சந்தை மதிப்பீட்டிற்கான மூன்று முக்கிய நிலைகள்: TAM, SAM, SOM விளக்கம்

சந்தை மதிப்பீட்டிற்கான மூன்று முக்கிய நிலைகள்: TAM, SAM, SOM விளக்கம்

TAM, SAM, SOM (Market Potential)ஆகியவை மூன்றும் சந்தைப்படுத்தல் (Marketing) பகுப்பாய்வில் (Market Analysis) பயன்படும் முகாமைத்துவம் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதற்கு உதவிடும் கருவிகள் ஆகும். ஆனால், இவை சந்தைப்படுத்தல் சார்ந்த திட்டங்களை தயாரிக்கும் போது மிக முக்கியமான அடிப்படைத் தரவுகளைக் வழங்குகின்றன. இவற்றினைப் பற்றிய சிறு விளக்கம் விரிவாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. TAM – Total Addressable Market – (மொத்த அடையாளப்படுத்தப்பட்ட சந்தை):

இது ஒரு தயாரிப்பு அல்லது சேவைக்காக முழு சந்தையில் இருக்கும் மொத்த தேவையை குறிக்கிறது. ஒரு நிறுவனம் 100% சந்தை பங்கையும் பிடித்தால் கிடைக்கும் அதிகபட்ச வருமான வாய்ப்பை TAM குறிப்பிடுகிறது.


வணிக நோக்கில் பயன்:

  • எந்த சந்தையில் நுழைய வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவுகிறது.
  • நீண்டகாலத்திற்கான திட்டமிடலுக்கு முக்கியம்.
  • முதலீட்டாளர்களை ஈர்க்க சந்தை திறனை நிரூபிக்கிறது.

2. SAM – Serviceable Addressable Market – (சேவை செய்யக்கூடிய அடையாளப்படுத்தப்பட்ட சந்தை):

TAM இல் இருந்து நிறுவனத்தால் நிலையானதாகவும் அடையக்கூடியதாகவும் உள்ள பகுதியை குறிக்கிறது. இது புவியியல் கட்டுப்பாடுகள், இலக்காக கொள்ளப்பட்ட வாடிக்கையாளர் குழுக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கணிக்கப்படுகிறது.

வணிக நோக்கில் பயன்:

  • நல்ல சந்தை திட்டமிடலுக்கும் வள ஒதுக்கீட்டுக்கும் வழிவகுக்கிறது.
  • நிஜமான விற்பனை கணிப்புகளை அமைக்க உதவுகிறது.
  • வாடிக்கையாளர் தேவைகளுக்கேற்ப தயாரிப்பை மேம்படுத்த உதவுகிறது.

3. SOM – Serviceable Obtainable Market – (சேவை செய்து அடையக்கூடிய சந்தை):

SAM இல் இருந்து நிறுவனத்தால் உண்மையாக அடையக்கூடிய பங்கை குறிக்கிறது. போட்டி நிலைமை, வளங்கள் மற்றும் சந்தை சூழ்நிலைகள் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வணிக நோக்கில் பயன்:

  • போட்டி சூழ்நிலையைப் பொருட்படுத்தி விற்பனை இலக்குகளை சீரமைக்க உதவுகிறது.
  • நிறுவனத்தின் வளர்ச்சி நோக்கங்களை மதிப்பீடு செய்ய உதவுகிறது.
  • அடையக்கூடிய சந்தைப் பங்கு மூலம் கிடைப்பதற்கு ஏற்ற வகையில் முயற்சிகளைத் திட்டமிட உதவுகிறது.

சிறந்தது எது?

