இயற்கை முறையில் களைநாசினி தயாரித்தல் எவ்வாறு என இந்த பதிவின் ஊடாக பார்க்கலாம்.
🍃🍃🍃🍃🍃🍃🍃
இச் செயன்முறை தமிழக இயற்கை விவசாயிகளால் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுவதாக அறியக்கிடைக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் தயாரித்து, பிரயோகித்து, தங்கள் அனுபவத்தைக்கூறுங்கள்.
இயற்கை களைநாசினி தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள்
🍃🍃🍃
10 லீட்டர் மாட்டின் சிறுநீர்
2 கிலோ எருக்கம் இலை
2 கிலோ – கல்உப்பு
அரைக்கிலோ – சுண்ணாம்புக்கல்
(சுண்ணாம்பு பவுடரை சேர்க்கக்கூடாது)
தேவைகேற்ப எலுமிச்சம் பழம்
செய்முறை
🍃🍃🍃
எருக்கம் இலை 2 கிலோவை நன்றாக இடித்து அல்லது மிக்சியில் போட்டு அரைத்து அவற்றை மாட்டின் சிறுநீரில் ஊற விடவும்.
சுண்ணாம்புக் கல்லையும் அவற்றில் போட்டு ஊற விட வேண்டும்.
கல் உப்பை தூளாக்கி அவற்றுடன் கலந்து ஒரு வாரம் வரை ஊற வைக்கவும்.
ஒரு வாரத்தில் இயற்கை களைகொல்லி தயாராகி விடும்.
பயன்படுத்தும் முறை
🍃🍃🍃
களை கொல்லி கரைசல் ஒரு லீட்டர்
9 லீட்டர் தண்ணீர்
என்ற விகிதத்தில் கலந்து
களைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
தெளிக்கும் பொழுது ஒரு எலுமிச்சம்பழத்தின்சாறு கலந்து தெளிக்கவும்
பயன்கள்

🍃🍃🍃
சிறிய களைகள் முதல் பெரிய களைகள் வரை நன்றாக காய்ந்து விடும்
களைக்கொல்லி தெளிக்கும் பொழுது பயிர் நடுகை செய்திருந்தால் அவற்றின் மேல் படாதவாறு தெளிக்க வேண்டும்.
முற்றிலும் இயற்கையான களைகொல்லி.
செலவு குறைவு.
சூழல்நேயமானது.
நன்றி : நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
பயிர்களுக்கு தேவையான நுண்மூலகங்கள் தயாரிப்பது எப்படி?
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Preparing Natural Weedicide
🍃🍃🍃🍃🍃🍃🍃
This method has been successfully practiced by natural farmers in Tamil Nadu.
Those interested may prepare it, try it out, and share their experiences.
Ingredients Required for Natural Weedicide
🍃🍃🍃
- 10 liters of cow urine
- 2 kg of Erukkam (Calotropis) leaves
- 2 kg of rock salt
- ½ kg of lime stone (not lime powder)
- Lemon as required
Preparation Method
🍃🍃🍃
- Crush or grind 2 kg of Erukkam leaves well and soak them in cow urine.
- Add lime stone pieces into the mixture and let them soak.
- Powder the rock salt, add it to the mixture, and let it ferment for about a week.
- After one week, the natural weedicide will be ready for use.
Usage Method
🍃🍃🍃
- Mix 1 liter of the weedicide solution with 9 liters of water.
- Spray thoroughly over the weeds until they are well soaked.
- While spraying, add the juice of one lemon to the mixture before applying.
Benefits
🍃🍃🍃
- Works effectively on both small and large weeds, drying them out.
- Should be sprayed carefully to avoid contact with crop seedlings.
- 100% natural weedicide.
- Low cost.
- Environment-friendly.
Acknowledgment: Water Management and Farm Development