பருவ மழையை அடுத்து தற்போது பரவும் வெள்ளை ஈ, அதிகமாக செவ்விளநீர் குலைகளின் மஞ்சள் நிறத்தில் ஈர்க்கப்படுவதால் Impact of Whitefly and Methods of Control அவற்றை மிகவும் அதிகளவில் பாதித்துள்ளது.
ஏற்றுமதிச் சந்தையில், கடந்த காலங்களில் ஆண்டுக்கு, 95 லட்சம் செவ்விளநீர் காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெள்ளை ஈ பாதிப்பு பரவி வருவதால், எதிர்காலத்தில் செவ்விளநீர் ஏற்றுமதிச் சந்தையும் பாதிக்கப்படலாம்.
ஏற்றுமதி மாத்திரமல்லாது இளநீர் வியாபாரம் செய்யும் மற்றும் இதனை சார்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறிக்குள்ளாகின்றது.
வெள்ளை ஈ தாக்கத்தின் அறிகுறிகள்
இவற்றின் முட்டைகள் சுருள் வடிவத்தில் இலையின் அடிப்பாகத்தில் காணப்படும். இதன் குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் ஓலையின் அடியிலிருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக்கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. அதனால் ஓலைகளின் மேல் கருப்பு நிறமுள்ள பூஞ்சணம் படர்கிறது.
அதிகளவு வெப்பம் மற்றும் குறைந்த காற்றின் ஈரப்பதம் ஆகிய காரணங்களால் இவை அதிகளவு பெருகியிருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
மஞ்சள் நிறம் இந்தப் பூச்சிகளைக் கவரும் தன்மையுடையது. அதனால் தான் செவ்விளநீர் செய்கை அதிகமாக பாதிப்புக்குள்ளாகிறது.
இவற்றின் வாழ்க்கை வட்டம்
“பெண் ஈயைவிட, ஆண் ஈ அளவில் சிறியது. இதன் முன் இறக்கைகளில் கரும்புள்ளிகள் காணப்படும். வயது முதிர்ந்த பெண் ஈ மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளைச் சுருள் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பகுதியில் இடுகின்றன. முட்டைகள் ஒருவித மெழுகுப் பூச்சுடன் காணப்படும். அதிலிருந்து இளம்பூச்சிகள் வெளிவரும். இவை நான்கு பருவங்களைக் கடந்து, கூட்டுப்புழுப் பருவத்தை அடையும்.
அதற்குப் பிறகு முதிர்ந்த ஈக்களாக வெளிவரும். 20-30 நாட்களில் புழுப் பருவம் வளர்ச்சியடைந்து, கூட்டம் கூட்டமாகத் தென்னை ஓலையின் அடிப்பகுதியை அடையும். காற்றின் மூலம் அடித்துச் செல்லப்பட்டு, ஒரு மரத்தில் இருந்து அடுத்தடுத்த மரங்களுக்கும், அருகில் உள்ள தோட்டங்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.
இவற்றின் கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பாக மேலதிக விளக்கங்களை கடந்த ஆண்டு, நாம் தமிழ்நாடு வேளாண் பொறியாளர் திரு. பிரிட்டோராஜ் அவர்களிடமும், கொழும்பிலுள்ள எமது CSJ Agriயின் ஆலோசகர்களான விவசாய மற்றும் நுண்ணுயிரியல் விரிவுரையாளர் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வுக்கூட நிபுணர்களிடம் கீழ்வரும் ஆலோசனைகளைப் பெற்றோம்.
இவற்றினை கட்டுப்படுத்தும் வழிகள்
🍃🍃
1.பொதுவாக களைகொல்லிகள் மிகையாகப் பயன்படுத்தப்பட்ட நிலங்களில் வெள்ளை ஈ தாக்கம் அதிகமாக வரும். (களை கொல்லி விளைவால் தாவரம் சோர்வாக இருப்பதால்)
2.தரை வழியே சரியான நீர்ப்பாசனம் கொடுக்காத நிலங்களில் வெள்ளை ஈ தாக்கம் அதிகமாக வரும்.
3.தரை வழியே போதுமான சத்துக்கள் கொடுக்காத நிலங்களில் வெள்ளை ஈ தாக்கம் அதிகமாக வரும்.
4.நோய் எதிர்ப்புத்திறன் குறைவான மரங்களில் வெள்ளை ஈ தாக்கம் அதிகமாக வரும்.
இதனால் தொடர்ந்த பராமரிப்பு மிகவும் அவசியம்.
