இந்தியாவில் வெற்றிலை வள்ளி Modhaga Valli / Air Potato Tuber என்றும் ஆங்கிலத்தில் Air Potato (எயார் பொட்டேட்டோ) எனவும் அழைக்கப்படும் மோதக வள்ளி, எமது இன்றைய தலைமுறை பெரும்பாலும் அறியாமல் இருக்கும் எமது ஓர் பாரம்பரிய கிழங்கு இனமாகும்.
6 மாதங்கள் முன் கிடைத்த, ஓர் விதைக் கிழங்கினை ஓர் மண் சட்டியுள் வைத்து மறந்து போய்விட்டோம். ஒருநாள் தற்செயலாகப் பார்த்த போது கிழங்கின் முளை நன்கு வளர்ந்து 1/2 அடி நீள கொடியாகி இருந்தது. அதனை ஓர் வளர்ப்புப் பையில் நட்டு பந்தல் அமைத்ததால் கடந்த பெருமழை வெள்ளத்தில் தப்பியது.
இதனை பையில் நடுவதாயின் எக்காலத்திலும் நடலாம். ஆயினும் மண்ணில் நடுவதற்கு ஏற்ற காலம் சித்திரை முதல் ஆடி மாதம் ஆகும். மண்கலவை தயார் செய்யும் போது, செம்மண் 40 %, கூட்டுப் பசளை உரம் 40 % மணல் 20 %, ஆகிய மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்யவேண்டும்.
மோதகவள்ளி கிழங்கினை வாங்கி இரண்டு வாரங்கள் ஓர் மண் பானையில் வைத்திருந்தால் சிறிது முளை விட்டிருக்கும். நாம் அதை எடுத்து நேரடியாகவே மண்கலவையில் நடலாம்.
நட்ட இரு வாரங்களில் கிழங்கின் குருத்து வளர்ந்திருப்பதைக் காணமுடியும். சுமார் ஒரு மாதத்தில் இலைகள் வளர ஆரம்பிக்கும், இதன் இலைகள் வெற்றிலை இலை போலவே இருக்கும். 8 வாரங்களில் கொடியின் வளர்ச்சி சுமார் ஏழு அடி வரை இருக்கும். கொடி சுற்றி வளரப் பந்தல் அமைப்பது அல்லது மிலாறு பதித்து விடுவது அவசியமாகும்,
இந்த மோதக வள்ளியை, இலை சுருட்டல் நோய் தாக்கலாம். இதனால் கொடியின் இலைகள் சுருளத் தொடங்கி கொடியின் வளர்ச்சியும் பாதிக்கும். இதை நிவர்த்தி செய்ய, வேர்ட்டிசீலியம் லக்கானி 30 மில்லி / ஒரு லீட்டர் நீருடன் கலந்து தெளித்து வந்தால் ஒன்று- இரண்டு வாரங்களுள் நோய் மாறும்.
நட்டு 3 மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். ஆரம்பத்தில் இவை பச்சை நிறத்தில் இருக்கும், இந்த நிலை அறுவடைக்கு இன்னும் தயாராகவில்லை என்பதைக் குறிக்கும். சுமார் 4 மாதங்களில் காய்கள் பெருத்து உருளை கிழங்கின் நிறத்திற்கு மாறி இருக்கும். இந்த கட்டத்தில் நாம் அறுவடை செய்துகொள்ளலாம்.

இக் கிழங்கு மாச்சத்து, நார்ச்சத்து மற்றும் விட்டமின் பி6 ஆகிய சத்துக்களை கொண்டது.
உருளை கிழங்கில் காணப்படும் வாயுத் தொல்லை அற்றது. இதனால் சிறுவர்களுக்கு உகந்தது. சமிபாடு மற்றும் சிறுநீரக பிரச்சனைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது என அறியப்படுகிறது.
இக்கிழங்கினை அவிக்கும்போது இராச வள்ளி, மரவள்ளி மற்றும் பிடிகிழங்குடன் ஒப்பிடுகையில் சுவை குறைவு எனினும் உருளை கிழங்குக்கு, மாற்றாக கறிகளில் சேர்க்கலாம். பொரித்து மற்றும் பிரட்டல் கறி செய்தும் உண்ண முடியும்.
இதனை எளிமையாக இலகுவாக மற்றும் நஞ்சற்ற முறையில் வீட்டில் வளர்க்கலாம்.
கொடி பட்டுப்போனபின், மண்ணுள் உள்ள தாய்க்கிழங்கில் இருந்து, இரண்டு முதல் மூன்று முறை கொடி முளைக்கும் எனவும், மறுமுறை முளைக்கும் போது, முதல் அறுவடையை விடவும் அதிகளவில் காய்க்கும் எனவும் அறிய முடிகிறது.
CSJ Agri
20/03/2025

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Modhaga Valli / Air Potato Tuber
Known as “Vetrilai Valli” in India and Air Potato in English, Modhaga Valli is a traditional tuber variety that most of today’s generation may not be familiar with.
Six months ago, we obtained a seed tuber and placed it in a soil pot, then forgot about it. One day, we noticed that the tuber’s sprout had grown well, reaching about 1/2 foot in length. We planted it in a grow bag and built a trellis, which helped it survive the recent heavy rains.
This tuber can be planted in a grow bag at any time. However, if planting directly in soil, the best time is Chithirai to Aadi months.
Soil Preparation
Prepare the soil mixture as follows:
- Red soil: 40%
- Compost manure: 40%
- Sand: 20%
Mix well to prepare a fertile soil bed.
If the tuber is kept in a soil pot for two weeks, it will develop small sprouts, which can then be planted directly into the prepared soil mixture.
Within two weeks of planting, the tuber’s stem will begin growing. After about a month, leaves start to appear, resembling pothos leaves. In about eight weeks, the vine can grow up to seven feet. It is important to construct a trellis or provide support for the climbing vine.
Disease Management
Modhaga Valli can be affected by leaf curl disease, which causes the leaves to curl and affects vine growth. To control this, spray Verticillium lecanii at 30 ml per liter of water; the disease should improve within 1–2 weeks.
Harvesting
The tubers begin to mature about three months after planting. Initially, the tubers are green, indicating they are not ready for harvest. Around four months, the tubers enlarge and turn to their mature color, and at this stage, they are ready to be harvested.
Nutritional Benefits
This tuber is rich in starch, fiber, and vitamin B6. Unlike other potatoes, it has no oral issues, making it suitable for children. It is also known for its benefits in treating urinary and kidney-related problems.
Culinary Uses
While the tuber may have a milder taste compared to Raasa Valli, Mara Valli, and Pidi Kilangu, it can be added to curries. It can also be fried or made into stir-fried dishes.
Easy Home Cultivation
Modhaga Valli can be easily grown at home in a safe and non-toxic way. Once the vine has grown, the mother tuber in the soil can produce 2–3 more sprouts, which will yield more tubers than the initial harvest.
Images:
- Modhaga Valli grown in a grow bag at CSJ Agri office premises.
- Harvested and air-fried Modhaga Valli tubers.
CSJ Agri
20/03/2025