இவை மூன்றும் வெவ்வேறாக இல்லாமல், ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு தேவையான கட்டங்களாக காணப்படுகின்றது. எனவே எந்த ஒன்று சிறந்தது என்று சொல்ல முடியாது, ஏனெனில் அவை ஒன்றோடொன்று தொடர்புடையது:

கட்டம்பயன்முக்கியத்துவம்
TAMசந்தை வாய்ப்பை மதிப்பீடு செய்யமுதலீட்டாளர்களை ஈர்க்க உதவும்
SAMஇலக்குக் குழுவைத் தேர்வு செய்யவிளம்பரத் திட்டங்களை அமைக்க
SOMயதார்த்த விற்பனை இலக்குகளை அமைக்கவளர்ச்சியை திட்டமிட உதவும்

 TAM-SAM-SOM கருவியை எப்படி பயன்படுத்துவது?

இதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட படிகளாகப் பயன்படுத்தலாம்:

  1. TAM (Total Addressable Market) – மொத்த சந்தை அளவை கணிக்கவும்
  • உங்கள் தயாரிப்பு/சேவை தேவைப்படுகின்ற அல்லது பெற்றுக்கொள்ளும் மொத்த சந்தையை அடையாளம் காணுங்கள்.
  • பொதுவாக மொத்த நுகர்வோரின் எண்ணிக்கையை மற்றும் அவற்றின் சராசரி செலவினங்களை கணக்கிடுங்கள்.

உதாரணம்:
நீங்கள் ஒரு வீடியோ எடிட்டிங் சேவையினை இணையவழி ஊடான சேவையாக தொடங்க விரும்புகிறீர்கள்.
இலங்கையில் உள்ள 15-35 வயதுடைய இளைஞர்கள் – இதுவே உங்கள் TAM. (உதாரணமாக 20 லட்சம் பேர்)

பயன்பாடு:

  • சந்தையின் அளவை முழுமையாக புரிந்து கொள்ளலாம்.
  • முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு காட்டலாம்.

2. SAM (Serviceable Addressable Market) – சேவையளிக்கக்கூடிய நிலையான சந்தையைத் தேர்ந்தெடுக்கவும்

புவியியல் அமைப்பு (பிரதேசங்கள்), தொடர்பாடல் மொழி, தொழில்நுட்ப அணுகல், இலக்கு குழு போன்ற காரணிகளை கொண்டு, உங்கள் நிறுவனத்தால் உண்மையில் அடையக்கூடிய சந்தையை வரையறுக்கவும்.

உதாரணம்:
இதே சேவையை இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் உள்ள 15-35 வயது இளைஞர்கள் என்ற வகையில் குறைக்கலாம் – இதுவே உங்கள் SAM (உதாரணமாக 4 லட்சம் பேர்)

பயன்பாடு:

  • விளம்பரத்திற்கான இலக்குகளை தெளிவுபடுத்தலாம்.
  • விற்பனை ஆரம்பித்தல் அல்லது அதற்கான அறிவிப்பினை மேற்கொள்ளலாம்.

3. SOM (Serviceable Obtainable Market) – எட்டக்கூடிய சந்தையை மதிப்பீடு செய்யவும்

போட்டிகள், வளங்கள், சந்தை நுழைவு திறன் போன்றவை அடிப்படையில் நீங்கள் உண்மையில் எட்டக்கூடிய வாடிக்கையாளர் எண்ணிக்கையை கணிக்கவும்.

உதாரணம்:
போட்டி நிறுவனங்கள், உங்கள் விளம்பர வலிமை, விலைமுறை, சேவையினை வழங்ககூடிய எமது வளங்கள், ஆகியவற்றின் அடிப்படையில் எத்தனை பேர் உங்கள் சேவையை பெற வாய்ப்பு உள்ளது என தீர்மானிக்கலாம் – இதுவே SOM. (உதாரணமாக 10,000 பேர்)

பயன்பாடு:

  • விற்பனை இலக்குகள் (sales target) அமைக்கலாம்.
  • வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தலாம்.

TAM-SAM-SOM கருவி எங்கு பயன்படுத்தலாம்?