மாதம் ஒருமுறை குறைந்தபட்சம் 50 மில்லி சூடோமோனஸ் நுண்ணுயிர் உரத்தை நீருடன் கலந்து மரத்தை சுற்றி ஊற்றவேண்டும். இதனை மாதம் ஒருமுறை செய்யும் போது மரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சரியான காலத்தில் வழங்கும் இடுபொருட்கள் மூலம் போசணையை உறுதி செய்யும் போது தென்னை மட்டைகள் வலுவாகி ஓலைகள் உறுதியாகி, வெள்ளை ஈயின் தாக்கத்தை, பரவலாக்கத்தை எதிர்க்கும் அளவிற்கு ஓலையின் தோல் பகுதி தயாராகிவிடும்.
வெள்ளை ஈயானது காற்றில் பறந்து வரும் ஒரு அமைப்பாகும். இதனை தடுக்கும் பல பொறிமுறைகள் கூறப்பட்டாலும், உண்மையில் ஒரு மரம் இதனை வீரியமாக எதிர்ப்பதற்கு தயாராக உள்ள சூழ்நிலையை உறுதிசெய்வதே முக்கியமான படிநிலையாகும்.
மரத்தில் போசணை தேவையை, ஜீவாமிர்தம் அல்லது மீன் அமிலம் மூலம் மரத்திற்கு கொடுக்கலாம்.
இவற்றை விடவும் சற்று நவீன முறையில் இயற்கை விவசாயம் செய்பவர்கள் EM கரைசலை மரத்திற்கு கொடுக்கலாம்.
மேற்கூறியவற்றை விவசாயியின் பொருளாதார வசதிக்கேற்ப வாரம் ஒருமுறை சரியான அட்டவணைப்படி கொடுக்கவும்.
இவற்றின் மூலம் வெள்ளை ஈ தாக்கத்தை வருமுன் காக்கலாம்.
அதற்கும் மீறி கட்டுப்படுத்த முடியாதுள்ளது எனில் கடைசி முயற்சியாக நஞ்சற்ற வேர்ட்டிசீலியம் லக்கானி உயிர் உரத்தை 14 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து பவர்ஸ்பிரேயர் மூலம் விசிறுவதன் மூலம் 3 பிரயோகங்களில் இவற்றை நன்கு கட்டுப்படுத்தலாம்.
மஞ்சள் ஒட்டுப்பொறிகளை ஒரு ஏக்கருக்கு குறைந்தது 10 என்ற எண்ணிக்கையில், 6 அடி உயரத்தில் தொங்க விட வேண்டும். மஞ்சள் நிறத்தால் கவரப்பட்டு வரும் பூச்சிகள் அட்டையில் ஒட்டிக்கொள்ளும்.
அதன் பிறகு துணியால் அதை துடைத்து விட்டு, மீண்டும் ஒட்டுப்பொறியில் எண்ணெய் தடவி வைக்க வேண்டும்.
மரத்தில் உள்ள பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க, இலை மட்டைகளில் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தண்ணீர் விசிறித் தெளிக்கலாம்.
இவற்றின் இரை விழுங்கிகள் இந்த வளர்ந்த பூச்சிகளை நன்றாக கட்டுப்படுத்துவதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 1,000 என்ற எண்ணிக்கையில் விடுவதன் மூலம் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது ‘கொக்ஸினெலிட்’ பொறி வண்டுகள், ‘என்கர்ஸியா’ ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். அவற்றைக் கொண்டும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம்.
ஒரு லீட்டர் தண்ணீரில் வேப்பெண்ணெய் 30 மில்லி எடுத்து ஒட்டும் திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம் தெளிக்க வேண்டும்.
ஓலைகளில் படரும் கரும் பூஞ்சணத்தை நிவர்த்தி செய்ய 25 கிராம் கோதுமை மாவை (All purpose flour) ஒரு லீட்டர் தண்ணீரில் கலந்து, அல்லது அரிசிக்கஞ்சை
ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். இப்படி செய்யும் போது வெள்ளை ஈக்களால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கலாம் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் சில தமிழக இயற்கை விவசாய நண்பர்களுடனான கலந்துரையாடல்களில் கீழ்வரும் இயற்கை தீர்வுகளையும் பெற்றோம்.
தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் கீழ்வரும் நஞ்சற்ற முறைகளைக் கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
🍃விளக்குப் பொறிகள் ஏக்கருக்கு 2 வீதம் 6 முதல் 11 மணி வரையிலும் ஒளிரசெய்ய வேண்டும்.
