How to Successfully Practice Natural Farming in Sri Lanka – Series 7
How to Successfully Practice Natural Farming in Sri Lanka – Series 7

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி? : தொடர் 7

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக
செய்வது எப்படி? : தொடர் 7 How to Successfully Practice Natural Farming in Sri Lanka – Series 7

🌱🌱🌱🌱🌱🌱🌱

எமது இயற்கை விவசாய ஆலோசகரான பேராசிரியர் அருள்நந்தி அவர்களின் கூற்றுப்படி வடகிழக்கில் லீக்ஸ் தவிர்ந்த மற்ற அனைத்து மரக்கறிகளையும் பயிரிடலாம்.

ஆகவே பல அடுக்கு பயிர் செய்கையில், உள்ளூர் மரக்கறிகள் மட்டுமன்றி, கரட், கோவா, ராபு, நோக்கோல், போஞ்சி, பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயம், பெல் பெப்பர், அஸ்பிரகஸ், பேசில் (வெண் துளசி), ரோஸ்மெரி, சலாது, புதினா, கொத்தமல்லி என்று வெரைட்டி கொடுக்கும் போது நிச்சயம் உங்கள் விற்பனை நிலையத்துக்கு பிரகாசமான சந்தை வாய்ப்புள்ளது.

சிறிய மற்றும் பெரிய தோட்டங்கள், கொங்க்ரீட் வேலியுடன், முடிந்தால் மழை காலத்தில் கிளிசறியா, முட் கிளுவை உயிர் வேலி கலந்து விடுவதானது கால் நடைகளில் இருந்து பாதுகாப்பு, காற்று தடுப்பு மற்றும் கொம்போஸ், மண்புழு உர தயாரிப்புக்கு தேவையான இலை குழைகளை தடையின்றி வழங்கும்.

விவசாய நிலத்தை திட்டமிடும் போது, உயரமான, நீண்ட காலப் பயிர்களை வெளிச்சுற்றில் வைத்து, பயிரின் உயரத்தின் மற்றும் காலத்தின் அடிப்படையில் வெளியில் இருந்து உள்நோக்கி நட்டு வரலாம். மழை காலத்தில் நீர் தேங்கும் இடங்களில் பொருத்தமான பயிர்களை நடவேண்டும். (உ+ ம்: வாழை, கங்குன்)
இலைக்கறிகளில் முருங்கை, அகத்தி, தவசி முருங்கை, இலட்சகட்டை / சண்டி, கானாந்தி, முல்லை போன்ற சில மாதங்களில் பயன் தரும் உயரமான மரங்களை, இறுதி வெளிச்சுற்றில் மா, வாழை போன்றவற்றுடன் நட்டு விடலாம்.

அடுத்த உள் சுற்றில் கிழங்குப்பயிர்களான இராசவள்ளி மற்றும் மோதக வள்ளி போன்ற கொடியில் காய்க்கும் கிழங்குகள், மரவள்ளி, கருணைக் கிழங்கு போன்றவற்றையும், பீர்க்கு, பாகல், புடலை, நாடை, அவரை, தும்பை போன்ற கொடிப் பயிர்கள் மற்றும் கொடிப்பசளி, மான்பாய்ந்தான் / ஒடுவடக்கி போன்ற கொடிக் கீரைகளை நட்டு விடலாம்.

அடுத்து வரும் உள் சுற்றுகளை ஓரளவு உயரமான கத்தரி, வெண்டி, பயற்றை, மிளகாய் போன்றவற்றை தொகுதி தொகுதியாக நட்டு அவை சற்று வளர்ந்தவுடன் அடியில் கீரை, புதினா, சலாது, பொன்னாங்கணி போன்றவற்றை தொகுதி தொகுதியாக நடலாம்.

அடுத்த சுற்றில் நிலத்தில் படரும் கொடிப்பயிர்களான பூசணி, வற்றாளை, வத்தகை, பட்டானா மற்றும் கங்குன் கீரை போன்றவற்றை கொண்டு வரலாம்.

இறுதி உள் சுற்றில் பீட்ரூட், கரட், கோவா, ராபு , வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை நடலாம்.
இவற்றை நடும்போது ஒரு பயிரின் நான்கு பக்கமும் ஒன்றிய வாழ்க்கைக்குரிய தாவரங்கள் மற்றும் அடுத்த போகத்தில் பயிர் சுழற்சி செய்யும் தாவரங்களை திட்டமிட்டு வைத்துக்கொள்ளல் மிகவும் முக்கியம்.

அடுத்து உங்கள் தோட்டத்தில் நிழலான ஓர் பகுதியில் கட்டாயம் ஓர் மண்புழு உரத் தயாரிப்பு தொட்டி மற்றும் இயற்கை கரைசல்கள் தயாரிக்கும் கொள்கலன்கள் மற்றும் அவற்றை களஞ்சியப்படுத்தி வைக்க ஓர் ஓலைக் கொட்டகை கட்டாயம் இருக்க வேண்டும்.