பயன்பாடுவிளக்கம்
புதிய வணிகத் திட்டம் உருவாக்கசந்தையின் வாய்ப்பு இருக்கிறதா என்பதை கணிக்க உதவும்
முதலீடு பெறமுதலீட்டாளர்களிடம் சந்தை அளவைக் காட்ட உதவும்
சந்தைப்படுத்தல் திட்டம்இலக்கு வாடிக்கையாளரை அடையாளம் காண உதவும்
விற்பனை வளர்ச்சி திட்டம்யதார்த்த இலக்குகளை அமைக்க உதவும்

அமிர்தா
புகையிரத நிலைய வீதி,
மட்டக்களப்பு.
+94 76 353 9095
www.amirda.lk
16.06.2025

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Understanding Market Potential: Visualizing TAM, SAM, and SOM

TAM, SAM, and SOM are three essential tools used in marketing and market analysis to support decision-making in management. These tools provide foundational data that are crucial when preparing marketing strategies. A detailed explanation of these concepts is provided below.


1. TAM – Total Addressable Market

TAM refers to the total demand in the entire market for a particular product or service. It represents the maximum revenue opportunity if a company captures 100% of the market share.

Business Use:

  • Helps determine which market to enter.
  • Important for long-term strategic planning.
  • Demonstrates market potential to attract investors.

2. SAM – Serviceable Addressable Market

SAM is the segment of the TAM that is realistically reachable and serviceable by the company. It takes into account factors like geographic limitations, targeted customer groups, and other relevant criteria.

Business Use:

  • Helps with market planning and resource allocation.
  • Allows for realistic sales forecasting.
  • Helps in improving the product based on customer needs.

3. SOM – Serviceable Obtainable Market

SOM represents the actual market share the company can realistically achieve from the SAM. It considers factors like competition, available resources, and current market conditions.

Business Use:

  • Helps adjust sales targets considering competition.
  • Assists in assessing business growth objectives.
  • Supports planning of efforts to capture achievable market share.

Which One is the Best?

These three concepts are not independent of each other — they are interrelated and sequential. Hence, it’s not about choosing which is best, but rather understanding how each stage supports the next.

StagePurposeImportance
TAMAssess market opportunityHelps attract investors
SAMSelect target groupHelps in creating marketing plans
SOMSet realistic sales goalsHelps plan growth strategy

How to Use TAM–SAM–SOM?

You can follow these step-by-step processes:


1. TAM – Calculate Total Market Size

  • Identify the total potential market for your product/service.
  • Generally involves estimating the total number of potential consumers and their average spending.

Example:
You plan to launch an online video editing service.
The 15–35 age group across Sri Lanka can be considered your TAM — approximately 2 million people.

Use:

  • Understand the full market scope.
  • Present the market opportunity to potential investors.

2. SAM – Define a Reachable Market Segment

  • Narrow your market based on geography, language, access to technology, and target demographics.

Example:
Narrowing the TAM to 15–35-year-olds with smartphones and internet access – this becomes your SAM, approximately 400,000 people.

Use:

  • Clarify advertising and targeting strategies.
  • Prepare for initial sales and promotional efforts.

3. SOM – Estimate Attainable Market

  • Based on factors such as competition, resources, and market entry capability, estimate how many customers you can realistically acquire.

Example:
Considering competitive companies, your advertising strength, pricing strategy, and service delivery capabilities, your SOM could be around 10,000 people.

Use:

  • Set practical sales targets.
  • Implement growth strategies effectively.

Where Can TAM–SAM–SOM Be Used?

ApplicationDescription
New Business PlanningHelps assess if there’s a viable market opportunity
Seeking InvestmentDemonstrates market size to potential investors
Marketing StrategyHelps identify the ideal target customer group
Sales Growth StrategySupports setting achievable sales goals

📍 Amirda, Railway Station Road,
Batticaloa, Sri Lanka
📞 +94 76 353 9095
🌐 www.amirda.lk
📅 Published on: 16.06.2025

For more news Maatram News