்து, பின் சுத்தமான நீரில் 2–3 முறை கழுவி விதைப்புக்கு பயன்படுத்தலாம்.

இந்த முறையில் சிறந்த முளைப்புத் திறன் கொண்ட விதைகள் கிடைக்கும் மட்டுமல்லாது சில நோய்களையும் குறைக்க உதவுகிறது.

இது சிறிய விவசாயிகளுக்கு ஏற்ற, குறைந்த செலவிலான தொழில்நுட்பமாகும்.

பொருத்தமான காலத்தில் விதைப்பினை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம்.

வீசி எறிந்து விதைத்தல்.

நாற்று மேடையில் பதியம் இட்டு 14 நாட்களில் கைகளால் பிடுங்கி வரிசையில் நடலாம்.

சேற்று வயலாயின் இயந்திர விதைப்பு.

(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Series 16

In the previous series, we learned about diseases and nutritional deficiencies.

In the upcoming series, we will look at how to cultivate paddy entirely through natural methods in small low-lying fields or small plots located near upland areas, either for additional income or for personal consumption.

If the land is naturally formed or has existed as lowland for more than 10 years, it may contain a certain level of natural fertility. However, if the soil has been excavated for cultivation or other purposes, the fertility level will be considerably low.

For naturally existing or long-standing lowlands, at least 500 kg per acre of quality compost, or well-dried cow / goat / poultry manure, or vermicompost should be evenly applied across the field. In addition, second-stage WDC (decomposing microorganisms) should be mixed at 1.5 liters per 16-liter tank, and 8 tanks per acre should be sprayed onto the land. The field should then be thoroughly ploughed.

If the land has been excavated, the above quantities should be applied at double or, if possible, triple the amount.

Suitable paddy seeds should be poured into a container filled with water to remove chaff and immature seeds that float on the surface. For a more effective method, take a bucket of water and add salt until an egg floats.

Place the paddy seeds in this saltwater solution and mix well.

Seeds that sink to the bottom are of good quality. Seeds that float are not viable for germination.

Remove the floating seeds and take only the sunken seeds. Then wash them 2–3 times with clean water before sowing.

This method not only ensures high germination capacity but also helps reduce certain diseases.

It is a low-cost technology suitable for small-scale farmers.

At the appropriate season, sowing can be carried out in three ways:

Broadcast sowing.

Raising seedlings in a nursery bed and transplanting them in rows after 14 days.

Mechanical sowing in muddy (wet) fields.

(To be continued)