🍃வேப்பங்கொட்டைச் சாறு 5% , வேப்பெண்ணெய் 5 மில்லி தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
🍃 நொச்சி இலைச்சாறு (50 கிராம்/ லீட்டர்)
🍃 நித்திய கல்யாணி எனப்படும் பட்டிப்பூ இலைச் சாறு (50 கிராம் லிட்டர்)
🍃கடைசி முயற்சியாக வேர்ட்டிசீலியம் லக்கானி உயிர் உரம் ஒரு லீட்டர் நீருக்கு 30 மில்லி எனும் அளவில் கலந்து 14 நாட்கள் இடைவெளியில் தென்னோலைகளில் நன்கு விசிற இந்த நோய்த்தாக்கம் கட்டுக்குள் வரும்.
மேலதிக விபரங்கள்
CSJ Agri
076 225 0017
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Impact of Whitefly and Methods of Control
Following the monsoon season, the spread of whiteflies has increased. These insects are highly attracted to the yellowish shade of king coconut clusters, causing severe damage to the trees.
In the export market, Sri Lanka exported 9.5 million king coconuts annually in previous years. But due to the current spread of whiteflies, the future of the king coconut export industry could be affected.
Not only exports — the livelihood of thousands of families involved in the king coconut trade is now under threat.
Symptoms of Whitefly Infestation
Whitefly eggs appear in spiral formations on the underside of leaves. Both nymphs and adult whiteflies suck the sap from the base of the fronds. Their honeydew excretion spreads over the surface of lower leaves, causing black sooty mold to form on the fronds.
Researchers believe that high temperatures and low humidity levels may be contributing to their rapid population growth.
Since whiteflies are attracted to yellow, king coconut plantations are the most frequently affected.
Life Cycle of Whiteflies
- Male whiteflies are smaller than females.
- They have dark spots on their front wings.
- Mature females lay yellow, oval-shaped eggs in spiral patterns on the underside of fronds.
- The eggs are covered in a waxy substance.
- Nymphs emerge from the eggs, pass through four stages, and eventually enter the pupal stage.
- Afterward, adult flies emerge.
- Within 20–30 days, the pupal stage develops into adult whiteflies, which gather in clusters under coconut fronds.
- They are dispersed by wind from one tree to others and spread across surrounding gardens.
Control Measures
Agricultural experts including Mr. Brittoraj from Tamil Nadu and the consultants of CSJ Agri, Colombo (agriculture & microbiology specialists), recommended the following methods:
Factors that Increase Whitefly Infestation
- Excessive use of weedicides (weakens plants).
- Improper irrigation.
- Lack of essential nutrients in the soil.
- Low disease-resistance in trees.
Thus, regular maintenance is essential.
- Apply 50 ml of Pseudomonas bio-fertilizer mixed with water around the base of the tree once a month to improve immunity.
- Provide timely soil nutrients using organic fertilizers.
- Use Jeevamirtham, fish amino acid, or EM solution (for advanced natural farming methods) weekly as per affordability.
These practices strengthen coconut leaves, making them more resistant to whitefly attacks.
Advanced Biological & Natural Control Methods
If infestation increases beyond control:
- Use Verticillium lecanii bio-fungus every 14 days using a power sprayer. Three applications can significantly reduce infestation.
Yellow Sticky Traps
- Hang 10 traps per acre at 6 feet height.
- Wipe and reapply oil when insects get stuck.
Washing Leaves
- Spray water forcefully under the coconut fronds to reduce population growth.
Natural Predators
- Introduce 1,000 natural enemies per acre (ladybird beetles Coccinellidae, Encarsia parasitoids).
- These predators feed on whiteflies and naturally suppress their population.
Neem-Based Sprays
- Mix 30 ml neem oil per litre of water with sticker solution and spray under fronds.
Controlling Sooty Mold
- Mix 25 g wheat flour or rice gruel in 1 litre of water and spray on fronds to reduce black sooty fungus.
Other Natural Remedies Suggested by Tamil Nadu Farmers
- Install light traps (2 per acre) and operate from 6 PM to 11 PM.
- Spray:
- 5% neem seed extract
- 5 ml neem oil per litre
- Crushed Nochi leaves (50 g/litre)
- Nithiyakalayani (Catharanthus roseus) leaf extract (50 g/litre)
- As a last resort, use Verticillium lecanii 30 ml per litre every 14 days.
For more details:
CSJ Agri – 076 225 0017

