ஒரு தொழில்முயற்சியாளர் தனது பொருட்களை மற்றும் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து அதன் மூலம் தான் எதிர்பார்க்கும் இலாபத்தினை அடைவது வரையிலான பல்வேறு செயற்பாடுகளில் சந்தைப்படுத்தல் என்பது மிக முக்கியமானது. ஒரு சிறுதொழில் முயற்சியாளர் தொடக்கம் பன்னாட்டு நிறுவனம் வரையும் தமது வியாபாரத்திற்கு பல்வேறு பிரிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக,
- நிர்வாகம் (Administration)
- மனிதவள மேலாண்மை (Human Resources – HR)
- நிதி மற்றும் கணக்கீடு (Finance & Accounting)
- சந்தைப்படுத்தல் (Marketing)
- விற்பனை (Sales)
- தகவல் தொழில்நுட்பம் (Information Technology – IT)
- உற்பத்தி மற்றும் செயற்பாடு (Production & Operations)
- வாடிக்கையாளர் சேவை (Customer Service)
- ஆய்வு மற்றும் மேம்பாடு (Research & Development – R&D)
- சட்டப் பிரிவு (Legal Department)
இவ்வாறு 10 இற்கு மேற்பட்ட பிரிவுகள் காணப்பட்டாலும் சிறுதொழில் முயற்சி நிறுவனங்களில் குறைந்தது நிர்வாகம், நிதி, சந்தைப்படுத்தல் என்பன மிக முக்கியமான அடிப்படைகளாகும். அவற்றில் சந்தைப்படுத்தல் மிகவும் முக்கியமானதாகும். அதில் பலருக்கு குழப்பமாக இருப்பது சந்தைப்படுத்தல் (Marketing), விளம்பரம் (Promotion or Advertisement), விற்பனை (Sales) என்பவை எல்லாம் ஒன்றா? அல்லது வேறுபட்டவையா? என்ற பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றது. எனவே எனது அனுபவதில் இவை பற்றிய சில விடயங்களை பகிர்ந்துகொள்கின்றேன்.
1. சந்தைப்படுத்தல் (Marketing)
சந்தைப்படுத்தல் என்பது ஒரு உற்பத்தியினை அல்லது சேவையினை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அது பற்றிய ஒரு ஆராய்ச்சியும், வாடிக்கையாளர்களின் தேவைகள், விருப்பங்கள் என்பவற்றை புரிந்துகொள்வது போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகும். அத்தோடு இந்த உற்பத்திகள் அல்லது சேவைகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வரையான ஒரு திட்டமிடலும் இந்த சந்தைப்படுத்தலில் உள்ளடங்குகின்றது.
உள்ளடங்கும் முக்கிய செயல்பாடுகள்:
- சந்தை ஆய்வு (Market Research)
- தயாரிப்பு மேம்பாடு (Product Development)
- பிராண்டிங் (Branding)
- விலையீடு (Pricing Strategy)
- சந்தைப்படுத்தல் திட்டம் (Marketing Plan)
- வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (Customer Relationship Management)

2. விளம்பரம் (Promotion or Advertisement)
விளம்பரம் என்பது உற்பத்திகள் அல்லது சேவையை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் ஒரு சந்தைப்படுத்தல் முறைமையும் செயற்பாடுமாகும். இது விளம்பரங்கள், சலுகைகள், பிரச்சாரங்கள், பொது தொடர்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது.
உள்ளடங்கும் முக்கிய செயல்பாடுகள்:
- விளம்பரம் (TV, சமூக ஊடகங்கள், இணையவழி விளம்பரங்கள்)
- பொது தொடர்பு (பத்திரிகை செய்தி, ஊடக விளம்பரம்)
- விற்பனை ஊக்குவிப்புகள் (தள்ளுபடிகள், சிறப்பு சலுகைகள், இலவச சேவைகள்)
- சமூக ஊடக பிரச்சாரம் (Facebook, Instagram, YouTube)
3. விற்பனை (Sales)
விற்பனை என்பது நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு, அவர்களை ஒரு உற்பத்தி அல்லது சேவையை வாங்க வைக்கும் செயல் முறையாகும். இந்த செயல்முறையில் வாடிக்கையாளருடன் நேரடித் தொடர்பினை மேற்கொண்டு அவருடனான கருத்தாடல் மற்றும் உற்பத்தி அல்லது சேவைகள் பற்றிய தெளிவினை அவருக்கு வழங்கி அவர் எமது சேவையினை பெற்றுக்கொள்ள வைத்து எமது நுகர்வோராக அவரை உள்வாங்குவதன் மூலம் எமது வருமானத்தை ஈட்டும் பொறிமுறையாகும்.
உள்ளடங்கும் முக்கிய செயல்பாடுகள்:
- வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பது
- தயாரிப்பு மற்றும் அதன் நன்மைகளை விளக்குதல்
- விலைக் குறைப்பு பேச்சுவார்த்தை (Negotiation)
- வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை தீர்த்தல்
- ஒப்பந்தங்களை ஏற்படுத்தல்
- வாடிக்கையாளரை எமது நிறுவனத்தின் சேவையினை பெறவைத்தல்.