அத்துடன் மாட்டின் சிறுநீர் கலந்த சாணம், மாட்டு சிறுநீர், ஆட்டெரு, சாண உயிர் வாயு திரவம், எருக்கிலை போன்ற அத்தியாவசியமான இடுபொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

மேலும் உங்கள் பிரதேசத்தில் உள்ள பெரிய பலசரக்கு கடைகளில் உள்ள நாட்பட்ட / காலாவதியான வடைப்பருப்பு, சோளம், சோயா, உளுந்து, பயறு, எள்ளு, மைசூர் பருப்பு, கௌபி, கசிந்த சீனி, சர்க்கரை, காலாவதியான புளித்த தயிர், மற்றும் பழைய பொருட்கள் விற்கும் கடையில் சிறிது துருப்பிடித்த இரும்பு ஆணிகள் மற்றும் செப்பு கம்பி போன்றவற்றை மிகவும் குறைந்த விலையில் வாங்கி நுண் ஊட்டக் கலவை, மீன் அமிலம் போன்றவற்றை குறைந்த செலவில் தயாரிக்கலாம். (நுண் ஊட்ட கலவை செய்வது பற்றி இந்த தொடருடன் அல்லாது வேறு ஓர் தனிப் பதிவாக இடுகிறோம்.)

அடுத்த தொடரில் இருந்து பெரும்பாலான இயற்கை வழியில் காலடி எடுத்து வைக்கும் விவசாயிகள் முதல் சுற்றிலேயே தோற்றுப்போய் இரசாயன விவசாயத்துக்கு திரும்பக் காரணமான நோய்த் தாக்கங்கள் மற்றும் போசணைக் குறைபாடுகளை இனங்காணல் மற்றும் இயற்கை முறையில் இவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து வைப்பது பற்றி பார்ப்போம்.
(தொடரும்)
CSJ Agri
24/10/2025

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாகசெய்வது எப்படி தொடர் 6
https://maatramnews.com/articles/how-to-successfully-practice-natural-farming-3/

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

How to Successfully Practice Natural Farming in Sri Lanka – Series 7

🌱🌱🌱🌱🌱🌱🌱

In multi-layer farming, not only local vegetables but also varieties such as carrot, cabbage, turnip, knol-khol, beans, beetroot, potato, onion, bell pepper, asparagus, basil, rosemary, lettuce, mint, and coriander can be cultivated. Offering such diversity ensures a bright market opportunity for your produce outlets.

For both small and large gardens, it is advisable to have concrete fencing, and during the rainy season, planting gliricidia or thorny live fences provides protection from livestock, acts as a wind barrier, and supplies a steady amount of leaves for compost and vermicompost production.

When planning farmland, taller and long-term crops should be planted on the outer circle, gradually planting inward based on the height and duration of the crops. In areas where water stagnates during the rainy season, suitable crops such as banana and kangkung should be planted.

Among leafy vegetables, moringa, agathi, drumstick, lakshakathai (sandy), kananthi, and mullai—trees that yield within a few months—can be planted in the outermost circle along with mango and banana.

In the next inner circle, root crops such as sweet potato and yam varieties (like cassava and colocasia), along with climbing vegetables such as ridge gourd, bitter gourd, snake gourd, long bean, ash gourd, and leafy creepers like manpaynthaan and oduvathakki, can be planted.

Further inside, moderately tall crops such as brinjal (eggplant), okra, long beans, and chili can be planted in sections. Once they grow, greens such as spinach, mint, lettuce, and ponnaanganni can be cultivated underneath.

The next inner circle can include ground-spreading crops like pumpkin, bottle gourd, cucumber, peas, and kangkung.

Finally, the innermost circle can be used for beetroot, carrot, cabbage, turnip, onion, and potato. When planting, it is crucial to ensure that each crop is surrounded by companion plants and to plan crop rotation for the next cycle.

Every garden must also include a vermicompost pit and containers for preparing natural liquid fertilizers and bio-extracts, with a small thatched shed for storage.

Additionally, ensure a steady supply of essential organic inputs such as cow dung mixed with urine, goat manure, biogas slurry, and castor leaves.

You can also obtain expired food items such as lentils, corn, soybeans, black gram, green gram, sesame, Mysore dhal, coffee, old sugar, jaggery, curd, and rusted iron nails or copper wires from local grocery stores at very low prices. These can be used to prepare micronutrient mixtures and fish amino acids at minimal cost.
(Note: A separate post will explain how to prepare these micronutrient mixtures.)

From the next part onward, we will discuss why most farmers who begin natural farming fail during the first cycle, often reverting to chemical farming—focusing on identifying disease attacks and nutritional deficiencies, and natural methods of prevention and management.

(To be continued)
CSJ Agri
24/10/2025