மேற்படி இந்த 3 சொற்கள் பற்றியும் சுருக்கமாகவே குறிப்பிட்டுள்ளேன். அவை ஒன்றுடன் ஒன்று எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றது என்பது பற்றி குறிப்பிடுவதானால்,
- சந்தைப்படுத்தல் மூலம் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு தயாரிப்பை அறிமுகப்படுத்துதல்.
- விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்தல் மற்றும் அவர்களை தயாரிப்பில் ஆர்வமூட்டுதல்.
- விற்பனை மூலம் ஆர்வம் கொண்டவர்களை நிஜமான வாடிக்கையாளர்களாக மாற்றி வருவாய் ஈட்டுதல்.
உதாரணம்:
நாம் ஒரு பயிற்சிநிலையத்தினை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அதில் காணப்படும் ஒரு இணையவழி கணினி பயிற்சி (Online IT Course) சேவையினை வழங்க விரும்பினால்,
- சந்தைப்படுத்தல் மூலம், எந்தக் குழுவை இலக்காகக் கொள்ள வேண்டும், எந்த மாதிரியான பாடத்திட்டம் உருவாக்கலாம், எவ்வளவு காலத்தில் நடைமுறைப்படுத்தலாம், இந்த பயிற்சியினால் கிடைக்கவிருக்கும் பயன்கள் என எல்லா விடயங்களையும் திட்டமிடுவதுடன் இதற்கான சந்தைவாய்ப்பு இருக்கின்றதா என்பதைக் கண்காணிக்கலாம்.
- விளம்பரம் மூலம், நேரடி மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள், சிறப்பு சலுகைகள், மற்றும் வீடியோக்கள் மூலம் மக்களை ஈர்க்கலாம். அத்துடன் எமது இலக்கு குழுக்களை அடையாளப்படுத்தி அவர்களிற்கு இது சம்பந்தமான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளவும்.
- விற்பனை மூலம், ஆர்வமுள்ள மாணவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்ளச் செய்தல்.
தொழில்முனைவு மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் பல்வேறு வகையான சவால்களை எதிர்நோக்குகின்றனர். ஆனாலும் அவற்றினைத் தாண்டி அவர்கள் சாதிக்கும்போது பலருக்கான தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கின்றது. எனவே தொழில்முயற்சியாளர்களின் வெற்றிக்கான தீர்வுகளை வழங்க அமிர்தா நிறுவனம் என்றும் தயாராக உள்ளது.
க.பிரதீஸ்வரன்
நிறுவுனர்,
அமிர்தா.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Marketing and Sales
For an entrepreneur, marketing plays a crucial role in reaching customers with their products and services, ultimately leading to the desired profit. Whether it is a small business or a multinational corporation, several business divisions must be implemented for successful operations. Some of these include:
- Administration
- Human Resources (HR)
- Finance & Accounting
- Marketing
- Sales
- Information Technology (IT)
- Production & Operations
- Customer Service
- Research & Development (R&D)
- Legal Department
While more than 10 departments can be found in an organization, administration, finance, and marketing are fundamental pillars for small businesses. Among them, marketing holds significant importance.
However, there is often confusion about whether marketing (Marketing), advertising (Promotion or Advertisement), and sales (Sales) are the same or different concepts. I am sharing insights from my experience to clarify these distinctions.
1. Marketing
Marketing is the research and strategy involved in bringing a product or service to the customer. It includes understanding customer needs and preferences, planning how the product or service reaches them, and creating an overall strategy for market success.
Key Marketing Activities:
- Market Research – Understanding consumer needs and competition
- Product Development – Creating and improving offerings
- Branding – Building identity and reputation
- Pricing Strategy – Setting competitive and profitable prices
- Marketing Plan – Developing a roadmap for promotions and sales
- Customer Relationship Management (CRM) – Retaining and engaging customers
2. Advertising (Promotion or Advertisement)

Advertising is a marketing strategy focused on spreading awareness about products or services to the public. It includes advertisements, promotional offers, campaigns, and public relations efforts.
Key Advertising Activities:
- Advertisements – TV, social media, digital marketing
- Public Relations – Press releases, media promotions
- Sales Promotions – Discounts, special offers, free trials
- Social Media Campaigns – Facebook, Instagram, YouTube promotions
3. Sales
Sales is the direct process of engaging with customers to persuade them to purchase a product or service. This involves direct interaction, negotiation, and convincing potential buyers to convert into paying customers.
Key Sales Activities:
- Identifying potential customers
- Explaining product benefits
- Negotiating pricing and deals
- Resolving customer doubts
- Finalizing agreements
- Closing sales transactions
How Marketing, Advertising, and Sales Work Together
- Marketing identifies the target audience and introduces the product to them.
- Advertising attracts and engages customers, generating interest.
- Sales converts interested prospects into actual customers, generating revenue.
Example:
If we consider an Online IT Course offered by a training institute:
- Marketing determines the target audience, course curriculum, duration, and potential market opportunities.
- Advertising promotes the course via digital ads, social media, and special offers.
- Sales engages interested students, answers their questions, and convinces them to enroll.
Entrepreneurs and small business owners face various challenges, but overcoming them leads to business success and job creation. Amirda Pvt Ltd is always ready to support and provide solutions to entrepreneurs for their business growth.
K. Pratheeswaran
Founder,
Amirda Pvt Ltd
For more articles visit us Maatram News